India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வியாசர்பாடி கணேஷபுரம் சுரங்கப்பாதையில் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்ட கொளத்தூரைச் சேர்ந்த இசைவாணன்(24) மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மோட்டார் அறையில் பணியாற்றும் இசைவாணன், மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதுகுறித்து வியாசர்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.
மழைக்கால தொற்று நோயை தடுக்கும் வகையில் சென்னை நாளை மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி நாளை சென்னையில் 200 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
சென்னை புறநகர் ரயில் சேவை குறித்த விவரங்களை கேட்டறிய உதவி எண்களை வெளியிட்டது. Central 044-25354140 & 22277 Egmore – 9003161811, Tambaram – 8610459668, Chengalpattu – 9345962113, Perambur – 9345962147ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வன விலங்கு மீட்பு தொடர்பான உதவிகளுக்கு தொடர்பு எண் அறிவிக்கப்பட்டுள்ளது. உதவிகளுக்கு 044-22200335 என்ற எண்ணில் சென்னை வனஉயிரினக் கோட்ட தலைமையிட (வன உயிரினம்) சரகத்தினை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு குறித்து மழை கட்டுப்பட்டு மையத்தில் நேரில்பார்வையிட்ட துனை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், இன்று மதியம் வரை காற்றின் காரணமாக 27 மரங்கள் விழுந்ததாகவும், அவை அனைத்தும் ஹைட்ராலிக் இயந்திரங்கள் கொண்டு அகற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஃபெஞ்சல் புயல் இன்னும் சற்றுநேரத்தில் கரையைக்கடக்க உள்ள நிலையில், சென்னையில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னைக்குவரவுள்ள 55 விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளது. 19 விமானங்கள் வேறு விமானநிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன. மேலும், நாளை காலை 4 மணிவரை விமனநிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சில் புயல் இன்று கரையை கடக்க உள்ள நிலையில், சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக, சென்னை எழும்பூரில் 13 செ.மீ மழையும், மீனம்பாக்கதில் 10.2 செ.மீ மழையும், நுங்கம்பாக்கத்தில் 9.70 செ.மீ மழையும், நந்தனத்தில் 8.20 செ.மீ மழையும் பெய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் இன்று மாலை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் இருந்து தென்கிழக்கே 100 கி.மீ தொலைவில் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் புயல் நகருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 90 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்துவருகிறது. இந்த நிலையில், பூங்காநகர் பகுதியில் உயர் மின்னழுத்த மின்கம்பிகள் அறுந்துவிழுந்துள்ளது. இதனால் கடற்கரை – தாம்பரம் இருமார்கத்திலும் மின்சார ரயில்சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயலின் காரணமாக, சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் 6 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை, ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை, ரஃபி சுரங்கப்பாதை, பழவந்தாங்கல் சுரங்கப்பாதை, பெரம்பூர் சுரங்கப்பாதை, அஜாக்ஸ் சுரங்கப்பாதை ஆகியவை மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.