India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை மாநகராட்சி ஆணையர் கடந்த செப்.30ஆம் தேதி முதல், சாலை வெட்டுகள் மேற்கொள்ள தடை விதித்து இருந்தார். அவசர தேவைகளுக்கு மட்டும் மாநகராட்சி ஆணையரிடம் அனுமதி பெற்று சாலையை வெட்ட அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், தற்போது வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வர இருப்பதால், சாலைகளை வெட்ட விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க, அண்ணா நகர் காவல்துறை ஆணையர் சினேகிப்பிரியா, ஆவடித்துணை ஆணையர் ஐமன் ஜமால், சேலம் துறை ஆணையர் பிருந்தா ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நீதிமன்றம் அமைத்தது. இந்தக் குழுவினர் இன்று இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் என்பவரின் கோட்டூர் பகுதியில் உள்ள வீட்டில் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை செய்தனர்.
சென்னையில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை கடும் பனிப்பொழிவு அதிகளவில் இருந்து வருகிறது. இதனால் காற்று கடுமையாக மாசடைந்துள்ளது. கடந்த 10 நாட்களில் காற்றின் தரக் குறியீடு இரு மடங்கு மோசம் அடைந்துள்ளதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய ஆய்வில் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் விமானங்கள் வருவதும், புறப்படுவதும் தாமதகமாகி வருகிறது. நுரையீரல், இதய நோயுள்ளவர்கள் பாதுகாப்பாக இருங்கள். ஷேர் செய்யுங்கள்
சென்னையில் மாரத்தான் போட்டி நடப்பதையொட்டி, ஜன.5ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் காலை 8 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காமராஜர் சாலையில் போர் நினைவுச் சின்னத்தில் இருந்து காந்தி சிலை வரை அனுமதி இல்லை. போர் நினைவிடத்தில் இருந்து திரு.வி.க.பாலம் வரை வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. எல்.பி. சாலை சந்திப்பில் இருந்து வரும் வாகனங்களுக்கு பெசன்ட் அவென்யூ சாலையில் அனுமதி இல்லை. ஷேர் பண்ணுங்க
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்காக சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தாம்பரத்தில் இருந்து திருச்சிக்கு 4, 5,10, 11, 12, 13, 17, 18, 19 ஆகிய தேதிகளிலும், தாம்பரத்தில் இருந்து குமரிக்கு 13ஆம் தேதியும், ராமநாதபுரத்திற்கு 11,13,18 ஆகிய தேதிகளிலும், நெல்லைக்கு 13,20,27 ஆகிய தேதிகளிலும், நாகர்கோவிலுக்கு 12,19 ஆகிய தேதிகளிலும் புறப்படும். ஷேர் பண்ணுங்க
சென்னை மாரத்தான் ஓட்டத்தை முன்னிட்டு, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், Fresh Works Chennai Marathon உடன் இணைந்து, மாரத்தான் பங்கேற்பாளர்கள் பயன்பெறும் வகையில் வருகின்ற 05ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு மெட்ரோ இரயில் சேவைகள் அதிகாலை 3 மணி முதல் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரை 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படுகிறது.
சென்னையில் இன்று (03.01.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள கவலைகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
பெருநகர சென்னை மாநகராட்சியில் பாதிப்பு மிகுந்த கர்ப்பிணித் தாய்மார்களுக்கான நல உதவி மையத்தினை (High Risk Mother Help Desk) மேயர் பிரியா இன்று ரிப்பன் கட்ட வளாக அலுவலகத்தில் தொடங்கி வைத்து, செயல்பாடுகளை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், துணை மேயர் மகேஷ்குமார், ஆணையாளர் ஜெ.குமரகுருபரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நுங்கம்பாக்கத்தில் தொழிலதிபர் வீட்டில் 150 சவரன் தங்க நகை மற்றும் ரூ.20 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தொழிலதிபர் அளித்த புகாரின்பேரில் நுங்கம்பாக்கம் காவல்துறை வழக்குப்பதிவு செய்து, வீட்டில் உள்ள ஊழியர்கள் மற்றும் காவலாளியிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
வார விடுமுறையை முன்னிட்டு, இன்றும் நாளையும் சென்னையில் சிறப்பு பேருந்து இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி உள்ளிட்ட இடங்களுக்கு இன்று 245 பேருந்துகளும், நாளை 240 பேருந்துகளும், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து ஓசூர், வேளாங்கண்ணி, பெங்களூர் ஆகிய இடங்களுக்கு 51 பேருந்துகளும் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.