India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் தற்போது பலத்த காற்றுடன் ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது. காசிமேடு, ராயபுரம், திருவொற்றியூர், சென்ட்ரல், எழும்பூர், அம்பத்தூர், திருவேற்காடு, பூந்தமல்லி, வானகரம், நுங்கம்பாக்கம், வியாசர்பாடி, பெரம்பூர், சைதாப்பேட்டை, கிண்டி, தேனாம்பேட்டை, அண்ணா நகர், மதுரவாயல், MRC நகர், மந்தைவெளி, ஆலந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காற்று வீசி வருவதோடு, சாரல் மழை பெய்து வருகிறது. உங்க ஏரியாவில் மழையா?
சென்னையில் இன்று (டிச.11) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, தண்டையார்பேட்டை, பாரிமுனை, டி.எச்.ரோடு பகுதி, திடீர் நகர், நாகூரார் தோட்டம், மீன்பிடி துறைமுகம், பூண்டித்தங்கம்மாள் தெரு, ஒத்தவாடை தெரு, ஜீவா நகர், எம்.பி.டி.குடியிருப்பு, பி.விகாலனி, வியாசர்பாடி, எம்.கே.பி. நகர், சத்தியமூர்த்தி நகர், சர்மா நகர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இப்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று இருக்கிறது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மிதமான மழை பெய்யும். இது கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி நகரும்போது, தமிழகத்தில் அந்தந்த இடங்களில் கனமழை பெய்யும். சென்னையில் மிதமான மழையும் சில பகுதிகளில் கனமழையும் பெய்யும். ஷேர் பண்ணுங்க
சென்னையில் இன்று (10.12.2024) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள கவலைகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
சென்னையில் துப்பாக்கி முனையில் தொப்பை கணேசன் என்ற ரவுடியை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த பிரபல தாதாவான டான் சேராவின் கூட்டாளிகளில் மிக முக்கியமான ரவுடியாக இருந்தவர் தொப்பை கணேசன். இவர் மீது 15க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் உள்ள நிலையில் தலைமறைவாக இருந்த அவரை இன்று போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்ற நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னையில் நாளை (டிச.11) மற்றும் நாளை மறுநாள் (டிச.12) கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
வரும் 14ஆம் தேதி மாதவரம் புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் 200க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 20,000க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளன. விருப்பம் உள்ளவர்கள் <
சென்னை மயிலாப்பூரில் உள்ள பறக்கும் ரயில் மேம்பாலத்தின் மேல் இருவருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. மோதல் முற்றியதில் பறக்கும் ரயில் மேம்பாலத்தில் இருந்து ஒருவர் தள்ளிவிடப்பட்டார். மேம்பாலத்தில் இருந்து கீழே தள்ளிவிட்டபோது படுகாயமடைந்த பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த லூயிஸ் பத்தியாஸ் (40) என்பவர் உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக திருவான்மியூர் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற வழக்கறிஞர் மதன் என்பவரை மர்ம கும்பல் வெட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இரு தரப்புக்குள் போதையில் நடந்த சண்டையில் வெட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கறிஞர் மதனை வெட்டி விட்டு தப்பியோடிய கும்பலை கோட்டூர்புரம் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். படுகாயம் அடைந்த வழக்கறிஞர் மதன், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி அனுதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மாங்காடு அருகே வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் ஆட்டோ கவிழ்ந்து 11 மாத குழந்தை உயிரிழந்தது. குழந்தையின் முதல் பிறந்தநாள் வரும் 20ஆம் தேதி வர உள்ள நிலையில், பத்திரிகை வைக்கச் சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. குழந்தையின் தந்தை ஆட்டோ ஓட்டி சென்ற போது நிகழ்ந்த இந்த விபத்தில், குழந்தையின் தாய் மற்றும் தந்தை லேசான காயங்களுடன் உயிர்தப்பினர்.
Sorry, no posts matched your criteria.