Chennai

News January 3, 2025

சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சி

image

2025ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு ‘சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா’ கலை நிகழ்ச்சியை, ஜன.13இல் கீழ்ப்பாக்கம்- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஏகாம்பரேஸ்வரர் ஆலய திடலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். ஜன.13 முதல் 17வரை நடக்க உள்ள இந்த கலை நிகழ்ச்சியில், பாரம்பரிய உணவுத் திருவிழாவும் நடக்க உள்ளது. விழா நடக்கும் நாட்களில் 18 இடங்களில் பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற உள்ளது. 

News January 2, 2025

செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சிக்கான கட்டணம் உயர்வு

image

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் சென்னை செம்மொழி பூங்காவில் நடத்தப்படும் மலர் கண்காட்சி நுழைவு சீட்டுக்கான கட்டணம் இந்தாண்டு உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டில் பெரியவர்களுக்கு 150 ரூபாய், சிறியவர்களுக்கு 75 ரூபாய் இருந்த கட்டணம், தற்போது பெரியவர்களுக்கு 200 ஆகவும், சிறியவர்களுக்கு 100 ஆகவும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

News January 2, 2025

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு லேசான பனிமூட்டம் காணப்படும்

image

சென்னையில் அடுத்த வரவுள்ள 2 நாட்களுக்கு அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில், லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், அதிகபட்ச வெப்பநிலை 31 – 32 டிகிரி செல்சியசை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 2, 2025

மெட்ரோ ரயிலில் 10.52 கோடி பயணிகள் பயணம்

image

சென்னை மெட்ரோ ரயிலில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 3.20 லட்சம் பேர் பயணிக்கின்றனர். சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்ட 9 ஆண்டுகளில், இதுவரை இல்லாத அளவிற்கு 2024ஆம் ஆண்டில் மட்டும் 10.52 கோடி பேர் மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளார்கள். 2023ஆம் ஆண்டைவிட 2024ஆம் ஆண்டில் 1.41 கோடி பேர் அதிகமாக பயணித்துள்ளார்கள் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சேவை பயனுள்ளதாக அமைந்துள்ளது.

News January 2, 2025

வீட்டில் துணி துவைப்போர் கவனத்திற்கு…

image

சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில், குடிநீரை சேமிக்க சென்னை மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.துணி துவைக்க நேரடியாக குழாய்களை பயன்படுத்தும்போது 116 லிட்டர்கள் செலவாகிறது. இதுவே வாளிகள் மூலம் தனியே பிடித்து உபயோகித்தால், 26 லிட்டர்கள் மட்டுமே செலவாகிறது. எனவே, குழாய் மூலம் நேரடியாக பிடித்து உபயோகிப்பதை நிறுத்திவிட்டு, பிடித்து பயன்படுத்தி 80 லிட்டர் அளவு தண்ணீரை சேமிக்குமாறு தெரிவித்துள்ளது.

News January 2, 2025

சாலை விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

image

சென்னையில் நேற்று 2025ஆம் ஆண்டின் புத்தாண்டு கொண்டாட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. நேற்று முன்தினம் நள்ளிரவும் முதல் நேற்று அதிகாலை வரை ஏற்பட்ட சாலை விபத்துகளில் சிக்கி 5 போ் உயிரிழந்தனா். வடபழனியைச் சோ்ந்த சாருகேஷ் (19), சாலிகிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் (19), பெரும்பாக்கத்தைச் சேர்ந்த பன்னீா்செல்வம் (65), நுக்கம்பாக்கத்தைச் சேர்ந்த நித்திஷ் (22) என 5 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

News January 2, 2025

முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு 145 வயது

image

முத்துநகர் விரைவு ரயில், கடத்த 1880ஆம் ஆண்டு ஜன.1ஆம் தேதி தொடங்கப்பட்டது. முதல் பயணத்தில், சென்னை – தூத்துக்குடி இடையேயான 652 கி.மீ., தொலைவை ஆரம்ப காலக்கட்டத்தில் 21.50 மணி நேரத்தில் கடந்தது. முத்துநகர் விரைவு ரயில் 144ஆவது ஆண்டை நிறைவு செய்து, 145ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. அப்போது கிட்டத்தட்ட 22 மணி நேரமாக கடந்த முத்துநகர் விரைவு ரயில், தற்போது 11 மணி நேரத்தில் சென்னையை சென்றடைகிறது.

News January 2, 2025

242 பைக்குகளை பறிமுதல் செய்த போலீசார்

image

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, நேற்று (டிச.31) பைக் பந்தயங்கள் நடக்கக்கூடும் என்பதால் போக்குவரத்து போலீசார் 30 கண்காணிப்பு சோதனைக்குழு அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டனர். 425 இடங்களில் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அதிவேகமாக பைக்கை ஓட்டி வந்த, அதிக ஒலி எழுப்பும் வகையில் ஓட்டி வந்த, பைக் ரேஸில் ஈடுபட்ட 242 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

News January 2, 2025

புத்தாண்டு கொண்டாட்டத்தில் 4 பேர் பலி

image

சென்னையில் நேற்று இரவு (ஜன.1) புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். சேத்துப்பட்டு கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை அருகே தீபக், நீலாங்கரை அடுத்த வெட்டுவாங்கேனி அருகே சாருகேஷ் (18), பெரும்பாக்கம் சிவன் கோயில் அருகே நித்திஷ் (18), கேளம்பாக்கம் அருகே ஒருவர் என 4 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். 4 பேரும் மதுபோதையில் பைக் ஓட்டிச் சென்றதே விபத்துக்கு காரணமாக அமைந்துள்ளது.

News January 2, 2025

சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

image

சென்னையில் இன்று (01.01.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.

error: Content is protected !!