India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பெண்களை துரத்தி சென்று தாக்க முற்பட்டதாக எழுந்த புகாரில் 4 பிரிவுகளின் கீழ் கானத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வீடியோ அடிப்படையில் கார் எண்கள் கண்டறியப்பட்டு இளைஞர்களை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைப்புக்கப்பட்டுள்ளது. பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து இளைஞர்களை தேடி வருகிறது.
சென்னை மெட்ரோ நிலையங்களின் மாதாந்திர பார்க்கிங் பாஸ்கள் வரும் பிப்.1ஆம் தேதி முதல் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. மேலும், இனி அனைத்து மெட்ரோ நிலையங்களில் முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து, 2025 ஆம் ஜனவரியில் பார்க்கிங் பாஸ்கள் பெற்றவர்கள் அதன் முடிவு காலம் வரை பாஸ்க்கான சலுகைகளை உபயோகித்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெக கட்சி மாவட்ட செயலாளர்கள் 2ஆவது பட்டியல் வெளியாகி உள்ளது. இதில், புதிதாக 10 மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். சென்னை புறநகர் – சரவணன், தென் சென்னை (வடக்கு) – அப்புனு, தென் சென்னை (தெற்கு) – தாமு, அம்பத்தூர் – பாலமுருகன், தருமபுரி மேற்கு – எம்.சிவா, கள்ளக்குறிச்சி மேற்கு – பிரகாஷ், நாகை – சுகுமார், புதுக்கோட்டை – பர்வேஸ், மதுரை மேற்கு – தங்கப்பாண்டி, கன்னியாகுமரி – கிருஷ்ணகுமார்.
வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த 41 வயது பெண் ஒருவர், எம்.கே.பி. நகரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வரும் அறிவழகன் (53) என்பவர், தனது அறையில் வைத்து அந்த 41 வயது பெண் ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், அறிவழகனை எம்.கே.பி. நகர் போலீசார் நேற்று (ஜன.28) கைது செய்தனர்.
23ஆவது தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள், வரும் பிப்.17 முதல் 20ஆம் தேதி வரை சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் நடைபெறுகிறது. இதில் இந்தியா முழுவதிலும் இருந்து 1,700க்கும் மேற்பட்ட பாரா தடகள வீரர், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். பாராலிம்பிக்கில் 3 பதக்கம் வென்ற உயரம் தாண்டுதல் வீரர் மாரியப்பன், ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்ற சுமித் அன்டில் பங்கேற்கின்றனர்.
சென்னையில் கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (தமிழ்நாடு அரசு நிறுவனம்). ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிய Welder, Piping Fabricator, Piping Fitter, Structure Fabricator, Structure Fitter, Millwright Fitter, Grinder/Gas cutter மற்றும் Piping Foreman ஆகிய பணிகளுக்கான ஆட்கள் தேவைப்படுகிறார்கள் எனவும், விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணபிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் நேற்று (ஜன.28) அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ். முன்னிலையில், நடிகர் அஜய் வாண்டையார் தலைமையில், முக்குலத்தோர் புலிப்படையின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் வெள்ளைச்சாமி, மதுரை மாவட்ட திமுகவைச் சேர்ந்த இராமகிருஷ்ணன், நெல்லை மாவட்ட திமுக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த ஆர்.விக்னேஷ்வரன் உள்ளிட்ட மாற்று கட்சிகளைச் சேர்ந்த 700 பேர் கட்சியில் இணைந்தனர்.
சென்னை தேனாம்பேட்டையில் 2 குழந்தைகளின் கழுத்தை அறுத்துவிட்டு, தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (ஜன.28), காயமடைந்த 2 குழந்தைகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாய் ஜெயந்தி (35) உயிரிழந்தார். குடும்பத் தகராறு காரணமாக, ஜெயந்தி தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நுங்கம்பாக்கத்தில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட ராயப்பேட்டையைச் சேர்ந்த வினோஷ் ஆனந்த், சக்தி வாசுதேவன், நிதிஷ்குமார் ஆகிய 3 கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 4.5 கிராம் மெத்தம்பெட்டமைன், 3 செல்போன்கள் பறிமுதல் செய்தனர். விசாரணையில், அமித் என்பவர் ஆன்லைன் மூலம் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் விற்பனை செய்தது கண்பிடிக்கப்பட்டது. இதனையடுத்து, போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
வெளிநாட்டு கைதிகளுக்கு, அடிப்படை வசதிகள் இல்லை என, சென்னை உயர்நீதிமன்றத்தில் நைஜீரியாவைச் சேர்ந்த கைதி கிங்க்ஸ்லி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுகுறித்து விசாரணை செய்த நீதிமன்றம், ‘வெளிநாட்டு சிறைக் கைதிகளாக இருந்தாலும் அவர்களை மனிதத்தன்மையுடன் நடத்த வேண்டும். அவர்களை நாம் எப்படி நடத்துகிறோம் என்பதை வைத்தே அந்த நாட்டில் நம் நாடு குறித்து மதிப்பீடு செய்யப்படும் என நீதிமன்றம் கூறியது.
Sorry, no posts matched your criteria.