Chennai

News January 18, 2025

போக்குவரத்து நெரிசலை குறைக்க கட்டுப்பாடுகள்

image

பொங்கல் பண்டிகை முடிந்து மீண்டும் சென்னை திரும்பும் மக்களுக்காக, போக்குவரத்து நெரிசலை குறைக்க செங்கல்பட்டு முதல் தாம்பரம் வரை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. GST ரோடு, வண்டலூர் – கேளம்பாக்கம் சாலை, OMR மற்றும் ECR சாலைகளில் வரும் 20ஆம் தேதி வரை கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. GST சாலையில் போக்குவரத்தை விரைவுப்படுத்த, ஆம்னி பேருந்துகள் வெளிவட்ட சாலையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News January 17, 2025

சென்னையில் இன்றைய இரவு காவலர்களின் விவரம்

image

சென்னையில் இன்று (17.01.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள கவலைகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News January 17, 2025

இன்ஸ்டாகிராம் லைக்குகளுக்கு பணமா? ஏமாறாதீர்கள்

image

சென்னை காவல்துறை சார்பில் நாள்தோறும் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்ஸ்டாகிராம் லைக்குகளுக்கு பணம் கொடுப்பதாக வரும் குறுஞ்செய்திகளை கண்டு ஏமாற வேண்டாம். இதுபோன்ற பணமோசடிகளைத் தவிர்க்க வேண்டுமென எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க 1930ஐ என்ற எண்ணை டயல் செய்யுங்கள். அல்லது cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம்.

News January 17, 2025

MGR வெளியேறிய பிறகு கலைஞர் அமைச்சராக இல்லை

image

சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “எங்கள் தலைவரின் பெயரை உச்சரிக்காமல் உலக அரசியலும் கிடையாது. தமிழ்நாடு அரசியலும் கிடையாது. திமுகவிலிருந்து MGR வெளியேறிய பிறகு, கலைஞர் அமைச்சராகவும் இல்லை, முதலமைச்சராகவும் இல்லை. அரசு ஊழியர்கள், பெண்கள், பாலியல் விவகாரம் என மக்கள் சிரமப்பட்டு கொண்டிருக்கிறார்கள். ஆட்சியை மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள்” என்றார்.

News January 17, 2025

மகளை ஆபாசமாக வீடியோ எடுத்து விற்ற வழக்கில் பகீர் தகவல்

image

மகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய பெற்றோரை போலீசார் நேற்று (ஜன.16) கைது செய்துள்ளனர். மயிலாப்பூர் பகுதியில் சிறார் ஆபாச வீடியோ விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் விசாரித்தபோது, சொந்த மக்களையே ஆபாசமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து விற்றது தெரியவந்தது. மகள் மட்டுமின்றி மகளின் தோழிகள் 6 பேரையும் இதில் ஈடுபடுத்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News January 17, 2025

வரும் ஏப்ரல் மாதம் முதல் மெட்ரோ கார்டுகள் செல்லாது

image

வரும் ஏப்ரல் மாதம் முதல் இந்த மெட்ரோ கார்டுகள் செல்லாது. அதற்கு பதிலாக, ‘சிங்கார சென்னை கார்டு’ புழக்கத்திற்கு வரப்போகிறது. இந்த கார்டை பயன்படுத்தி மெட்ரோ ரயிலில் மட்டுமல்லாமல், மின்சார ரயில்கள், அரசு பேருந்துகளில் கூட பயணம் செய்யலாம். இந்தக் கார்டு இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் ரீசார்ஜ் செய்துகொண்டால் மட்டும் போதும். சிங்கார சென்னை கார்டிற்கு விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் செய்யவும். ஷேர் பண்ணுங்க

News January 17, 2025

ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன

image

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னையை நோக்கி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நேற்று (ஜன.16) ஆயிரக்கணக்கான பொதுமக்கள் படையெடுத்து வந்தனர். இதனால் சென்னைக்கு வரும் அனைத்து முக்கிய சாலைகளிலும், சுங்கச்சாவடிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக, பெருங்களத்தூரில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்ததால், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

News January 17, 2025

சென்னையில் இன்றைய இரவு காவலர்கள் விவரம்

image

சென்னையில் இன்று (16.01.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள கவலைகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News January 17, 2025

சிறார் ஆபாச வீடியோ விவகாரம்; மேலும் இருவர் கைது

image

மயிலாப்பூரில் பெற்ற மகளையே பாலியல் தொழிலுக்கு அனுப்பி அதனை வீடியோ பதிவு செய்து பணத்திற்காக சமூக வலைத்தளங்களில் விற்பனை செய்த தம்பதியினர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் தற்போது மேலும் இருவரை கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர். சீனிவாசபுரத்தை சேர்ந்த ஒருவர் மற்றும் தாம்பரத்தை சேர்ந்த ஒருவர் என இருவரை கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர்.

News January 16, 2025

வழிப்பறி பணத்தில் ராயல் வாழ்க்கை; கம்பி எண்ணும் காவலர் 

image

சைதாப்பேட்டை காவல் நிலைய SSI சன்னி லாய்ட் ரூ. 20 லட்சம் வழிப்பறி செய்து ராயல் வாழ்கை வாழ்ந்து வந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் தலைமறிவாக இருந்த அவர் கைது செய்யப்பட்டு சென்னை அழைத்து வரப்பட்டார். மேலும், ஜன. 30ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ரேவதி உத்தரவிட்டுள்ளார். வழிப்பறி பணத்தில் ஜிம், பங்களா ஆகியவற்றை வாங்கியது குறிப்பிடத்தக்கது. 

error: Content is protected !!