India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் இன்று (14.01.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள கவலைகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக, தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் ஜன.19ஆம் தேதி ஞாயிறன்று தூத்துக்குடியில் இருந்து மாலை 4.25 மணிக்கு (06168) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கு நாளை (ஜன.15) முன்பதிவு தொடங்குகிறது. அதே நாளில் மதுரையில் இருந்து மாலை 4 மணிக்கு முன்பதிவில்லா சிறப்பு MEMU ரயில் (06062) இயக்கப்பட உள்ளன. ஷேர் பண்ணுங்க
Tom Tom நிறுவனம் வெளியிட்ட 2024ஆம் ஆண்டின் இந்தியாவின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களின் பட்டியலில், கொல்கத்தா முதலிடம் பிடித்துள்ளது. கொல்கத்தாவில் 10 கி.மீ-ஐ கடக்க 34 நிமிடங்கள் 33 நொடிகள் தேவைப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, இந்தப் பட்டியலில் பெங்களூரு, புனே 2 மற்றும் 3என அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. சென்னை 31ஆவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னையில் எந்த ஏரியாவில் நேரில் அதிகம்?
வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. கடல் மட்டத்தில் இருந்து, 0.9 கி.மீ உயரத்தில் இந்த சுழற்சி காணப்படுகிறது. இதன் காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்றும், நாளையும் வானம் மேகமூட்டமாக காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யும் என்றும் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று (13.01.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வரியாக உள்ளது. மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள கவலைகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
பொங்கல் திருநாளை முன்னிட்டு, பல்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் பல்வேறு பகுதிகளில் ஜொலித்து காணப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மின் விளக்குகளால் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லம் ஜொலித்து வருகிறது. இதனை அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் வியப்புடன் கண்டு வருகின்றனர்.
ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்து கீழமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய விவகாரம் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு கொண்டுவரப்பட்டது. இதனை அடுத்து கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 7 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடைபெற்றிருக்கும் கொடூரச் சம்பவம் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பதையே காட்டுவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்றிய திமுக அரசின் செயல்பாடுகளுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பொங்கல் விடுமுறை தினமான நாளை ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என சென்னை தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஞாயிறு அட்டவணைப்படி நாளை காலை 8 மணி முதல் 2 மணி வரை ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் செயல்படும் என தெற்கு ரயில்வே சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் சேவை நாளை (ஜன.14) முதல் ஜன.17 ஆம் தேதி வரை மாற்றப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜன,14,15 மற்றும் 16 ஆம் தேதிகளில் ஞாயிறு நேர அட்டவணை படியும், ஜன.17 ஆம் தேதி சனிக்கிழமை அட்டவணை படியும் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.