Chennai

News December 21, 2024

புதுசா மாறப் போகும் பூங்காக்கள்

image

சென்னையில் உள்ள 800 பூங்காக்களில், முதல்கட்டமாக 585 பூங்காக்களை தனியார் வசம் ஒப்படைத்து தூய்மைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.45 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.3 ஆண்டுகள் ஒப்பந்தம். பச்சை பசேல் என புல் தரை, குழந்தைகள் விளையாடி மகிழும் உபகரணங்கள், ஒவ்வொரு பூங்காவிற்கும் ஒரு பாதுகாவலர், 25 பூங்காக்களுக்கு ஒரு மேற்பார்வையாளரை நியமிக்க வேண்டும் என அனைத்து பூங்காக்கள் வேற லெவலில் மாறப்போகுது.

News December 20, 2024

சென்னையில் காவலர்களின் ரோந்து விவரம்

image

சென்னை பெருநகர காவல் துறையினர், நாள்தோறும் இரவில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதன்படி இன்று இரவு நேர காவலர்களின் விவரம். செங்குன்றம் பகுதியில் பாஸ்கரன் (8667845090), அம்பத்தூர் பகுதி பணியில் கீதா (9498129354), எண்ணூர் பகுதியில் சாந்தி (9551099432), மணலி பகுதி பணியில் இந்திராணி (9498132903) ஆகியோர் இந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அவசரம் என்றால் அழைக்கவும்.

News December 20, 2024

சென்னை: ரவுடிகளின் சொத்து விவரம் சேகரிப்பு

image

ரவுடிகள் சொத்து மற்றும் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு வருகின்றன. சந்தேகத்திற்குரிய 41 ரவுடிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடக்கிறது. ரவுடிகள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் உள்ள சொத்து ஆவணங்களை சரிபார்க்க, காவல் துறை சார்பில் வருவாய் துறையினருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. கண்காணிப்பு பணியில் வரும் டி.எஸ்.பி.,க்கள் வாயிலாக கடிதம் வருவதாக கூறப்படுகிறது.

News December 20, 2024

சென்னை அருகே 5 பேருக்கு கத்திக்குத்து 

image

சென்னை அம்பத்தூரில் நள்ளிரவில் கஞ்சா போதையில் 5 பேரை மர்ம கும்பல் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இரு சக்கர வாகனங்களில் வந்த 3 பேர் வட மாநில இளைஞர்களை தாக்கியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில், வட மாநிலத்தை சேர்ந்தவர்களை தாக்கிய நபர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

News December 20, 2024

17 வயது பெண் 5 மாத கர்ப்பம் – 5 பேர் மீது வழக்குப் பதிவு!

image

அயனாவரத்தைச் சேர்ந்த 17 வயது பெண், ஐந்து மாத கர்ப்பமாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக வந்தார். 2023ல் இருவீட்டாரின் சம்மதத்தில் அஜித் குமார் (28) என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. 18 வயதிற்குள் திருமணம் செய்து வைத்த பெண்ணின் பெற்றோர் மகேந்திரன் – மீனாட்சி, மாமனார் எமராஜா, மாமியார் மஞ்சுளா, கணவர் அஜித் குமார் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து அயனாவரம் போலீசார் விசாரணை.

News December 20, 2024

சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்க்கும் கனமழை

image

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு முதல் மழை பெய்து வருகிறது. ராயபுரம், காசிமேடு, திருவொற்றியூர், மணலி, பழைய மற்றும் புது வண்ணாரப்பேட்டை, வியாசர்பாடி, அயனாவரம், அசோக் நகர், பெரம்பூர், கிண்டி, சைதாப்பேட்டை, திருவல்லிக்கேணி, கொடுங்கையூர், அடையாறு, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட பல பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. உங்க ஏரியாவில் மழை பெய்யுதா?

News December 20, 2024

ஐஐடி வளாகத்தைப் பார்வையிட பொதுமக்களுக்கு அழைப்பு

image

சென்னை ஐஐடி என்ற சிறப்பு திட்டத்தின்கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஐஐடி வளாகத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் 2025ஆம் ஆண்டு ஜனவரி 3,4ஆகிய தேதிகளில் ஐஐடி வளாகத்தைப் பொதுமக்கள் பார்வையிடலாம் என ஐஐடி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஐஐடியில் இயங்கி வரும் 4 தேசிய ஆராய்ச்சி மையங்கள், 11 ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆராய்ச்சி திட்டப்பணிகளை எடுத்துரைக்கும் 60க்கும் மேற்பட்ட அரங்குகளை பார்வையிடலாம்.

News December 20, 2024

மயானபூமிகளை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

image

மேயர் பிரியா தலைமையில், பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள மயானபூமிகளை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை மேயர் மகேஷ்குமார், ஆணையாளர் குமரகுருபரன், கூடுதல் ஆணையாளர் ஜெய சந்திர பானு ரெட்டி, துணை ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

News December 20, 2024

சென்னை சர்வதேச திரைப்​பட​ நிறைவு விழா

image

சத்யம் திரையரங்கில் தமிழக அரசின் நிதி​யுதவி​யுடன் இந்திய திரைப்பட திறனாய்வு கழகம் சார்​பில் 22ஆவது சென்னை சர்வதேச திரைப்​பட​ நிறைவு விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா தொடங்கியது. திரைப்​படத்​துறை ஆளு​மை​களின் கருத்​தரங்​கம், பயிற்சி வகுப்புகள், கலந்​துரை​யாடல் உள்​ளிட்​ட​வை​யும் ஏற்​பாடு செய்​யப்​பட்​டன.

News December 19, 2024

“மத்திய அமைச்சர் அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்”

image

மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, மயிலாப்பூரில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் பின் பேசிய எம்.எல்.ஏ. மயிலை வேலு, “அம்பேத்கரை இழிவுபடுத்தும் விதமாக மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியது கண்டிக்கத்தக்கது. மக்கள் நலனுக்காக பாடுபடுபவர் எண்ணம் எப்படி இருக்கும் என்று தமிழக முதல்வர் தெளிவுபடுத்திவிட்டார். அமித்ஷா அந்த சொல்லை வாபஸ் பெற வேண்டும். மத்திய அமைச்சர் அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.

error: Content is protected !!