India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் இன்று ( டிசம்பர்.13) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் சார்பில் நாளை (டிச.14) தனியார் வேலை வாய்ப்பு முகாம், மாதவரம் புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவிருந்தது. இந்நிலையில், கனமழையின் காரணமாக அந்த முகாம் ஒத்திவைக்கப்படுவதாகவும், முகாம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில், 10 வயது மாற்றுத்திறனாளி சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தனியார் வங்கி ஊழியர் ரஞ்சித் குமாரை வண்ணாரப்பேட்டை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்துள்ளனர். ரஞ்சித்தின் இந்த கொடூர செயலை, சிறுமி சைகை மொழியில் அழுது கொண்டே தாயிடம் கூறிய நிலையில், சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் நாளை (டிச.14) நடைபெற்றது. பெறப்பட்ட விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. வாக்காளர்களின் வசதிக்காக 1.1.2025 என்ற நாளை தகுதி நாளாக கொண்டு, சிறப்பு முகாம்கள் நடத்தபட்டு வருகிறது.
சென்னை முழுவதும் உள்ள 27 சுரங்கப்பாதைகளை கண்காணிக்கும் பணியில் ஊழியா்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். அண்ணா சாலை, காமராஜா் சாலை, ஈ.வெ.ரா.பெரியாா் சாலை, ஆற்காடு சாலை, ராஜாஜி சாலை, 100 அடி சாலை, ECR சாலைகளில் மழைநீா் சூழ்ந்துள்ளது. முக்கியமாக பாரிஸ், மண்ணடி, வியாசா்பாடி, வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூா் பகுதிகளில் தண்ணீா் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. உங்க ஏரியாவில் மழைநீர் தேங்கி இருக்கா?
சென்னையில் இன்று (12.12.2024) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
சென்னையில் 361 இடங்களில் நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும், நிவாரண மையங்களுக்கு உணவு வழங்க 101 சமையல் கூடங்களும், மீட்புப் பணிக்காக 103 படகுகளும் தயார் நிலையில் உள்ளன. தூய்மைப் பணியாளர்கள் உட்பட 22,000 பேர் களப் பணியில் தயாராக இருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
கீழ்ப்பாக்கம்- 7824867234, 9498103184, திருவல்லிக்கேணி – 6381081493, 9498100042, 9498108089, மயிலாப்பூர் – 9498143862, 9940064050, 9003234656, அடையாறு – 8667357501, 9840709921, 9898140144, 7010470498, 9443560480, பரங்கிமலை – 6382256005, 9498131259, 9094152710, 9840975591, தி.நகர் – 7858188376, 9841692597, 8148263988, பூக்கடை – 9043442929, 9498142104, 9962542866 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 5828 கனஅடியாக அதிகரித்துள்ளது. காலை 6 மணிக்கு 713 கனஅடியாக இருந்த நீர்வரத்து, தற்போது 5828 கன அடியாக உயர்ந்துள்ளது. ஏரியின் நீர்மட்டம், மொத்தம் 24 அடியில் 22.11 அடியை எட்டியுள்ளது. இந்நிலையில், அடையாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் ஏரியின் நீர்மட்டம் 23 அடியை எட்டியதும் உபரி நீர் திறக்கப்பட்டு வந்தது.
சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால், மின்கம்பிகள் அறுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதற்காக மின்சார வாரியம் சார்பில், அறுந்து விழுந்த மின் கம்பிகளை கண்டால் உடனே 94987 9498 என்ற எண் மூலம் மின் வாரியத்தை அழைக்கலாம் என அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.