Chennai

News January 1, 2025

நாளை முதல் மின்சார ரயில்களின் அட்டவணை மாற்றம்

image

இன்று (ஜன.1) முதல் புதிய ரயில் அட்டவணை அமலுக்கு வருகிறது. இந்நிலையில், சென்னையில் அனைத்து மின்சார ரயில்களின் அட்டவணை நாளை (ஜன.2) முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடற்கரை – செங்கல்பட்டு, கும்மிடிப்பூண்டி, திருத்தணி உள்பட அனைத்து வழித்தட மின்சார ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 40க்கும் மேற்பட்ட ரயில்களின் எண்கள் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 1, 2025

சென்னையில் தானாகவே வழக்குகள் பதிவு செய்ய ஏற்பாடு

image

சென்னையில் இனி குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிக வேகம் மற்றும் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல், சாகச சவாரி செய்தல், பைக்கில் 3 பேர் செல்லுதல், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல், ஒலி மாசு ஏற்படுத்துதல் போன்றவற்றை கண்டறிந்து தொழில்நுட்ப முறையில் ANPR கேமரா மூலமாக தானாகவே வழக்குப் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

News January 1, 2025

வெறிச்சோடி காணப்படும் மெரினா கடற்கரை!

image

புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக சென்னையில் கடற்கரைகளில் குளிப்பதற்கும், கடலில் இறங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டதால், மெரினா கடற்கரை வெறிச்சோடி காணப்படுகிறது. மெரினா கடற்கரையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு கடற்கரைக்கு செல்லும் சாலைகளை தடுத்து, தீவிரமான ரோந்து பணிகளில் உள்ளனர்.

News January 1, 2025

முதல்வரை சந்தித்த சென்னை காவல் ஆணையர்

image

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (31.12.2024) முகாம் அலுவலகத்தில், சென்னை மாநகர காவல் ஆணையர் ஆ.அருண், மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் ஆங்கில புத்தாண்டையொட்டி சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

News January 1, 2025

சென்னையில் இன்று இரவு ரோந்து பணி விவரம்

image

சென்னையில் இன்று (31.12.2024) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள கவலைகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News December 31, 2024

மெரினா கடற்கரை முழுமையாக மூடப்பட்டது

image

புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு இன்று மாலை முதல் நாளை மாலை வரை பொதுமக்கள் கடற்கரைப் பகுதிகளுக்கு சென்று கடலில் குளிக்கவோ, இறங்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது, சென்னை மெரினா கடற்கரையை முழுவதுமாக காவல்துறை மூடியுள்ளது. மேலும், மெரினா கடற்கரையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சாந்தோம், பெசன்ட் நகர், நீலாங்கரை பகுதிகளிலும் கண்காணிப்பு பணிகள் தீவிரம்.

News December 31, 2024

எந்தெந்த மேம்பாலங்கள் மூடப்படும் – Part 2

image

14.மகாலிங்கபுரம் மேம்பாலம் தெற்கு
15.வடபழநி மேம்பாலம்
16.அடையார் மேம்பாலம்
17.வேளச்சேரி மேம்பாலம்
18.விமான நிலைய மேம்பாலம்
19.புதிய வள்ளலார் பாலம்
20.அண்ணா ஆர்ச் மேம்பாலம்
21.100 அடி சாலை மேம்பாலம்
22.திருமங்கலம் பாலம்
23.முரசொலி மாறன் மேம்பாலம்

News December 31, 2024

எந்தெந்த மேம்பாலங்கள் மூடப்படும் – Part 1

image

1.மியூசிக் அகாடமி மேம்பாலம்
2.ஜி.ஆர்.எச்.மேம்பாலம்
3.பீட்டர்ஸ் சாலை மேம்பாலம்
4.ஆழ்வார்பேட்டை மேம்பாலம் நுழைவாயில்
5.காந்தி மண்டபம் மேம்பாலம்
6.இந்திரா நகர் யூ திருப்பம்
7.பாந்தியன் மேம்பாலம்
8.மகாலிங்கபுரம் மேம்பாலம்
9.ஜெமினி மேம்பாலம், ஜி.என்.செட்டி
10.ஜி.கே.எம்., மேம்பாலம்
11.வாணி மகால் மேம்பாலம்
12.உஸ்மான் மேம்பாலம்
13.சக்கரபாணி தெருவில் இருந்து ரெங்கராஜபுரம் மேம்பாலம்

News December 31, 2024

சென்னையில் மேம்பாலங்கள் 10 மணிக்கு மூடப்படும்

image

சென்னையின் அனைத்து மேம்பாலங்களும் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மூடப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேம்பாலங்கள் மூடப்படுகின்றன. இதையடுத்து, இரவு 10 மணிக்கு மேம்பாலங்கள் மூடப்படும் என்று போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.

News December 31, 2024

சென்னை மேயருக்கு நன்றி தெரிவித்த கால்நடை விவசாயிகள் 

image

சென்னை ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில், மேயர் பிரியா, 15 மண்டலங்களில் மாட்டு தொழுவம் அமைக்க பணி நடைபெறுகிறது. மேலும் மாடுகளுக்கு அபராத தொகை குறைப்பதை குறித்து ஆலோசிக்கப்படும் என்று அறிவித்தார். இந்த அறிக்கைக்கு – கால்நடை விவசாயிகள் முன்னேற்ற சங்க மாநில தலைவர் வழக்கறிஞர் தங்க.சாந்தகுமார், தமிழக அரசுக்கும், சென்னை மேயருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!