Chennai

News January 3, 2025

போதை தான் காரணம்: சரத்குமார் பேட்டி

image

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் போதை கலாச்சாரம் அதிகமாகி விட்டது. போதை கலாச்சாரத்தை கட்டுப்படுத்தினால், இது போன்ற பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடக்காமல் இருக்கும் என்று சென்னை விமான நிலையத்தில் நடிகர் சரத்குமார் பேட்டியளித்தார். மேலும், அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக அண்ணாமலை விரிவாக சொல்லி இருக்கிறார். கைது செய்யப்பட்டவர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர் என்றும் தெரிவித்தார்.

News January 3, 2025

வரத்து குறைவால் சின்ன வெங்காயத்தின் விலை அதிகரிப்பு

image

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு ஒட்டன்சத்திரம், பெரம்பலூர், திண்டுக்கல், ஓசூர் ஆகிய பகுதிகளில் இருந்து தினசரி 300 டன் சின்ன வெங்காயம் வருகிறது. இந்நிலையில், நேற்று காலை 150 டன் சின்ன வெங்காயம் மட்டுமே வந்துள்ளதால், அதன் விலை சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, 1 கிலோ சின்ன வெங்காயத்தின் விலை 50 ரூபாயிலிருந்து ரூ.120 முதல் ரூ.150 வரை விற்கப்பட்டு வருகிறது. ஷேர் பண்ணுங்க

News January 3, 2025

சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு

image

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று (ஜன.3) முதல் ஜன.8 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் (டிச.3, 4) லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. இன்றும், நாளையும் தென்தமிழக கடலோரப்பகுதி, மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக்கடலில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்.

News January 3, 2025

ஸ்க்ரப் டைபஸ் நோயை எப்படி தடுக்கலாம்

image

▶உண்ணிகளிடமிருந்து கடிபடாமல் இருப்பதுதான் முதல் தற்காப்பு. ▶தலையணை, படுக்கை விரிப்புகளை சுத்தம் செய்ய வேண்டும். ▶வீட்டை சுற்றி புதார்கள் மண்டி இருந்தால், அதனை சுத்தம் செய்ய வேண்டும். ▶உண்ணிக்கொல்லி மருந்துகளை தெளிக்கலாம். ▶மலையேற்றத்துக்கு செல்லும்போது கொசு விரட்டி, உண்ணி விரட்டிகளை தேய்த்து கொள்ளுங்கள். ▶காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு ஏற்பட்டால் மருத்துவரை அணுகுங்கள். ஷேர் பண்ணுங்க

News January 3, 2025

‘ஸ்க்ரப் டைபஸ்’ நோய் வந்தால் என்ன ஆகும்

image

14 நாட்களில் காய்ச்சல், நடுக்கம், உடல் சோர்வு, உடல் வழி, இரும்பல் போன்றவை ஏற்படும். 2ஆவது வாரத்தில் நுரையீரல் தொற்று, நிமோனியா மற்றும் முளைக்கு தொற்று பரவி சுவாச செயலிழப்பு, கல்லீரலில் பாதிப்பு, மஞ்சள் காமாலை, மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும். கல்லீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகள் செயலிழந்து, மரணமடையும் வாய்ப்பு 30% வரை உள்ளது. இது பிரச்னைக்குரிய காய்ச்சல் என்பதை மக்கள் உணர வேண்டும். ஷேர் பண்ணுங்க

News January 3, 2025

சென்னையில் ‘ஸ்க்ரப் டைபஸ்’ நோய் பரவுகிறது

image

சென்னையில் ‘ஸ்க்ரப் டைபஸ்’ நோய் பரவுவதாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது ஒரு வகையான பாக்டீரியா தொற்று. ‘ரிக்கட்சியா’ எனப்படும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள் மற்றும் உயிரினங்கள், மனிதர்களை கடிக்கும்போது இந்த நோய் ஏற்படும். இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, உடல் அரிப்பு ஆகியவை முக்கிய அறிகுறிகளாக உள்ளது. ஷேர் பண்ணுங்க

News January 3, 2025

மெட்ரோ ரயிலில் இதுவரை 35.53 கோடி பயணிகள் பயணம்

image

சென்னை மெட்ரோ ரயிலில் இதுவரை 35.53 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர். 2015 முதல் 2018 வரை 2,80,52,357 பயணிகளும், ​2019-ம் ஆண்டில் 3,28,13,628 பயணிகளும், 2020–ம்ஆண்டில் 1,18,56,982 பயணிகளும், 2021-ம் ஆண்டில் 2,53,03,383 பயணிகளும், 2022-ம் ஆண்டில் 6,09,8,7,765 பயணிகளும், 2023-ம் ஆண்டில் 9,11,02,957 பயணிகளும், 2024-ம் ஆண்டில் 10,52,43,721 பயணிகளும் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளார்கள்.

News January 3, 2025

சென்னையில் இன்று இரவு ரோந்து பணி விவரம்

image

சென்னையில் இன்று (02.01.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News January 3, 2025

சென்னை சங்கமம் – நம்ம ஊர் திருவிழா ஆலோசனை கூட்டம்

image

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் “சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா” நடத்துவது குறித்து தொடர்புடைய துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் பி சந்தரமோகன், முதலமைச்சரின் செயலாளர் எம்.எஸ்.சண்முகம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News January 3, 2025

சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சி

image

2025ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு ‘சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா’ கலை நிகழ்ச்சியை, ஜன.13இல் கீழ்ப்பாக்கம்- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஏகாம்பரேஸ்வரர் ஆலய திடலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். ஜன.13 முதல் 17வரை நடக்க உள்ள இந்த கலை நிகழ்ச்சியில், பாரம்பரிய உணவுத் திருவிழாவும் நடக்க உள்ளது. விழா நடக்கும் நாட்களில் 18 இடங்களில் பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற உள்ளது. 

error: Content is protected !!