Chennai

News November 20, 2024

FIBA ஆசிய கோப்பை கூடைப்பந்து போட்டிக்கு அனுமதி இலவசம்

image

நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வரும் நவம்பர் 22 மற்றும் 25 ஆகிய தேதிகளில் FIBA ஆசிய கோப்பை கூடைப்பந்து தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகளை, பொதுமக்கள் இலவசமாக பார்க்கலாம் என்று இந்திய கூடைப்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.

News November 20, 2024

BMW கார் மோதி ரேபிடோ ஊழியர் பலி

image

சென்னையில் BMW சொகுசு கார் மோதிய விபத்தில் ரேபிடோ ஊழியர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரவாயல் – தாம்பரம் நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த சொகுசு கார், டூவீலர் மீது பலமாக மோதியது. இதில், பாண்டி பஜாரைச் சேர்ந்த பிரதீப் குமார் என்ற ரேபிடோ ஊழியர் 100 மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். 1 மணி நேர தேடுதலுக்கு பின், புதரில் இருந்து அவரது உடலை போலீசார் மீட்டனர்.

News November 20, 2024

மெட்ரோ ரயில் திட்டத்தில் புதிய அறிவிப்பு

image

சென்னையில் சுமார் 8 கி.மீ. நீளத்திற்கு அஸ்திவார தூண்கள் அமைக்கும் பணிகள் 100% நிறைவடைந்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில் ‘கட்டம்-II, வழித்தடம் 4இல், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் போரூர் சந்திப்பு நிலையத்திற்கு இடையே உயர்மட்ட வழித்தடத்தில் தூண்கள் அமைக்கும் பணிகளை வெற்றிகரமாக முடித்து அந்நிறுவனம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது” எனத் தெரிவித்துள்ளது.

News November 20, 2024

இன்று ஒரே நாளில் 12 விமானங்கள் ரத்து!

image

சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. பயணிகள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, இன்று ஒரு நாளில் மட்டும் புவனேஸ்வர், கொல்கத்தா, பெங்களூர், திருவனந்தபுரம், சிலிகுரி உள்ளிட்ட 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

News November 20, 2024

இலவச மருத்துவ முகாம்கள்: யூஸ் பண்ணிக்கோங்க

image

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் தினந்தோறும் மாலை சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது.அதேபோல், இன்றும் (நவ.20) சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளன. முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்து மேலே உள்ள புகைப்படத்தில் உள்ளது. மாலை 4:30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாநகராட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News November 20, 2024

வேலை தேடும் இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு

image

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் வரும் நவ.22  தேதி, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த அனைவரும் கலந்து கொள்ளலாம். 20க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. ஷேர் பண்ணுங்க

News November 20, 2024

பன்னாட்டுப் புத்தகத் திருவிழா 2025 அறிவிப்பு

image

சென்னைப் பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவுக்கான (CIBF-2025) அறிவிப்பு, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று வெளியிடப்பட்டது. “தமிழை உலகுக்கும், உலகைத் தமிழுக்கும் எனும் உயரிய இலக்கோடு, 2025ஆம் ஆண்டுக்கான சென்னைப் பன்னாட்டுப் புத்தகத் திருவிழா, வரும் ஜனவரி 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை (2 3 நாட்கள்) சென்னை வர்த்தக மையத்தில் நடத்தப்படவுள்ளது” என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். ஷேர் பண்ணுங்க

News November 20, 2024

சிங்கப்பெருமாள் கோயில் வரை மட்டுமே இயக்கப்படும்

image

சென்னை எழும்பூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தின் சிங்கப்பெருமாள் கோயில் மற்றும் செங்கல்பட்டு ரயில்வே நிலையங்கள் இடையிலான பகுதிகளில் இன்று (நவ.20) முதல் 23ஆம் தேதி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், பிற்பகல் 1.10 மணி முதல் நாளை 4.10 மணி வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் இரயில்கள் சிங்கப்பெருமாள் கோயில் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். ஷேர் பண்ணுங்க

News November 20, 2024

முன்பதிவு செய்து ரூ.10,000 பரிசு வென்ற பயணி

image

சென்னை அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்தில் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகளுக்கு குலுக்கல் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று அண்மையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, மாதாந்திர குலுக்கலில் தேர்வான பயணி சேதுராமன் என்பவருக்கு ரூ.10,000 பரிசுத்தொகையை நேற்று போக்குவரத்து கழகம் சார்பில் வழங்கப்பட்டது. முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

News November 20, 2024

சென்னையில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு

image

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் பணிக்கு செல்வோர் குடை அல்லது ரெயின் கோர்ட்டை எடுத்துச் செல்லுங்கள். தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்கவும் வாய்ப்புள்ளது.

error: Content is protected !!