India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 23 ஆம் தேதி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், அமைச்சர் கோவி செழியன் மாணவிகள் அனைவரும் காவலன் செயலியை பயன்படுத்த வேண்டும் எனக் கூறினார். இதனையடுத்து, இன்று அண்ணா பல்கலைக்கழக நுழைவாயிலில் காவலன் செயலியை பதிவிறக்கம் செய்வதற்கான QR கோடு ஒட்டப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் நேரில் சென்று விசாரணையை தொடங்கி உள்ளது. தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி மற்றும் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் தீக்சித் ஆகியோர் டெல்லியிருந்து நேற்று இரவு சென்னை வந்துள்ளனர். மேலும் மாணவிகளை அச்சுறுத்தும் வகையில் பாதுகாப்பு குறைபாடாக இருப்பது குறித்து ஆணையத்தின் உறுப்பினர்கள் ஆய்வு செய்ய உள்ளனர்.
சென்னை வடபழனி முருகன் கோவிலுக்கு நள்ளிரவு 12.15 மணியளவில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து, அதிகாலை கோவில் நடை திறந்த பின் சோதனை செய்ததில் வெறும் புரளி என உறுதி செய்யப்பட்டது. காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர். தொடர்ந்து கோவிலில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஜன.2ஆம் தேதி சென்னை செம்மொழி பூங்காவில் மலர்க் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தோட்டக் கலைத்துறையில் இருந்து சுமார் 30 லட்சம் மலர்கள் இக்காட்சிக்கு கொண்டு வரப்படுகின்றன. கண்காட்சி தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மக்களுக்கு திறந்திருக்கும் எனவும், கண்காட்சியை ஜன.18ஆம் தேதி வரை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்புக்காக பயணிகள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தாம்பரம் – திருநெல்வேலி வழித்தடம் உட்பட்ட பகுதிகளில் 5 சிறப்பு ரயில்களை இயக்க, தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்கான விரைவில் அறிவிப்பு வெளியாகும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதால், அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும், நகரின் அதிகபட்ச வெப்பநிலையானது 30 – 31 டிகிரி செல்சியசையொட்டி இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, வெளியே செல்லும் கதகதப்பான ஆடைகளை அணிந்து செல்லுங்கள்.
ஐடி கம்பெனியில் பணியாற்றிய பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில், நாம் தமிழர் கட்சி பாசறை பிரிவில் நிர்வாகியாக இருக்கும் சக்திவேலை கிண்டி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர். கடனாக பணத்தை கொடுத்து பின்னர் பணம் குறிப்பிட்ட நேரத்தில் தரவில்லை என்றால் அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
1983-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு உதயம் திரையரங்கம், சென்னையில் மிக வெற்றிகரமாக செயல்பட்ட பெரிய திரையரங்கங்களில் ஒன்று. மல்டிப்ளெக்ஸ் தியேட்டர்கள் பெரியளவில் கால் பதிக்காத காலக்கட்டத்தில், ரசிகர்களின் விருப்ப திரையரங்கங்களில் ஒன்றாக உதயம் திகழ்ந்தது. 90-களுக்குப் பிறகு இந்த திரையரங்கம் விஜய், அஜித் ரசிகர்களின் கோட்டையாக மாறியது. பல படங்கள் இங்கு வெள்ளி விழா கண்டது குறிப்பிடத்தக்கது. ஷேர் பண்ணுங்க
உதயம் திரையரங்கம் நிரந்தரமாக மூடப்பட்டது. திரையரங்க கட்டிடம் இடிக்கப்பட்டு, அடுக்குமாடி குடியிருப்பு வரவுள்ளது. இதற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. உதயம் திரையரங்குகள் செயல்படாதது, ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் பெரும் சோகத்தை உருவாக்கி இருக்கிறது. 1983ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திரையரங்கம், சென்னையில் மிக வெற்றிகரமாக செயல்பட்ட பெரிய திரையரங்கங்களில் ஒன்று.
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, டிச.31 மாலை முதல் ஜன.1ஆம் தேதி வரை பொதுமக்கள் கடலில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி இல்லை. மெரினா, சாந்தோம், எலியட்ஸ் மற்றும் நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் காவலர்கள், குதிரைப்படைகள் மற்றும் ATV வாகனங்கள் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். எனவே, குடித்திவிட்டு வாகனம் ஓட்டாதீர்.
Sorry, no posts matched your criteria.