India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் நாளை (நவ.30) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நாளை பிற்பகல் மாமல்லபுரம்- காரைக்கால் இடைய கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் IT நிறுவனங்கள் WFH வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகர் பகுதியில் உள்ள 871 பூங்காக்கள் மற்றும் அனைத்து கடற்கரை பகுதிகளும் நாளை ( நவ.30) மூடப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது. நாளை ஃபெஞ்சல் புயல் கரையை கடக்க உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், நாளை அதிகனமழை பெய்யக்கூடும் என்பதால் சென்னைக்கு, வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் நாளை பிற்பகல் மாமல்லபுரம்- காரைக்கால் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், சென்னையில் தரைக்காற்று மணிக்கு 70 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக புயல் கரையை கடக்கும் போது கன மழையுடன் மணிக்கு 90 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் புயல் உருவாகியுள்ள நிலையில், சென்னை அரும்பாக்கம், செயின்ட் தாமஸ் மவுண்ட் மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பார்க்கிங்குகளை பயன்படுத்த வேண்டாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இன்று மாலை முதல் நாளை மாலைவரை இந்த இரண்டு மெட்ரோ ரயில் பார்கிங்குகளில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
சென்னைக்கு நாளை ( நவ.30) அதி கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு ஃபெஞ்சல் என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இது சென்னையில் இருந்து 300 கி.மீ தொலைவில் உள்ளதாகவும், நாளை பிற்பகல் மாமல்லபுரம்- காரைக்கால் இடையே கரையை கடக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த 24 மணி நேரமாக மழை பெய்து வருகிறது. நள்ளிரவு முதல் இன்று காலை வரை பெய்த கனமழையின் காரணமாக, சராசரியாக 3 செ.மீ., வரை மழை பதிவாகியுள்ளது. திருவெற்றியூர் மற்றும் கத்திவாக்கம் பகுதியில் அதிகபட்சமாக 6.2 செ.மீ., வரை மழை பதிவாகியுள்ளது. பேசின் பிரிட்ஜ் பகுதியில் 4.8 செ.மீ., வரை மழை பதிவாகியுள்ளது. மழை அதிகரிக்க கூடும் என்பதால், முன்னெச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்திலிருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த விரைவு ரயில், பெரம்பூர் லோகோ ரயில் நிலையம் அருகே வந்தது. அப்போது பெண் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். போலீசாரின் விசாரணையில் இறந்தவர் அம்பத்தூர் கள்ளிகுப்பம் சீனிவாசநகரைச் சேர்ந்த கேத்தரின் ஷீபா (22) என்பதும், லோகோ மற்றும் கேரேஜ் ரயில் நிலையத்திற்கும் இடையே ரயிலில் அடிபட்டு இறந்துபோனதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
காசிமேடு, எண்ணூர், ராயபுரம், திருவொற்றியூர், புது வண்ணாரப்பேட்டை, பாரிமுனை, திருவல்லிக்கேணி, அடையாறு, திருவான்மியூர், பட்டினப்பாக்கம், பெசன்ட் நகர், சிந்தாதிரிப்பேட்டை, சாந்தோம், அயனாவரம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. உங்க ஏரியாவில்?
*மின் கம்பிகள், மின்சார கம்பங்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் அருகில் செல்ல வேண்டாம். *மின் கம்பங்கள், மின் சாதனங்களுக்கு அருகே தேங்கி நிற்கும் மழைநீரில் செல்ல வேண்டாம். *தாழ்வாக தொங்கி கொண்டிருக்கும் மின்சார ஒயர்கள் அருகில் செல்ல வேண்டாம். *ஈரமான கைகளால் மின் சுவிட்சுகள், மின்சாதன பொருட்களை இயக்க வேண்டாம். *மின் ஒயர் இணைப்புகளை இன்சுலேஷன் டேப் சுற்றி வைக்க வேண்டும். ஷேர் செய்யுங்கள்
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் இன்று (நவ.29) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு முதல் பல இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால், மாணவர்கள் நலன் கருதி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார். மேலும், சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மக்கள் பாதுகாப்பாக இருங்கள். ஷேர் செய்யுங்கள்
Sorry, no posts matched your criteria.