India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் பெய்த கனமழையால், அங்காங்கே மழைநீரானது தேங்கி நிற்கிறதால், சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று நடைபெற இருந்த பருவ தெர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுவுள்ளது என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை உட்பட பல மாவட்டங்களில் அதிகனமழை பெய்துள்ளது.மேலும் சென்னையில் உள்ள பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னையில் மழை குறைந்ததால், இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி செல்லும் சோழன் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.புதுச்சேரியில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதிகன மழையால் ரயில்வே பாலத்தின் மீது அதிக அளவு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. தென் மாவட்டத்திலிருந்து சென்னை செல்லும் ஐந்து விரைவு ரயில்கள் நடு வழியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
சென்னையில் ஃபெஞ்சல் புயல் காரணமாக, (நவ.,30) கொட்டி தீர்த்த கனமழையால், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் குளம், சித்திரக்குளம், அகஸ்தீஸ்வரர் பிரசன்ன வெங்கடேச கோயில் குளம், திருப்போரூரில் உள்ள கோயில் குளங்கள் நிரம்பி வழிந்தன. 24.2 லட்சம் கனமீட்டர் கொள்ளளவு கொண்ட வடபழனி ஆண்டவர் கோவில் குளமும் நிரம்பி வழிந்தது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால், ஆங்காங்கே மழைநீரானது தேங்கி நின்று, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாளை நடைபெற இருந்த பருவ தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சென்னை பல்கலை. அறிவித்துள்ளது.
சென்னை புறநகர் பகுதி முழுவதும் உள்ள மக்கள், மழைநீரால் மிகவும் அவதிக்குள்ளாய் வருகின்றனர். இந்த மழையினால் நோய் தொற்றுகள் பரவும் அபாயம் உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ முகாம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்து இருந்தார். அந்த வகையில், இன்று கிண்டி அரசு மருத்துவமுனையில் மருத்துவ முகாமினை மருத்துவமனை மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் தொடங்கி வைக்கிறார்.
ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், சென்னையில் நேற்றிரவு பல இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. அதிகபட்சமாக ஆவடியில் 23.7 செ.மீ., மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம் பகுதிகளில் தலா 11 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது. சென்னையில் சுமார் 500க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் தேங்கியது. அவற்றில் 381 இடங்களில் அகற்றப்பட்டதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. 99 இடங்களில் விழுந்த மரங்கள் முழுமையாக அகற்றப்பட்டன.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஏரிக்கு நீர்வரத்து மாலை 4 மணி அளவில் 4856 கனஅடியாக இருந்த நிலையில் 8 மணி நிலவரப்படி 5610 கனஅடியாக உயர்ந்துள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கனஅடியில் தற்போது 2515 மில்லியன் கன அடியாக நீர்இருப்பு உள்ளது.
சென்னையில் 381 இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதாகவும், 6 சுரங்க பாதைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும், இரவுக்குள் மழைநீரை வடியவைக்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்தது வரும் நிலையில், தற்போது வரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். மண்ணடியில் ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்ற வடமாநில இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து வேளச்சேரியில், அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்ததில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், வியாசர்பாடி பகுதியில் சுரங்கப்பாதையில் நீர் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
Sorry, no posts matched your criteria.