Chennai

News December 23, 2024

கீழ்ப்பாக்கத்தில் 5 பைக்குகளுக்கு தீ வைத்த ஆசாமி கைது

image

சென்னை கீழ்ப்பாக்கத்தில் வினோத் (44) என்பவரின் வீட்டில் வசித்துவரும் நடராஜ் (65) வீட்டை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறு காரணமாக இரவில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 இருசக்கர வாகனங்களை தீ வைத்துக் கொளுத்தியுள்ளார். தகவல் அறிந்த டி.பி.சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டு, நடராஜை கைது செய்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  

News December 23, 2024

அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர் பணிக்கு ஆட்கள் தேர்வு

image

அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனை முகவர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும், 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். தகுதி உள்ளவர்கள் வரும் ஜனவரி 4ஆம் தேதி சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தில் காலை 10:30 மணிக்கு நடைபெற உள்ள நேர்காணலில் பங்கேற்கலாம் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. ஷேர் செய்யுங்கள்

News December 23, 2024

வடகிழக்கு பருவமழை சிறப்பு மருத்துவ முகாம்

image

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், வடகிழக்கு பருவமழைக்கான சிறப்பு மருத்துவ முகாம் இன்று பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளது. ஜில்லடையான் பேட்டை, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், உள்ளகரம், பெருங்குடி, கொட்டிவாக்கம், தரமணி, பெசன்ட் நகர், அடையார், மேற்கு மாம்பலம், அசோக் நகர், விருகம்பாக்கம் போன்ற இடங்களில் நடைபெற உள்ளது. பொதுமக்கள், இந்த மருத்துவ முகாமை பயன்படுத்திக் கொள்ளவும். ஷேர் பண்ணுங்க

News December 23, 2024

எண்ணூர் துறைமுகத்தில் 3ஆம் எண் கூண்டு ஏற்றம்

image

வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவி வருவதால், சென்னை எண்ணூர் துறைமுகத்தில் 3ஆம் எண் எச்சரிக்கை புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இன்று (டிச.23) லேசானது முதல் மிதமான மழை, நாளை (டிச.24) இடி, மின்னலுடன் மழை, டிச.25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஷேர் பண்ணுங்க

News December 23, 2024

ஐகோர்ட்டில் வேலை: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

image

சென்னை உயர்நீதிமன்றத்தில், வி.சிஹோஸ்ட் டெக்னிக்கல் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 75 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சாரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இன்றைக்குள் <>www.mhc.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு – 35. சம்பளம் – ரூ.30,000. ஷேர் செய்யுங்கள்.

News December 23, 2024

20 அடி உயரத்திற்கு தூக்கி வீசப்பட்டு இளைஞர்கள் பலி

image

கேரளவைச் சேர்ந்த விஷ்ணு, பம்மலைச் சேர்ந்த கோகுல் இருவரும், நேற்று (டிச.22) பைக்கில் மது வங்கிவிட்டு பின் வேளச்சேரி சாலை வழியாக வந்து கொண்டிருந்தனர். அப்போது கட்டுபாட்டை இழந்த பைக் சென்டர் மீடியனில் மோதி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். விஷ்ணுவிற்கு நெஞ்சுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தர். கோகுல் 20 அடி உயரத்திற்கு தூக்கி வீசப்பட்டு, மின்கம்பத்தில் மோதியதில் தலை துண்டாகி உயிரிழந்தார்.

News December 22, 2024

சென்னையில் இன்று இரவு காவல் ரோந்து பணி விவரம்

image

சென்னையில் இன்று (டிச. 22) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News December 22, 2024

சென்னை உணவுத் திருவிழாவில் Beef விற்பனை

image

சென்னை மெரினாவில் நடைபெறும் உணவு திருவிழாவில், 17ஆம் நம்பர் ஸ்டாலில் Beef கிரேவி, Beef சுக்கா விற்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. Beef புறக்கணிக்கப்படுவதாக நீலம் பண்பாட்டு மையம் குற்றம்சாட்டிய நிலையில், தற்போது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் சென்னை மெரினா உணவு திருவிழாவில் Beef  விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்துள்ளது.

News December 22, 2024

மாட்டிறைச்சி புறக்கணிப்பு ஏன்?- பா.ரஞ்சித் 

image

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் உணவுத் திருவிழாவில், மாட்டிறைச்சியை மட்டும் புறக்கணிக்க வேண்டிய அவசியம் என்ன?. பெருமளவிலான மக்கள் பீப் சாப்பிட கூடியவர்கள். ஆனால், திட்டமிட்டே ஓர் உணவை புறக்கணிக்கப்படுவதை நீலம் பண்பாட்டு மையம் வன்மையாகக் கண்டிக்கிறது என இயக்குநர் பா. ரஞ்சித் தனது X  தளத்தில் பதிவிட்டுள்ளார்.

News December 22, 2024

சென்னையில் ஆண்கள் கருத்தடை முகாம் தோல்வி

image

சென்னையில் கடந்த நவ.28ஆம் தேதி முதல் டிச.4ஆம் தேதி வரை ஆண்களுக்கான கருத்தடை முகாம் நடத்தப்பட்டது. 15 மண்டலங்களில் நடைபெற்ற முகாம்களில் 59 பேர் மட்டுமே கலந்துகொண்டனர். லட்சக் கணக்கான ஆண்கள் வசிக்கும் ஒரு நகரில் 100 பேர் கூட பங்கேற்காத இந்த முகாம் தோல்வியில் முடிந்ததாகவே மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், பெரும்பாலான பெண்கள், தங்கள் கணவருக்கு பதிலாக தாங்கள் கருத்தடை செய்துகொள்வதாக கூறுகிறார்களாம். 

error: Content is protected !!