India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை கடற்கரை – தாம்பரம் வரை செல்லும் இரயில்கள், இன்று (நவ.17) பராமரிப்பு காரணமாக பல்லாவரம் இரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படுவதால், பயணிகளின் நலன் கருதி 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
சென்னையில் இன்ப்ளூயன்ஸா A H1N1, இன்ப்ளூயன்ஸா A H1N2, இன்ப்ளூயன்ஸா B, நுரையீரல் தொற்று A & B, கொரோனா வைரஸ், பாரேன்ப்ளூயன்ஸா 1 & 3, அடினோ வைரஸ், ஹியூமன் மெட்டப்நியூமோ வைரஸ் ஆகிய 11 வகையான வைரஸ் பரவி வருகிறது. புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்றால், இந்த பாதிப்பு குணமாகிவிடும். இதை அலட்சியப்படுத்தினால், சில நேரங்களில் பாதிப்பு தீவிரமாக இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஷேர் பண்ணுங்க
எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில், ஆடவருக்கான 14ஆவது தேசிய சீனியர் ஹாக்கி போட்டியின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில், ஒடிசா – ஹரியானா அணிகள் மோதினர். ஒடிசா 5-1 கோல் அடித்து ஹரியானாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. பரிசளிப்பு விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு ஒடிசா அணிக்கு கோப்பையை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
கிண்டி அரசு மருத்துவமனையில் இன்று மாலை ஒரு மணிநேரமாக மின்சாரம் இல்லாததால் நோயாளிகள் அவதி அடைந்தனர். திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தாமதம் ஏற்பட்டது. முதல் தளம் மற்றும் அறுவை சிகிச்சை பிரிவில் மின்சாரம் தடை ஏற்பட்டது. பின்னர் உடனடியாக மின்சாரம் சரிபார்க்கப்பட்டது.
டிஎன் சிட்ஸ் நிதி நிறுவன மோசடியில் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் நவம்பர் 30ஆம் தேதிக்குள் புகார் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்கள், சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு, முதலீடு செய்த ஆவணத்துடன் நேரில் வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த கிரீஷ்(20) மற்றும் ரியாஸ்(18), வீட்டில் மெரினா பீச்சுக்கு செல்வதாக கூறிவிட்டு, நண்பர்களுடன் மாமல்லபுரம் சுற்றுலா வந்துள்ளனர். அங்கு, 5 பேரும் கடலில் குளித்தபோது, கிரிஷ் மற்றும் ரியாஸ் ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டனர். இருவரையும் மாமல்லபுரம் போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீனவர்கள் உதவுயுடன் தேடி வருகின்றனர்.
புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பினர் சென்னை அண்ணா சாலையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலக பின்புறத்தில் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 500க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் பங்கேற்றனர். புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும் எனக் கூறினர்.
சென்னை ஊர்க்காவல் படையில் சேர விரும்புவர்கள் 18-50 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்டவர்கள் 45 நாட்கள் பயிற்சி பெற்று, காவல் நிலையங்களில் பணியிடப்படுவர். ரூ.560 ஊதியம், சீருடை, தொப்பி, ஷூ வழங்கப்படும். விண்ணப்பங்களை சைதாப்பேட்டையில் பெறலாம். மேலும், விவரங்களுக்கு 94981 35190, 95667 76222 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க
சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், வரும் 17ஆம் தேதி மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும். அந்த நாளில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை ரயில் சேவைகள் இயங்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அந்நேரத்தில், கடற்கரை-பல்லாவரம் இடையே பயணிகள் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். செங்கல்பட்டு – காஞ்சிபுரம், செங்கல்பட்டு – அரக்கோணம் பகுதி ரயில்கள் இயங்கும்.
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், படிவம் 6 – புதிய வாக்காளருக்கான படிவம், படிவம் 6A – வெளிநாடு வாழ் வாக்காளருக்கான படிவம், படிவம் 6B – வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்தல், படிவம் 7 – பெயரை நீக்குதல், சேர்க்க, ஆட்சேபனை தெரிவித்தல், படிவம் 8 – முகவரி மாற்றம், வாக்காளர் பட்டியலில் திருத்தம், மாற்று வாக்காளர் அடையாள அட்டை, மாற்றுத் திறனாளிகளுக்கான படிவம் என்று தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.