Chennai

News December 27, 2024

சென்னையில் இன்று இரவு காவல் ரோந்து பணி விவரம்

image

சென்னையில் இன்று (டிச.27) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News December 27, 2024

சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு 

image

அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 6 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த இரு நாட்களுக்கு லேசான மழையும், காலையில் பனிமூட்டம் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

News December 27, 2024

சென்னை காவல் துறை அறிவிப்பு 

image

சென்னை பெருநகர காவல் துறை சென்னை பெண்களின் பொது நலனை கருத்தில் கொண்டு பல்வேறு விழிப்புணர்வுகள் செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக காவல் உதவி என்ற செயலியை சென்னை பெருநகர காவல் துறை அறிமுகம் செய்துள்ளது. மேலும் உதவி தேவைப்படும் பெண்களுக்கு 100 அல்லது 1091 என்ற எண்ணை அழைக்கலாம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 27, 2024

சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

image

முதல் தகவல் அறிக்கை வெளியானதற்கு யார் பொறுப்பு? வழக்கு பதிவு செய்துள்ளீர்கள் என்றால் அது எப்படி வெளியானது? காவல்துறை ஆணையர் விசாரணை நடந்துகொண்டிருக்கும் நிலையில், ஒருவர் குற்றவாளிதான் என எப்படி முடிவுக்கு வந்தீர்கள்? அரசு அதிகாரிகள் நடத்தை விதிகளில் பத்திரிகையாளர்களை சந்திக்கும் முன் அரசு அனுமதியை காவல் ஆணையர் பெற்றாரா? உள்ளிட்ட பல கேள்விகளை பாலியல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற முன்வைத்துள்ளது. 

News December 27, 2024

அடையாள அட்டை இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதி

image

அண்ணா பல்கலை., மாணவி பாலியல் துன்புறுத்தல் விவகாரம் எதிரொலியாக, பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவர்கள், ஊழியர்கள் அடையாள அட்டை அணிந்து வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு குறித்து பெற்றோர்களிடம் ஆலோசனை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் – மாணவிகள் இடையே கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

News December 27, 2024

கால்வாயில் மினி பேருந்து கவிழ்ந்து விபத்து

image

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில், கழிவுநீர் கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மினி பேருந்து கவிழ்ந்து இன்று காலை விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்து கவிழ்ந்த விபத்தில், 4 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேருந்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News December 27, 2024

சத்யபிரியா கொலை வழக்கில் இன்று தீர்ப்பு

image

பரங்கிமலை ரயில் நிலையத்தில் சத்யபிரியா என்ற பெண்ணை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கில் இன்று மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. கடந்த 2022ஆம் ஆண்டு நடந்த இந்த கொடூர கொலை, பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மகள் இறந்த துயரத்தை ஏற்க முடியாத தந்தை அன்றே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். சிபிசிஐடி காவல்துறை தரப்பில் 70 சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டு, அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன.

News December 27, 2024

அதிமுக, பாஜக கட்சியினர் 1,500 பேர் கைது

image

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், பொறியியல் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சென்னையில் நேற்று (டிச.26) ஆர்ப்பாட்டம் நடத்திய அதிமுக, பாஜக கட்சியினர் 1,500 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் கிண்டி சாலை பகுதியில் பரபரப்பு நிலவியதோடு, கடும் போக்குவரத்து நேரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

News December 26, 2024

சென்னையில் இன்று இரவு காவல் ரோந்து பணி விவரம்

image

சென்னையில் இன்று (டிச.26) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News December 26, 2024

பிசாசுவை விரட்டுவதாக பாலியல் தொல்லை; சர்ச் ஃபாதர் கைது

image

மைலாப்பூரில் உடலில் பிசாசு புகுந்து இருப்பதாகவும், அதனை விரட்ட தனது வீட்டுக்கு வரும்படியும் 26 வயது இளம் பெண்ணிடம் கூறி அப்பெண்ணிடம் கெனிட் ராஜ்(50) என்ற சர்ச் ஃபாதர் பாலியல் தொல்லை கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் மைலாப்பூர் அனைத்து காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், கத்தோலிக்க சர்ச் ஃபாதர் கெனிட் ராஜை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

error: Content is protected !!