India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சென்னையில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர்!

சென்னை மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதற்கு நீங்க எந்த காசும் கட்ட வேண்டாம். உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினாப் போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா இங்கு <

ராயபுரம் சட்டமன்றத் தொகுதியில், நாம் தமிழர் கட்சியின் சார்பில், இன்று (மார்ச். 10) இலவச கண் & பல் மருத்துவ முகாம் நடைபெற்றது. தனியார் கண் மருத்துவமனை & இந்தியன் டென்டல் அசோசியேஷன் இணைந்து நடத்திய முகாமில், 200 பேர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். ராயபுரம் சட்டமன்ற தொகுதியின், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாபு மைலன் & கட்சியின் பொறுப்பாளர்கள், ஆகியோர் இந்த முகாமில் கலந்துகொண்டு, மேற்பார்வையிட்டனர்.

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பி.ஜி. விடுதிகளில் தேநீர், காபி இனிமேல் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஐ.டி. விடுதிகள் & பி.ஜி. விடுதி உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிக கேஸ் தேவை என்பதால் சப்பாத்தி, தோசை தற்காலிகமாக வழங்கப்பட மாட்டாது எனவும், சாம்பார், குருமா தற்காலிகமாக நிறுத்தப்படுவதுடன், பதிலாக சட்னி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொழில் நிறுவனங்கள் & ஹோட்டல்களில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நாளை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடைபெற உள்ளது. உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள ஹோட்டல் உரிமையாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். கேஸ் சிலிண்டருக்கு மாற்றாக பயன்படுத்தக்கூடிய வழிகள் குறித்து ஆலோசித்து, தீர்மானம் எடுக்கப்பட உள்ளது.

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) சென்னை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் ரூ.1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் காரணமாக உலக அளவில் கேஸ் சிலிண்டர் விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் வணிக சிலிண்டர் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே எரிபொருள் விநியோகம் தொடர்பாக சென்னை ஓட்டல்கள் சங்கம் சார்பில் பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னை மக்களே.., IDBI வங்கியில் காலியாக உள்ள 1300 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பாதிக்கலாம். விண்ணப்பிக்க மார்ச் 19ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே <

சென்னை, OPS ஆதரவாளரான கொளத்தூர் டி.கிருஷ்ணமூர்த்தி கடந்த வாரம் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். இந்த நிலையில் நேற்று கொளத்தூர், வில்லிவாக்கம், ராயபுரம், திரு.வி.க.நகர், ஆர்.கே.நகர், பெரம்பூர் பகுதிகளைச் சேர்ந்த 1500-க்கும் மேற்பட்டோர், இவரது தலைமையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியை நேரில் சந்தித்து, கட்சியில் இணைந்தனர்.
Sorry, no posts matched your criteria.