India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பா.ம.க. தலைவர் அன்புமணி மத்திய கைலாஷ் எல் வடிவ மேம்பாலம் குறித்து அறிக்கை வெளியிட்டார். அவர், “மேம்பாலம் தரமற்றும் பலவீனமாக கட்டப்பட்டுள்ளது. இப்போது அவசரமாக தார்ச்சாலை அமைத்துள்ளனர். உலகிலேயே புதிதாக அமைக்கப்பட்ட கான்க்ரீட் பாலத்தின் மீது தார்ச்சாலை அமைத்த ஒரே கம்பெனி திமுக கம்பெனி தான். இத்தகைய தார்பூச்சு வேலைகளால் ஊழலை மூடி மறைக்க முடியாது. நீதி தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும்” எனக் கூறினார்.

போரூர் ஆற்காடு சாலையில், மெட்ரோ ரயில் பணியின்போது ஏற்பட்ட குடிநீர் குழாய் கசிவு சரி செய்யும் பணி நடைபெற உள்ளது. இதனால், மார்ச்.7, 8ம் தேதிகளில், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்துார், அடையாறு ஆகிய மண்டலங்களில், குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும். நீரை சேமித்து வையுங்கள் மக்களே. அவசர தேவைக்கு, https://cmwssb.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

சென்னை மக்களே திடீரென மருத்துவ செலவு வந்தால் கையில் பணம் இல்லை என்ற கவலை இனி வேண்டாம். மத்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் Ayushman Card இருந்தால் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனையில் இலவசமாக தரமான மருத்துவத்தை பெறலாம். அதன்மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். Ayushman Cardஐ பெற இப்போதே இங்கு <

வில்லிவாக்கத்தில் வண்ண மீன் வர்த்தக மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு வண்ண மீன், மற்றும் உபகரணங்கள் விற்பனையும் நடந்து வருகிறது. இந்த மையத்தில் உள்ள கூட்டரங்கில், வண்ண மீன் வளர்ப்பு மற்றும் பாதுகாத்தல், நோய் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு பயிற்சி, நாளை (மார்ச்.7) காலை 10முதல் மதியம் 3வரை நடக்கிறது. பொதுமக்கள், மாணவ, மாணவியர் பங்கேற்கலாம். அனுமதி இலவசம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சென்னை, எழும்பூரில் அமைந்துள்ள ஹோட்டல் நேற்று (மார்ச் 05) தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் G.K வாசன் ஒருங்கிணைப்பில் இப்தார் நோன்பு திறக்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில், தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், NDA கட்சித் தலைவர்கள் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அதிமுக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அயனாவரம் பகுதியைச் சேர்ந்தோர் சஞ்சய்(12). அவரது நண்பர் பிரவீன்(12). இவர்கள் பள்ளிக்கு செல்லாமல் ரயில்வேக்கு சொந்தமான ஏரியில் குளிக்க சென்றுள்ளார். ஏரியின் ஆழத்தில் சென்றதால் சேற்றுக்குள் சிக்கி துடிதுடித்து உயிரிழந்தனர். போலீசார் உடலை மீட்டு, கீழ்ப்பாக்க அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து, போலீசார் வழக்கு பதித்து விசாரித்து வருகின்றனர்.

சென்னையில் நடைபெறும் ஹிப்ஹாப் ஆதி இசை நிகழ்ச்சியை முன்னிட்டு, நாளை 7ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. நந்தனம் – விம்கோ நகர் மற்றும் நந்தனம் – விமான நிலையம் வழித்தடங்களில் ரயில்கள் நள்ளிரவு வரை இயக்கப்படும். ஹிப்ஹாப் தமிழா இசை நிகழ்ச்சிக்கான ஸ்பான்சர் பயணச்சீட்டு வைத்திருப்பவர்கள் இலவசமாக மெட்ரோவில் பயணம் செய்யலாம் என்ற தெரிவித்துள்ளது

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (மார்ச் 05), அதிமுக கூட்டணி சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட பாமகவுக்கு ஒரு சீட்டு ஒதுக்கப்பட்டுள்ளது.இதில், பாமக சார்பில் போட்டியிட,பாமக தலைவர் அன்புமணி வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிகழ்வில், அதிமுக மூத்த நிர்வாகிகள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சென்னை கொளத்தூரில் வண்ண மீன் வளர்ப்பு, பராமரிப்பு மற்றும் நோய் மேலாண்மை குறித்த கட்டணமில்லா விழிப்புணர்வுப் பயிற்சி வரும் மார்ச் 07 (சனிக்கிழமை) அன்று நடைபெற உள்ளது. கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையத்தில் காலை 10:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் விருப்பமுள்ளவர்கள் நேரடியாகக் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

சென்னையில் இருந்து செங்கல்பட்டுக்கு செல்லும் வழியில் மறைமலை நகரை அடுத்துள்ள மகேந்திரா சிட்டிக்கு மிக அருகில் மகா பைரவ ருத்ர ஆலயம் உள்ளது. இங்கு அஷ்டமி நாளில் 11 தீபங்கள் ஏற்றி, கால பைரவரை வணங்கினால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும் என்பது ஐதீகம். மேலும், வருடத்திற்கு ஒருமுறை இங்கு வந்தாலே ஆத்மா சுத்தமாகுமாம். கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.