India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில், மேயர் பிரியா, 15 மண்டலங்களில் மாட்டு தொழுவம் அமைக்க பணி நடைபெறுகிறது. மேலும் மாடுகளுக்கு அபராத தொகை குறைப்பதை குறித்து ஆலோசிக்கப்படும் என்று அறிவித்தார். இந்த அறிக்கைக்கு – கால்நடை விவசாயிகள் முன்னேற்ற சங்க மாநில தலைவர் வழக்கறிஞர் தங்க.சாந்தகுமார், தமிழக அரசுக்கும், சென்னை மேயருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள 12 காவல் மாவட்டங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டத்தை சுமூகமாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாட தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். 2025ஆம் ஆண்டை மகிழ்ச்சியாக, மற்றவர்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் வரவேற்போம். பாதுகாப்பாக இருங்கள் மற்றும் பொறுப்புடன் மகிழுங்கள் என்று பெருநகர சென்னை காவல்துறை மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ள நிலையில் போராட்டத்திற்கு வருமாறு கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அழைப்பு விடுத்தார். இதையடுத்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்திற்கு வந்த நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
நடிகை சித்ராவின் தந்தை சென்னை திருவான்மியூரில் உள்ள வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். திருவான்மியூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் ஓய்வு பெற்ற உதவியாளர் காமராஜ், மகள் சித்ரா இறந்தது முதல் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாதாக காவல்துறை கூறியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புத்தாண்டை ஒட்டி சென்னையில் பல்வேறு கட்டுப்பாடுகளை போக்குவரத்து காவல்துறை விதித்துள்ளது. அதன்படி, சென்னை மெரினா காமராஜர் சாலை இன்று (டிச.31) இரவு 8 மணி முதல் ஜன.1ஆம் தேதி அதிகாலை 6 மணி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மெரினா, எலியட்ஸ் கடற்கரை சாலைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் வாகன நிறுத்தங்களுக்கான இடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகர காவல்துறை புத்தாண்டு கொண்டாட்டத்தின் பொருட்டு கடற்கரை, வழிபாட்டு தலங்கள், சாலைகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 2025ஆம் ஆண்டு புத்தாண்டு நாளை பிறக்கிறது. இதையொட்டி, சென்னையில் 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 425 இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
சென்னையில் இன்று (30.12.2024) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள கவலைகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
நாளை மறுநாள் புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் புத்தாண்டையொட்டி பொது இடங்கள், குடியிருப்பு பகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் பட்டாசு வெடிக்க காவல்துறை தடை விதித்துள்ளது. மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பரங்கிமலை ரயில் நிலையத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்த வழக்கில் குற்றவாளி சதீஷுக்கு மரண தண்டனையை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 ஆண்டுகள் சிறை தண்டனை நிறைவேற்றப்பட்ட பிறகு, கொலை வழக்கின் கீழ் மரண தண்டனையை நிறைவேற்ற நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. இதில், சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார், ஆணையர் குமரகுருபரன், நிலைக்குழு தலைவர்கள், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், ஏராளமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Sorry, no posts matched your criteria.