Chennai

News January 13, 2025

மருத்துவமனையில் பெண் நோயாளியிடம் பாலியல் சீண்டல் 

image

சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெண் நோயாளி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை பெண்கள் வார்டுக்குள் அத்துமீறி புகுந்த ராணிப்பேட்டையைச் சேர்ந்த சதீஷ்குமார் தூங்கி கொண்டு இருந்த 50 வயது பெண் நோயாளியிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டுள்ளார். தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த போலீசார் சதீஷ்குமாரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். 

News January 13, 2025

சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு

image

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (ஜன.13) இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதிகாலையில், பெரம்பூர், அயனாவரம், கொளத்தூர், திரு.வி.க நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. உங்க ஏரியால மழையா? கமெண்ட்ல சொல்லுங்க.

News January 13, 2025

மாசில்லா போகியை கொண்டாட உறுதியேற்போம்

image

போகி பாண்டியான இன்று வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரிப்பது வழக்கமாக உள்ளது. இதனால் கடும் காற்று மாசு ஏற்படுகிறது. குறிப்பாக சென்னையில் சொல்லவே தேவையில்லை. இந்த போகிக்கு பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற பெயரில் துணி, பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதை விட பிழையனவாம் கோவம், வெறுப்பு களைந்து புதியனவாம் அன்பு, பாசம் வளர்ப்போம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News January 12, 2025

சென்னையில் இன்று இரவு ரோந்து பணி விவரம்

image

சென்னையில் இன்று (12.01.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள கவலைகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News January 12, 2025

காணும் பொங்கலுக்கு 16,000 போலீசார் பாதுகாப்பு

image

காணும் பொங்கல் அன்று (ஜன.16) 16,000 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளுநர்கள் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அன்றைய தினம், பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் கடற்கரை உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்களுக்கு அதிகளவில் வருவது வழக்கம். எவ்வித அசம்பாவிதமும் நிகழா வண்ணம் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணும் பொங்கலை கொண்டாடுவதற்காக இம்முறை போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

News January 12, 2025

2024ஆம் ஆண்டில் 2,827 மாடுகளை பிடித்த மாநகராட்சி 

image

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மொத்தம் 15 மாடுபிடிக்கும் வாகனங்களில் கடந்த 2024ஆம் ஆண்டு சுமார் 2,827 மாடுகள் பிடிக்கப்பட்டு, மாநகராட்சியின் 12 மாடு தொழுவங்களில் வைக்கப்பட்டன. இதையடுத்து, பிடிக்கப்பட்ட மாடுகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோன்ற சம்பவங்களில் இன்னும் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நபர்களுக்கு, கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சிக்கு தெரிவித்துள்ளது.

News January 12, 2025

SUNDAY SPECIAL: வடசென்னை பீட்ஸா ‘அட்லாப்பம்’ 3/3

image

கடற்கரை பகுதிகளில் வெறும் மீன் மட்டும் தான் கிடைக்கும் என்று இல்லை. இன்றைக்கும் காசிமேடு கடற்கரை பகுதிகளில் அட்லாப்பம் விற்பனை செய்யப்படுகிறது. சுவை இனிப்பாக இருந்தாலும், அதில் கிடைக்கும் ஊட்டச்சத்து, எனர்ஜி, புரோட்டீன் அலாதி. மீன் வாங்க காசிமேடு கடற்கரைக்கு வந்தால், இந்த அட்லாப்பம் எங்கு கிடைக்கும் என்று கேட்டு வாங்கி சாப்பிட்டு பாருங்கள். நீங்களே அடுத்தவருக்கு பரிந்துரைப்பீர்கள்.

News January 12, 2025

SUNDAY SPECIAL: வடசென்னை பீட்ஸா ‘அட்லாப்பம்’ 2/3

image

குற்றச்சம்பவங்களுக்கு பேர்போன இடம் என ஒருசிலர் கூறும் வடசென்னை தான், ஒரு காலத்தில் வீரர்களை உற்பத்தி செய்யும் பட்டறையாக இருந்தது. ஆம், கால்பந்து, கபடி, பாக்சிங் என அப்பகுதி இளைஞர்களுக்கு ஸ்போர்ட்ஸ் மீது அதிக ஆர்வம். காலை 4 மணிக்கு உடற்பயிற்சி மேற்கொள்ளும் அனைவரும் இந்த அட்லாப்பத்தை தான் வாங்கி சாப்பிடுவார்கள். அதில், அவ்வளவு ஊட்டச்சத்து உள்ளது. உடல்வலிமை, எனர்ஜி என உடலே கட்டுமஸ்த்தாக மாறிவிடும்.

News January 12, 2025

SUNDAY SPECIAL: வடசென்னை பீட்ஸா ‘அட்லாப்பம்’ 1/3

image

வட சென்னை பகுதியில் வாழும் மக்கள் அட்லாப்பத்தை ‘வடசென்னை பீட்ஸா’ என்றழைக்கின்றனர். இந்த உணவு 100 ஆண்டுகளுக்கும் பழமையானது. அன்றைய வடசென்னை பகுதியில் வாழ்ந்த மீனவ பெண்தான் இந்த அட்லாப்பத்தை கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பாக 1 அட்லாப்பம் ரூ.8க்கு விற்கப்பட்டது. தற்போது ரூ.30 – ரூ.40 வரை விற்கப்படுகிறது. காசிமேடு மீன் சந்தைக்கு சென்றால் அட்லாப்பத்தை சுட சுட ருசிக்கலாம்.

News January 12, 2025

இந்தியா-இங்கிலாந்து டி20 போட்டி டிக்கெட் விற்பனை தொடக்கம் 

image

ஜன.25ஆம் தேதி இரவு சேப்பாக்கத்தில், இந்தியா – இங்கிலாந்து இடையேயான டி20 போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று (ஜன.12) பகல் 11 மணிக்கு தொடங்குகிறது. குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.1500 ஆகும். இதுதவிர, ரூ.2,500 மற்றும் ரூ.5,000க்கும் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், ஏசி மற்றும் விருந்துடன் கூடிய டிக்கெட் விலை ரூ.10,000 முதல் ரூ.15,000 ஆகும். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!