India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை தேனாம்பேட்டையில் 2 குழந்தைகளின் கழுத்தை அறுத்துவிட்டு, தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (ஜன.28), காயமடைந்த 2 குழந்தைகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாய் ஜெயந்தி (35) உயிரிழந்தார். குடும்பத் தகராறு காரணமாக, ஜெயந்தி தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நுங்கம்பாக்கத்தில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட ராயப்பேட்டையைச் சேர்ந்த வினோஷ் ஆனந்த், சக்தி வாசுதேவன், நிதிஷ்குமார் ஆகிய 3 கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 4.5 கிராம் மெத்தம்பெட்டமைன், 3 செல்போன்கள் பறிமுதல் செய்தனர். விசாரணையில், அமித் என்பவர் ஆன்லைன் மூலம் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் விற்பனை செய்தது கண்பிடிக்கப்பட்டது. இதனையடுத்து, போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
வெளிநாட்டு கைதிகளுக்கு, அடிப்படை வசதிகள் இல்லை என, சென்னை உயர்நீதிமன்றத்தில் நைஜீரியாவைச் சேர்ந்த கைதி கிங்க்ஸ்லி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுகுறித்து விசாரணை செய்த நீதிமன்றம், ‘வெளிநாட்டு சிறைக் கைதிகளாக இருந்தாலும் அவர்களை மனிதத்தன்மையுடன் நடத்த வேண்டும். அவர்களை நாம் எப்படி நடத்துகிறோம் என்பதை வைத்தே அந்த நாட்டில் நம் நாடு குறித்து மதிப்பீடு செய்யப்படும் என நீதிமன்றம் கூறியது.
சென்னையை அடுத்த திருவள்ளுர் அருகே உள்ள புல்லரம்பாக்கம் என்ற கிராமத்தில் கிருஷ்ணன் கோவில் அமைந்திருந்தது. இந்த கோவில் 1979ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட கோவில் ஆகும். இந்த கோவில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தது. இதுபற்றி சமூக ஆர்வலர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கோவிலை இடிக்க உத்தரவிட்டது. இதன்பேரில் வருவாய் அதிகாரிகள் இன்று கோவிலை அகற்றினர்.
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அல்பாசித் (26). இவர், புரசைவாக்கம் டாக்டர் அழகப்பா சாலையில் உள்ள தனியார் ஆம்புலன்ஸ் சர்வீஸ் நிறுவனத்தில் கடந்த 8 மாதங்களாக டிரைவராக பணியாற்றி வந்தார். இவரை ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதத்திற்கு பிரசாரம் மற்றும் ஆள் சேர்த்தது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமையினர் இன்று (ஜன.28) கைது செய்து புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
திருவெற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, திரு.வி.க. நகர், அம்பத்துார், அண்ணா நகர் மற்றும் ஆவடி மாநகராட்சி பகுதியில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும். பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக குடிநீரை சேமித்து வைக்க வேண்டும். அவசர குடிநீர் தேவைக்கு, cmwssb.tn.gov.in எந்த இணையத்தில் அல்லது 044- 4567 4567 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, லாரி குடிநீர் பெற்று கொள்ளலாம் என அதிகாரிகள் கூறினர். ஷேர் பண்ணுங்க
புழல் பகுதியில் உள்ள 300 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட சுத்திகரிப்பு நிலையத்தின் பிரதானக் குழாய்களில் நீர் அளவீடு கருவிகளை பொருத்துவதற்காக பணிகள் இன்று காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற இருக்கிறது. இதனால், 1 முதல் 8 மண்டலங்கள் மற்றும் ஆவடி நாகம்மை நகர் உள்ளிட்ட பகுதிகளில் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் நிறுத்தம் செய்யப்படும் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
பனிமூட்டம் காரணமாக வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதியதில் 5 பேர் காயம் அடைந்தனர். ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான பனிமூட்டம் நிலவி வந்தது. அப்போது, சாலையில் சென்று கொண்டிருந்தபோது 4 வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், 5 பேர் படுகாயம் அடைந்த நிலையில் ஒரு குதிரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மாநகராட்சியின் டெண்டர் மூலம் தேர்வாகும் ஒப்பந்ததாரர்கள் 40 சமையலறைகளை பராமரிக்க நேரிடும். FSSAI வழிமுறைகளின் படி உரிய முறையில் செயல்பட வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது. உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றாவிட்டால் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு ஒரு பள்ளிக்கு 3,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மேலும் அவர்களின் ஒப்பந்தம் உடனடியாக ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்
காலை உணவு திட்டத்திற்கான உணவை சமைத்து கொடுக்கும் பணிகளை அவுட்சோர்சிங் செய்ய மாநகராட்சி முடிவெடுத்துள்ளது. வடசென்னையில் 9,956, மத்திய சென்னையில் 13,052, தென் சென்னையில் 9,583 மாணவர்கள் பயன்பெறுவர். தூய்மை, மிகவும் பாதுகாப்பான முறையில் உணவை கொண்டு செல்லுதல், போதிய அளவில் உணவு, சரியான நேரத்தில் விநியோகம், தரமான உணவு போன்றவற்றை உறுதி செய்யப்பட உள்ளது. இதற்காக ரூ.14 கோடிக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.