India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிக்கை: சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து வரும் 27ம் தேதி (வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த உள்ளன. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகின்றன.
சென்னையில் இருந்து ஒடிசா மாநிலம், புவனேஸ்வர் இடையே, தினசரி மூன்றாவது விமான சேவையை, ஜன.,14 முதல் இண்டிகோ நிறுவனம் துவங்க உள்ளது. இதன்படி, சென்னையில் இருந்து தினசரி காலை 8:30 மணிக்கு புறப்படும் விமானம் காலை 10:20 மணிக்கு புவனேஷ்வர் சென்றடையும். புவனேஸ்வரிலிருந்து காலை 11:00 மணிக்கு புறப்படும் விமானம் பகல் 12:40 மணிக்கு சென்னை வந்தடையும்.சென்னை- புவனேஸ்வர் இடையே மொத்தம்,5 விமான சேவை இயக்கப்படுகிறது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்படி, பொதுமக்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்கு 8,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவாலயங்களுக்கு சென்று சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்வதால், 24.12.24 அன்று இரவு முதல் 25.12.24 வரை சுமார் 350 தேவாலயங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்றார் ஆணையாளர்.
சென்னையில் இன்று (டிச. 24) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
திருமணம் செய்வதாக ஏமாற்றி, சென்னை பெண் இன்ஜினீயர் உள்பட 10க்கும் மேற்பட்ட இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், ஆபாச போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து அவற்றை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி பணம், நகைகளை பறித்த நபரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த திருவாவடுதுறையைச் சேர்ந்தவர் ஜாகிர்ஹூசைன் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை கொளத்தூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்று, தரைதளம் மற்றும் முதல் தளத்திற்கு மட்டுமே அனுமதி பெற்றிருந்த நிலையில், அனுமதியின்றி தரைதளம் மற்றும் 3 மேலதிக தளங்களை கட்டியுள்ளது. இதுதொடர்பாக பள்ளி நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. விதிமீறலுக்கு எதிராக, பள்ளிகள், தேவாலயங்கள், கோயில்களுக்கு இரக்கம் காட்ட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. ராயபுரம், எண்ணூர், திருவொற்றியூர், பழைய & புது வண்ணாரப்பேட்டை, மணலி, கொடுங்கையூர், மாதவரம், அயனாவரம், கிண்டி, LIC, சைதாப்பேட்டை, தி.நகர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, சேப்பாக்கம், வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் பணிக்கு செல்வோர் மழையில் நனைந்தபடி சென்றனர். உங்க ஏரியாவில்?
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விமான நிலையம் – விம்கோ நகர் இடையே 18 நிமிடங்களுக்கு ஒரு முறையும், விம்கோ நகர் – விமான நிலையம் இடையே 6 நிமிடங்களுக்கு ஒரு முறையும், டோல்கேட் – விம்கோ நகர் இடையே 6 நிமிடங்களுக்கு ஒரு முறையும், சென்ட்ரல் – விமான நிலையம் இடையே 7 நிமிடங்களுக்கு ஒரு முறையும் ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தென்மேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு ஆந்திர மற்றும் வடதமிழக கடலோரப் பகுதிகளில் நிலவுகிறது. இது, இன்று தெற்கு ஆந்திரா மற்றும் வடதமிழகக் கரையை நெருங்கி வரக்கூடும். இதனால், இன்று சென்னை உள்ளிட்ட வடதமிழக கடலோரப் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் இன்று (23.12.2024) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள கவலைகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
Sorry, no posts matched your criteria.