Chennai

News February 25, 2026

அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனையில் அனுமதி

image

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வைரல் காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 3 நாட்களாக காய்ச்சல் இருந்து வந்ததால், இன்று மருத்துவ பரிசோதனைக்காக சேர்க்கப்பட்டார். அமைச்சர் நலமுடன் இருப்பதாகவும், நாளை மாலை வீடு திரும்புவார் என கூறப்பட்டுள்ளது.

News February 24, 2026

சென்னை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

சென்னை மாவட்டத்தில் இன்று (பிப்.24) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News February 24, 2026

சென்னையில் கொடூரத்தின் உச்சம்!

image

சென்னை முகப்பேர் ஜே.ஜே. நகர் பகுதியில் 54 வயது பெண் ஒருவர் யாசகம் பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், ஷேக் (26) என்ற இளைஞர், மதுபோதையில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அந்த பெண் கூச்சலிட முயல, அவரை ஷேக் அடித்து கொலை செய்து, பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு உடலை இருட்டான பகுதியில் வீசிவிட்டு சென்றுள்ளார். அவரை கைது செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News February 24, 2026

சென்னை வருகிறார் பிரதமர் மோடி!

image

தமிழ்நாடு தேர்தலுக்காக பிரதமர் நரேந்திர மோடி வருகிற 28ம் தேதி இரவு டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வருகிறார். அன்று இரவு நட்சத்திர விடுதியில் தங்குகிறார். மார்ச் 1ம் தேதி காலை ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி சென்று அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர் தஞ்சாவூர் வழியாக மதுரை சென்று பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, திருப்பரங்குன்றம் கோயிலில் தரிசனம் செய்த பின் மாலை டெல்லி புறப்படுகிறார்.

News February 24, 2026

சென்னை: இனி உங்களுக்கு அலைச்சல் இல்லை!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். ▶️பான்கார்டு: NSDL ▶️வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in ▶️ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ ▶️பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. இந்த <>இணையதளங்களில்<<>> விண்ணப்பியுங்க. ஷேர் பண்ணுங்க!

News February 24, 2026

சென்னை: புது ரேஷன் கார்டு வேண்டுமா? ஒரு கிளிக் போதும்!

image

சென்னை மக்களே, புது ரேஷன் கார்டு வேணுமா? இதற்கு நீங்க ஆபீஸ் ஆபீஸாக அலைய வேண்டாம். உங்க போனிலே விண்ணப்பிக்கலாம். இங்கு <>க்ளிக் <<>>செய்து உங்கள் மொபைல் எண் பதிவிட்டு Duplicate/Reprint விருப்பத்தை தேர்வு செய்து, தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்கவும். அவ்வளவு தான் உங்க புது ரேஷன் கார்டு உங்க வீட்டுக்கே வந்துவிடும். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News February 24, 2026

FLASH – சென்னையில் கொடூரத்தின் உச்சம்!

image

சென்னை முகப்பேர் ஜே.ஜே. நகர் பகுதியில் 54 வயது பெண் ஒருவர் யாசகம் பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், ஷேக் (26) என்ற இளைஞர், மதுபோதையில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அந்த பெண் கூச்சலிட முயல, அவரை ஷேக் அடித்து கொலை செய்து, பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு உடலை இருட்டான பகுதியில் வீசிவிட்டு சென்றுள்ளார். அவரை கைது செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News February 24, 2026

சென்னை: வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இல்லையா?

image

சென்னை வாக்காளர்களே, தமிழ்நாட்டில் நேற்று வெளியான இறுதி வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் மிஸ் ஆகியிருக்கா? நோ டென்ஷன்! வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையென்றால், விடுபட்ட நபர்களின் பெயர்களை சேர்க்க தேர்தல் ஆணையம் 15 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது. இந்த <>லிங்கில் க்ளிக் <<>>செய்து, உங்கள் பெயரை சேர்க்கலாம். தகவலுக்கு 180042521950 அழைக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News February 24, 2026

26ம் தேதி அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை

image

அதிமுக – பாஜக இடையே தொகுதி பங்கீடு குறித்த வாய்மொழி பேச்சுவார்த்தை நிறைவு பெற்றுள்ளது. அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நாளை மறுநாள் (26ம் தேதி) சென்னையில் நடைபெற உள்ளது. பாஜக தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் சென்னை வரவுள்ள நிலையில், அவரின் முன்னிலையில் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. பேச்சுவார்த்தை நிறைவடைந்த உடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வாய்ப்பு உள்ளது.

News February 24, 2026

சென்னை: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, 2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500, 3) ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, 4) குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, 5) முதியோருக்கான அவசர உதவி -1253, 6) தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, 7) பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. *மற்றவர்களுக்கும் உதவியாக அமைய இதனை ஷேர் பண்ணுங்க*

error: Content is protected !!