Chennai

News November 27, 2024

வடதமிழகத்தை நோக்கி நகரும் தாழ்வு மண்டலம்

image

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. புயலாக மாற இன்னும் 12 மணி நேரம் ஆகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் மணிக்கு 3 கிலோ மீட்டர் வேகத்தில் வடதமிழகத்தை நோக்கி நகருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 500 கிலோ மீட்டர் தொலையில் தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News November 27, 2024

ஃபெங்கல் புயல்: உதவி எண்கள் அறிவிப்பு 1/2

image

ஃபெங்கல் புயல் காரணமாக சென்னையில் 39 இடங்களில் சிறு கட்டுப்பாட்டு அறைகள் தொடங்கப்பட்டு உள்ளன. கட்டுப்பாட்டு அறைமூலம் தகவல் பெற்று பொதுமக்களுக்கு உதவ காவல் துறையும் தயார் நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. கீழ்ப்பாக்கம்- 7824867234, 9498103184, 8668050028. திருவல்லிக்கேணி- 63810814931, 9498100042, 9498108089 என்ற எண்ணை அழைக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News November 27, 2024

ஃபெங்கல் புயல்: உதவி எண்கள் அறிவிப்பு 2/2

image

மயிலாப்பூர்- 9498143862, 9940064050, 90003234656, அடையாறு- 8667357501, 9840709921, 9898140144, 7010470498, 9443560480, பரங்கிமலை- 6382256005, 9498131259, 904152710, 9840975591, 7010177676, தி.நகர்- 7858188376, 9841692597, 8148263988, பூக்கடை- 9043442929, 9498142104, 9962542866 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

News November 27, 2024

மின்வாரியம் அறிவித்துள்ள தொடர்பு எண்

image

சென்னைக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், கனமழையின் காரணமாக உங்கள் பகுதியில் மின் கம்பிகள் அறுந்து  விழுந்தால் உடனே மின்வாரியத்தை 9498794987 என்ற எண் மூலம் தொடர்பு கொள்ளலாம் என சென்னை மின்வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், உங்கள் பகுதியில் மின்கம்பிகள் அறுந்து விழுந்துவிட்டால் அதைத் தொட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.

News November 27, 2024

ரூ.8 லட்சம் மோசடி என சின்னத்திரை நடிகை மீது புகார்

image

சென்னை, சூளைமேடு பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் தன்னிடம் ரூ.8 லட்சம் வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாக சின்னத்திரை நடிகை அருணிமா சென்னை அண்ணாநகர் மகளிர் காவல் நிலையத்தில் இன்று காலை புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த அண்ணா நகர் மகளிர் போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எதற்காக ரூ.8 லட்சம் வாங்கினார்? என்ன மாதிரியான மோசடி? என விசாரணை நடைபெற்று வருகிறது.

News November 27, 2024

சென்னைக்கு இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

image

வங்கக்கடலில் வலுப்பெற்றுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாற வாய்ப்புள்ளது என்பதால், சென்னைக்கு இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கும் என்பதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால், மீனவர்கள் படகுகளை பாதுகாப்பாக வைத்து கொள்ளுங்கள்.

News November 27, 2024

காங்கிரசில் இணைந்த தேமுதிகவினர்

image

சென்னை காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில், நேற்று தேமுதிக உறுப்பினர்கள் சிலர் தேமுதிக அவைத்தலைவர் ஆனந்த்ராஜ் தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை (எம்.எல்.ஏ.), முன்னிலையில் காங்கிரஸ் பேரியக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டார்கள். அவர்களுக்கு சால்வை அணிவித்து, உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டு உற்சாகமாக வரவேற்கப்பட்டது.

News November 27, 2024

சென்னைக்கு போக்குவரத்து கழகம் சார்பில் 8,682 பேருந்துகள்

image

சென்னை போக்குவரத்துக் கழகம் சார்பில், கடந்த 2021ஆம் ஆண்டுக்கு பிறகு 8,682 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், கடந்த அக் 31ஆம் தேதி வரை 2,578 புதிய பேருந்துகள் வரப்பெற்று மக்களின் பயன்பாட்டில் உள்ளன என்று போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய தாழ்த்தள பேருந்தால் மாற்றுத்திறனாளிகளும் பயனடைந்துள்ளனர். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

News November 27, 2024

சென்னையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

image

கனமழை காரணமாக சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் வலுப்பெற்றுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாற வாய்ப்புள்ளது.இதனால் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, மாணவர்கள் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்க

News November 27, 2024

சென்னையில் இன்று இரவு காவல் ரோந்து பணி விவரம்

image

சென்னையில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!