Chennai

News November 22, 2024

வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்

image

சென்னை மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு, அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் இன்று நடைபெற உள்ளது. மாநகராட்சிப் பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகளின் விற்பனையை ஒழுங்குபடுத்துவதற்காக, Chip பொருத்திய QR Code மற்றும் இணைய இணைப்பு பயன்பாட்டுடன் கூடிய புதிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது. 30ஆம் தேதி வரை அனைத்து மண்டல அலுவலகங்களிலும் இந்த முகாமானது நடைபெற உள்ளது.

News November 22, 2024

பைக் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்து

image

ஓ.எம்.ஆர். சாலை சோழிங்கநல்லூர் பகுதியில், நேற்று சாலையின் எதிர் திசையில் சென்ற இருசக்கர வாகனம் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பைக்கில் சென்ற சோழிங்கநல்லூரைச் சேர்ந்த முருகன் (55), நாகராஜ் (48) ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

News November 22, 2024

சென்னையில் இன்று மின்தடை அறிவிப்பு

image

சென்னையில் இன்று (நவ.22) பல்வேறு இடங்களில் மின் பராமரிப்பு நடைபெற உள்ளது. அதனால், பெரும்பாக்கம், மேடவாக்கம், பள்ளிக்கரணை, பார்க் டவுன், மண்ணடி, திருமுல்லைவாயல், ஈச்சம்பாக்கம், கும்மிடிப்பூண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும். பொதுமக்கள் இந்த அறிவிப்பை ஏற்று, அதற்கேற்றவாறு தங்கள் பணிகளை திட்டமிட்டு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க

News November 22, 2024

சிங்கப் பெண்களை வரவேற்ற துணை முதல்வர்

image

உலக கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் 3 தங்கப் பதக்கங்களை வென்ற சென்னையைச் சேர்ந்த வீராங்கனை காசிமா, 2 தங்கம் வென்ற வி.பி.மித்ரா, ஒரு தங்கம், ஒரு வெள்ளி வென்ற கே.நாகஜோதி ஆகியோரை, துணை முதல்வர் நேற்று நேரில் சந்தித்து வாழ்த்தினார். தொடர்ந்து அவர்கள் பல்வேறு சாதனைகளை படைக்க அனைத்து வகையிலும் அரசு துணை நிற்கும் என்று உறுதி அளித்தார்.

News November 22, 2024

மாதாவரம் சாலையில் லாரி டயரில் சிக்கி மாணவன் உயிரிழப்பு

image

மதுரவாயில் இருந்து புழல் நோக்கி வந்து கொண்டிருந்த கல்லூரி மாணவன் நிலை தடுமாறி விழுந்ததால் லாரியின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். இதைக் கண்ட சக மாணவர்கள் கண்ணீர் மல்க கதறி அழுதனர். காவல்துறையினர் விரைந்து வந்து அந்த மாணவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News November 22, 2024

உலக கடற்கரை கைப்பந்து போட்டி 

image

உலக கடற்கரை கைப்பந்து ப்ரோ சென்னை சேலஞ்ச் 2024-ஐ துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மாமல்லபுரத்தில் துவக்கி வைத்தார். இந்த போட்டியில் 20க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர். மேலும் தமிழகத்தைச் சேர்ந்த 6 வீரர்கள் இந்தியாவுக்காக போட்டியிடுவது எங்களுக்கு பெருமை அளிக்கிறது என்று துணை முதல்வர் தெரிவித்தார்.

News November 21, 2024

புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்கவில்லை

image

வரும் டிச.6ஆம் தேதி தேதி சென்னையில் நடைபெறும் புத்தக வெளியீட்டு விழாவில், விசிக தலைவர் திருமாவளன் மற்றும் த.வெ.க தலைவர் விஜய் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியானது. தற்போது அந்த விழாவில் திருமா பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. “அவர்கள் பாசிசம் என்றால் நீங்கள் பாயாசமா” என்று விஜய் கூறிய பிறகும், ஒரே மேடையை பகிர்ந்து கொண்டால் குழப்பங்களை உருவாக்கும் என்று புறக்கணிப்பதாகக் கூறப்படுகிறது.

News November 21, 2024

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நீதிமன்றத்தில் ஆஜர்

image

நடிகர் தனுஷிடம் விவாகரத்து பெறும் விசாரணைக்காக, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இன்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். விவாகரத்து வழக்கு தொடர்பாக, நடிகர் நடிகர் தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யாவும் மனு அளித்திருந்த நிலையில், தற்போது வழக்கு விசாரணைக்காக ஐஸ்வர்யா நீதிமன்றத்தில் ஆஜரானார். கடந்த 3 விசாரணையின்போதும் இருவருமே ஆஜராகாத நிலையில் இன்று ஐஸ்வர்யா மட்டும் ஆஜரானரது குறிப்பிடத்தக்கது.

News November 21, 2024

சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் தன்னார்வலர்கள் தேவை

image

சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் எழும்பூர், ஜார்ஜ் டவுன் மற்றும் சைதாப்பேட்டை சட்டப்பணிகள் குழுவிற்கு, சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்களாக சேவை புரிய விருப்பமானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் chennai.dcourts.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து நாளைக்குள் (நவ.22) அலுவலக முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யுங்க

News November 21, 2024

சிறு கால்வாய்களை தூர்வாரும் பணி தீவிரம்

image

சென்னையில், அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சிறு கால்வாய்களை தூர்வாரும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, மணலி துளசி நகர் கால்வாயில் காணப்பட்ட வண்டல் கழிவுகள் நேற்று தூர்வாரி அகற்றப்பட்டது. கொடுங்கையூர் கால்வாய் முழுவதும் தேங்கி காணப்பட்ட குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

error: Content is protected !!