Chennai

News November 27, 2024

சென்னையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

image

கனமழை காரணமாக சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் வலுப்பெற்றுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாற வாய்ப்புள்ளது.இதனால் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, மாணவர்கள் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்க

News November 27, 2024

சென்னையில் இன்று இரவு காவல் ரோந்து பணி விவரம்

image

சென்னையில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News November 26, 2024

சென்னை பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

image

சென்னையில் நாளை (நவ.27) பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தொடர்ந்து சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

News November 26, 2024

24 மணிநேரமும் ஆவின்பாலகங்கள் செயல்படும் 

image

சென்னையில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 8 இடங்களில் 24 மணிநேரமும் ஆவின் பாலகங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பத்தூர், அண்ணாநகர், மாதாவரம், வண்ணாந்துறை, பெசன்ட்நகர், அண்ணாநகர் கிழக்கு, சோழிங்கநல்லூர், விருகம்பாக்கம், மயிலாப்பூர் ஆகிய இடங்களில் ஆவின் பாலகம் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 26, 2024

கடற்கரை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்!

image

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இந்நிலையில், நாளை அது புயலாக மாறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நவ.30 வரை நாகை முதல் திருவள்ளூர் வரை கடலில் 9 முதல் 12 அடி உயரத்திற்கு அலைகள் உருவாகவும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். ஷேர் பண்ணுங்க.

News November 26, 2024

கனமழை எச்சரிக்கை – அவசர உதவி எண்கள் அறிவிப்பு

image

தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக நெடுஞ்சாலை துறை சார்பில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மழை பாதிப்பு, நெடுஞ்சாலை துறை சாலைகள் பாதிப்பு தொடர்பாக 9381738585, 9952075411 என்ற வாட்ஸ் அப் எண் மூலம் புகார் அளிக்கலாம் என நெடுஞ்சாலை துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

News November 26, 2024

சென்னையில் 4 நாட்களுக்கு கனமழை தொடரும்

image

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ள நிலையில், நாளை புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 26, 2024

கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

மத்திய கல்வி நிறுவனங்கள், பல்கலை.,களில் பட்ட படிப்பு, பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பி.சி., – எம்.பி.சி., பிரிவைச் சேர்ந்த மாணவ மாணவியர் இதற்கு விண்ணப்பிக்க சென்னை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகி விண்ணப்பிக்கலாம் என சென்னை கலெக்டர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

News November 26, 2024

825 நிழற்குடைகள் ரூ.30 கோடியில் சீரமைப்பு

image

சென்னையில் மாநகராட்சியில் சுமார் 418 கி.மீ. நீளத்துக்கு, 488 பேருந்து தட சாலைகள் உள்ளன. இந்தச் சாலைகளில், 1,265 பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. இவற்றில் 825 நிறுத்தங்களில் பேருந்து நிழற்குடையை சீரமைத்து பராமரிக்க சென்னை மாநகராட்சி டெண்டர் வெளியிட்டு உள்ளது. துருபிடிக்காத உலோக இருக்கைகள், டிஜிட்டல் விளம்பர பலகைகளுடன் அமைத்து பராமரிக்க ரூ.30 கோடி மதிப்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News November 26, 2024

சென்னையில் மழை பெய்து வருகிறது

image

சென்னையில் பல்வேறு இடங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. கிண்டி, சைதாப்பேட்டை, தி.நகர், ராயபுரம், திருவொற்றியூர், மந்தைவெளி, தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி, அடையாறு, பெரம்பூர், வியாசர்பாடி, கோயம்பேடு, MRC நாகர், பட்டினப்பாக்கம், பாரிமுனை, நுங்கம்பாக்கம், ஆலந்தூர், ஈக்காட்டுத்தாங்கல், கோடம்பாக்கம், எழும்பூர், சென்ட்ரல், அசோக் நகர், அமைந்தகரையில் மழை பெய்து வருகிறது. உங்க ஏரியாவில்?

error: Content is protected !!