India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் இன்று (09.12.2024) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
கார்த்திகை தீபத் திருவிழா, பௌர்ணமியை ஒட்டி சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு 1,982 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துறை தெரிவித்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு 8,127 பேருந்துகள், வரும் 12ஆம் தேதியில் இருந்து 15ஆம் தேதி வரை இயக்கப்படுவதாகவும் போக்குவரத்துறை அறிவித்துள்ளது.
சென்னையில் மனவளர்ச்சி குன்றிய மாணவி கூட்டுபாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் திருவள்ளூரைச் சேர்ந்த சுப்பிரமணியன், அம்பத்தூரைச் சேர்ந்த கார்த்திக் என்ற மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே திருவள்ளூரைச் சேர்ந்த கல்லூரி மாணவன் நரேஷ், +2 மாணவன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர். கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் 6க்கும் மேற்பட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை புத்தகக் கண்காட்சி, நந்தனம் YMCA மைதானத்தில் வரும் டிச.27ஆம் தேதி முதல் ஜனவரி 12 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தக கண்காட்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஸ் ஆகியோர் துவக்கி வைக்கின்றனர். மொத்தம் 17 நாட்கள் நடக்கும் இந்த புத்தகக் கண்காட்சியில் சுமார் 900 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. மேலும், புத்தகங்களும் 10% தள்ளுபடியில் விற்பனை செய்யப்படவுள்ளன.
பெருநகர சென்னை மாநகராட்சி மக்கள் குடிநீரை ஏதுவாக பெற சென்னை மெட்ரோ குடிநீர் வாரியம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து எளிதாக தண்ணீர் டேங்கர் முன்பதிவு செய்ய குடிநீர் வாரியத்தின் சார்பில் லிங்க் வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் ஒருமுறை முன்பதிவு செய்த பின் ரத்து செய்ய அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. dfw.chennaimetrowater.in/#/index
நவம்பர் மாதத்தில் பயணிகளின் எண்ணிக்கையில் மெட்ரோ ரயில் 8% சரிவை பதிவு செய்திருப்பதால் இந்த ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது. தினசரி பயணிக்கும் சராசரி பயணிகளின் எண்ணிக்கை அக்டோபரில் 2.93 லட்சத்தில் இருந்து நவம்பரில் 2.78 லட்சமாக குறைந்துள்ளது. இந்த வீழ்ச்சிக்கான காரணங்களை அறிய இந்த ஆய்வு உதவும்.கடந்த ஆண்டு இதேபோன்ற ஆய்வை மேற்கொண்டோம் என்றனர்.
சென்னை ஓட்டேரி அருகே ரவுடியை சுட்டுப் பிடித்த போலீசாரால் பரபரப்புஏற்பட்டுள்ளது. ரவுடி ஹரி என்ற ஹரிவழகன் என்பவரை துரத்திப் பிடிக்கும்போது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த காவல் உதவி ஆய்வாளர் பிரேம்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் டிசம்பர் 9 இன்று கொண்டாடப்படுகிறது. இதனை தொடர்ந்து, “சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தில், ஒருமைப்பாடு, நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை வழிநடத்தும் உலகிற்கு உறுதி ஏற்போம்; ஊழலை வேண்டாம் என்று சொல்லுங்கள், நீதி மற்றும் வெளிப்படைத்தன்மைக்கு ஆம் என்று சொல்லுங்கள் “என சென்னை பெருநகர காவல் துறை சார்பில் விழிப்புணர்வு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், திருவண்ணாமலை நிலச்சரிவில் 7 பேர் பலியான விவகாரம் குறித்த கேள்விக்கு ‘ஓ மை காட்’ என வருத்தம் தெரிவித்துள்ளார்.ஜெய்ப்பூரில் நடைபெறும் கூலி படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க செல்கிறேன். கூலி படத்திற்குப் பின் வேறு படம் இல்லை என ரஜினிகாந்த் அப்டேட் தெரிவித்துள்ளார்.
சென்னை காவல்துறை அதிரடியாக நேற்று ஒரே நாளில் பல்வேறு வழக்குகளில் 7 பேரை கைது செய்தனர். அதன்படி, வண்ணாரப்பேட்டை போலீசார், போதைப்பொருள் வைத்திருந்த 3 நபர்கள் கைது செய்து, 2 கிராம் மெத்தம்பெட்டமைன் போதை பொருளை பறிமுதல் செய்தனர், அமைந்தகரை போலீசார், ஆட்டோ ஓட்டுநரின் செல்போனை திருடிச் சென்ற 2 நபர்கள், ஏழுகிணறு போலீசார் கல்லூரி மாணவியிடம் தகராறு செய்து தாக்கிய 2 பேர் உட்பட 7 பேரை கைது செய்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.