Chennai

News December 15, 2024

சென்னை அவுட்டர் ரிங்ரோடு ஒப்பந்தம்

image

சென்னை: 126 sq.km கொண்ட சென்னையின் அவுட்டர் ரிங் ரோட்டின் மாஸ்டர் பிளான் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தம் பெற்ற நிறுவனம் சென்னை மாநகராட்சி வளர்ச்சி ஆணையத்திடம் அந்த ஒப்பந்தத்தை இந்த மாத இறுதியில் வழங்கும்.10 வழி சாலையாக இந்த சென்னையின் அவுட்டர் ரிங் ரோடு சாலை அமைக்கப்பட உள்ளது. விரிவான திட்ட அறிக்கை (DPR) ஏற்கனவே தயாரிக்கப்பட்டுவிட்டது

News December 15, 2024

அனுமதிச் சீட்டு இருந்தால் மட்டுமே அனுமதி

image

அழைப்புக் கடிதம் இருந்தால் மட்டுமே அதிமுக செயற்குழு, பொதுக்குழுவில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறது. இதனால், பொதுக்குழு அரங்க நுழைவு வாயிலில் அதிமுகவினர் – பவுன்சர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அனுமதிச் சீட்டு இல்லாததால் உள்ளே விட மறுத்ததால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. அதிமுக உட்கட்சித் தேர்தல் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

News December 14, 2024

சென்னையில் இன்று இரவு காவல் ரோந்து பணி விவரம்

image

சென்னையில் இன்று ( டிசம்பர்.14) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News December 14, 2024

சென்னையில் மார்கழியில் மக்களிசை- 2024 

image

மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியை இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் தொடர்ந்து நடத்தி வருகிறது. நாட்டுப்புற இசை, பறை இசை, ராப் இசை என பல்வேறு இசை வகைகளை ஒரே இடத்தில சங்கமிக்கும் நிகழ்ச்சியாக இது உள்ளது. அந்த வகையில் 5வது வருடமாக வரும் டிசம்பர் 27, 28, 29 ஆகிய தேதிகளில் 3 நாட்களுக்கு மயிலாப்பூர் சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. ஷேர் பண்ணுங்க. 

News December 14, 2024

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ராமாபுரத்தில் இறுதிச் சடங்கு

image

ராமாபுரம் மின் மயானத்தில் நாளை பிற்பகல் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்திலும், பின்னர் சத்தியமூர்த்தி பவனிலும் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.

News December 14, 2024

சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை

image

சென்னை உயர்நீதிமன்றத்தில் வி.சி ஹோஸ்ட் டெக்னிக்கல் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 75 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 23ஆம் தேதிக்கு விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். சம்பளம்: ரூ. 30,000. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். <>ஷேர் பண்ணுங்க<<>>

News December 14, 2024

உருவாகிறது புதிய புயல் சின்னம்: கனமழைக்கு வாய்ப்பு

image

அந்தமான் கடலில் இன்று (டிச.14) வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகவுள்ளது. இது வலுபெற்று நாளை (டிச.15) காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். இது மேற்கு – வடமேற்கு திசையில் தமிழக கடலோர பகுதியை நோக்கி நகரும். இதன் காரணமாக டிச.16 – டிச.18 வரை சென்னை உள்பட வடகடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவா் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

News December 13, 2024

சென்னையில் இன்று இரவு காவல் ரோந்து பணி விவரம்

image

சென்னையில் இன்று ( டிசம்பர்.13) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News December 13, 2024

சென்னையில் வேலை வாய்ப்பு முகாம் ஒத்திவைப்பு

image

சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் சார்பில் நாளை (டிச.14) தனியார் வேலை வாய்ப்பு முகாம், மாதவரம் புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவிருந்தது. இந்நிலையில், கனமழையின் காரணமாக அந்த முகாம் ஒத்திவைக்கப்படுவதாகவும், முகாம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க. 

News December 13, 2024

மாற்றுத்திறனாளி சிறுமியிடம் பாலியல் சீண்டல்

image

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில், 10 வயது மாற்றுத்திறனாளி சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தனியார் வங்கி ஊழியர் ரஞ்சித் குமாரை வண்ணாரப்பேட்டை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்துள்ளனர். ரஞ்சித்தின் இந்த கொடூர செயலை, சிறுமி சைகை மொழியில் அழுது கொண்டே தாயிடம் கூறிய நிலையில், சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர்  போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

error: Content is protected !!