Chennai

News November 17, 2024

நிலத்தை பதிவு செய்யாவிட்டால் அபராதம்

image

சென்னை ரியல் எஸ்டேட் சட்டப்படி பதிவு செய்யாமல் விற்கப்படும், வீடு, மனைகளுக்கு தலா, ரூ.15,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று ரியல் எஸ்டேட் ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து புதிய உத்தரவுகளையும் பிறப்பித்திருக்கிறது. 5,381 சதுர அடி அல்லது 8 வீடு மனைகள் இருந்தால், அந்த திட்டத்தை ரியல் எஸ்டேட் சட்டப்படி பதிவு செய்வது கட்டாயமாகும். சென்னை மாநகராட்சி பகுதியில் தலா ரூ.15,000 அபராதம் விதிக்கப்படும்.

News November 17, 2024

மறுசுழற்சி குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கலாம்

image

2.0 தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்கள் போன்றவற்றில் இருந்து வெளியேற்றப்படும் மற்றும் அனைத்து வீட்டு உபயோகத் தண்ணீர் மற்றும் கழிவுநீரை சேகரித்து மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து solidwastecorp7@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம்.

News November 17, 2024

மாற்றுத்திறனாளிகள் முகாம் 23ஆம் தேதி வரை நீட்டிப்பு

image

சென்னையில் மாற்றுத்திறனாளி சான்று வழங்குவதற்கான சிறப்பு மருத்துவ முகாமை, வரும் 23ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மன நல மருத்துவமனை, எழும்பூர் குழந்தை நல மருத்துவமனை, எழும்பூர் கண் மருத்துவமனையில் முகாம் நடைபெற்று வருகிறது.

News November 17, 2024

காரில் சென்னை அழைத்து வரப்படுகிறார் நடிகை கஸ்தூரி

image

தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரியை, ஹைதராபாத்தில் போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்துள்ளனர். ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி, வாடகை காரில் சென்னை அழைத்து வரப்படுகிறார். நடிகை கஸ்தூரியை அழைத்து வரும் போலீசார் காலை 10:30 மணி அளவில், சென்னை வந்து சேர்வார்கள் என சென்னை பெருநகர காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 17, 2024

பாடி மேம்பாலம் அருகே லாரி மோதி இருவர் பலி

image

பாடி, கொரட்டூர் அடுத்த அக்ரகாரம் பகுதியை சேர்ந்த பாபு (70) மற்றும் அதேப் பகுதியை சேர்ந்த பாஸ்கர் (43) இருவரும் தனித்தனியே தங்கள் இருசக்கர வாகனத்தில் பாடி மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த ஆவின் பால் வினியோகம் செய்யும் மினி லாரி, இருவர் மீதும் பலமாக மோதியது.  இருவர் மீதும் லாரி ஏறி இறங்கியதால், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியாகினர். லாரி ஓட்டுனர் மாயமானார்.

News November 17, 2024

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் யாரும் தப்பக்கூடாது: பா.ரஞ்சித்

image

BSP கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் யாரும் தப்பக்கூடாது என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். மேலும், 2026 சட்டமன்ற தேர்தலில் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியை வெற்றி பெற வைக்க வேண்டும். யார் யாரோ வெற்றி பெறுகிறார்கள், நாம் ஏன் வெல்ல முடியாது? என ‘காலம் தந்த தலைவர் ஆம்ஸ்ட்ராங்’ புத்தக வெளியீட்டு விழாவில் பேசினார். இதில், வெற்றிமாறன், தெருக்குறள் அறிவு ஆகியோர் கலந்து கொண்டனர்.

News November 17, 2024

பராமரிப்பு பணி: இன்று ஒருநாள் ரயில் சேவை ரத்து

image

சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், வரும் இன்று (நவ.17) மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும். இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை ரயில் சேவைகள் இயங்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அந்நேரத்தில், கடற்கரை – பல்லாவரம் இடையே பயணிகள் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். செங்கல்பட்டு – காஞ்சிபுரம், செங்கல்பட்டு – அரக்கோணம் சாதாரண பகுதி ரயில்கள் இயங்கும்.

News November 17, 2024

அரசு பேருந்து ஏறியதில் முதியவர் உயிரிழப்பு

image

சென்னை அடுத்த கேளம்பாக்கம் பேருந்து நிலையத்தில், அரசுப் பேருந்து ஏறியதில் 55 வயது நபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை பேருந்து நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்த அவர் மீது, மாநகர பேருந்து எதிர்பாராத விதமாக ஏறியது. இதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News November 17, 2024

சம்போ செந்திலின் இருப்பிடத்தை நெருங்கிய போலீஸ்

image

வெளிநாட்டில் இருக்கும் சம்போ செந்திலின் இருப்பிடத்தை தனிப்படை போலீசார் நெருங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் சம்போ செந்தில். சம்போ செந்திலை கைது செய்து சென்னைக்கு அழைத்து வருவோம் என காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 2ஆவது எதிரியாக சம்போ செந்தில் பெயர் சேர்க்கப்பட்டு தற்போது கைது செய்யப்பட உள்ளார்.

News November 17, 2024

சென்னையில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

image

வரும் நவ.19ஆம் தேதி முதல் நவ.21ஆம் தேதி வரை, தமிழகத்தில் உள்ள ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை அதன் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரை, அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!