Chennai

News January 31, 2025

CRIME STORY: தந்தை – மகள் சடலமாக மீட்பு 2/3

image

சம்பவத்தன்று, சிந்தியாவின் தந்தை சாமுவேல் உடல்நலம் பாதிக்கப்பட்டு திடீரென உயிரிழந்தார். அந்த நேரத்தில் வெளிநாடு செல்வது பற்றி பேசியதால் எபினேசர் – சிந்தியா இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சாமுவேல் சடலத்தை வைத்துக்கொண்டு இருவரும் சண்டை போட்டுள்ளனர். அப்போது ஆத்திரம் அடைந்த எபினேசர், சிந்தியாவை தாக்கி வேகமாக கீழே தள்ளிவிட்டுள்ளார். இதில், சிந்தியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News January 31, 2025

CRIME STORY: தந்தை – மகள் சடலமாக மீட்பு 1/3

image

வேலுரைச் சேர்ந்தவர்கள் சிந்தியா மற்றும் அவரது தந்தை சாமுவேல். சிந்தியாவுக்கு, திருமணமாகாத எபினேசர் என்பவர் உடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. தந்தை சாமுவேல் டயாலிசிஸ் நோயாளி என்பதால், சென்னைக்கு அடிக்கடி வருவதுண்டு. இதனால், சிந்தியாவுக்கும், எபினேசருக்கும் நெருக்கம் அதிகமானது. அடிக்கடி சென்னை வந்து செல்ல சிரமமானதால், கடந்தாண்டு செப்., மாதம் இருவரும் சென்னையில் வீடு எடுத்து தங்கினர்.

News January 31, 2025

தந்தை, மகள் மர்ம மரணம்: 4 மாதங்களுக்கு பிறகு மீட்பு

image

திருமுல்லைவாயல் பகுதியில் தந்தை, மகள் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஓமியோபதி மருத்துவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. பூட்டியிருந்த வீட்டுக்குள் 4 மாதங்களாக கிடந்த தந்தை சாமுவேல், மகள் விந்தியா உடல்களை போலீசார் கைப்பற்றினர். விந்தியாவுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான ஓமியோபதி மருத்துவர் எபிநேசரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 31, 2025

சென்னையில் நாளை ட்ரோன்கள் பறக்க தடை

image

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின்கீழ் செயல்படும் தேசிய மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டு நிறுவனத்தில், காது கேளாதோர் – பார்வையற்றோரின் 3-வது தேசிய மாநாடு நாளை (ஜன.31) நடைபெறவுள்ளது. மாநாட்டில் பங்கேற்க குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் வருகிறார். இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கையாக சென்னையில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

News January 30, 2025

சென்னையில் இன்று இரவு ரோந்து பணி விவரம்

image

சென்னையில் இன்று (30.01.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வரியாக உள்ளது. மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள கவலைகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News January 30, 2025

OLA, UBER மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை

image

தமிழகத்தில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் OLA, UBER மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என ஓட்டுநர்கள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. ஓட்டுநர் சங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆட்டோ மீட்டர் கட்டணத்தை போக்குவரத்துத்துறை உயர்த்த வேண்டும், பேச்சுவார்த்தை நடத்தவில்லையென்றால், பிப்.1ஆம் தேதி முதல் ஓட்டுநர் சங்கம் அறிவித்த கட்டணம் வசூல் செய்யப்படும் என ஓட்டுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

News January 30, 2025

மெட்ரோவில் பெண் பொறியாளர்களுக்கு வேலை

image

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பெண் பொறியாளர்கள் (சிவில்) உதவி மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 2 வருடங்கள் அனுபவம் கொண்ட 30 வயதுக்கு உட்பட்டவர்கள் வரும் பிப்.10ஆம் தேதிக்குள் chennaimetrorail.org என்ற இணையதளத்தில் <>விண்ணப்பிக்கலாம்<<>>. மாதம் ரூ.62,000 சம்பளம். இந்த முயற்சி, பொறியியல் பணியாளர்களிடையே பெண்களின் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்தும்.

News January 30, 2025

தீவிரவாத அமைப்பின் தலைவர் கைது

image

சென்னை விமான நிலையத்தில் தீவிரவாத அமைப்பின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய தெலுங்கானாவைச் சேர்ந்தவர் ஜக்ரியா. கலீஃபா என்ற தீவிரவாத அமைப்பின் இந்திய நாட்டு தலைவராக செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், விமானம் மூலம் இலங்கைக்கு செல்ல முயன்ற அவரை என்.ஐ.ஏ அதிகாரிகள் போலீசார் பாதுகாப்புடன் கைது செய்தனர். தொடர்ந்து, அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

News January 30, 2025

குத்துசண்டை வீரர் வெட்டிக்கொலை

image

திருவல்லிக்கேணி அருகே குத்துச்சண்டை வீரர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் வீட்டருகே நின்று கொண்டிருந்த தனுஷ் (24) என்ற என்பவரை அடையாளம் தெரியாத மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. தடுக்கச் சென்ற தனுஷின் நண்பர் அருண் என்பவருக்கும் கழுத்தில் வெட்டு விழுந்தது. தனுஷ் மீது 2 வழக்குகள் உள்ள நிலையில், பழிவாங்குதலா? என விசாரணை நடந்து வருகிறது.

News January 30, 2025

நாங்கள் காரை இடிக்க வில்லை

image

ECR சாலையில் பெண்களின் காரை துரத்தி சென்ற புகாரில், “2 கார்களில் வந்த நபர்கள் எங்களை துரத்தி வந்து வழிமறித்து, எங்கள் காரை ஏன் இடித்து விட்டு சென்றீர்கள்? எங்கள் காரை நீங்கள் இடித்து விட்டு காரை நிறுத்தாமல் சென்றதால் உங்களை துரத்தி வந்து பிரச்னையை தீர்த்துக் கொள்ளலாம் என வந்ததாக அந்த மர்ம கும்பல் தெரிவித்தனர். ஆனால் நாங்கள் அதுபோன்று காரை இடிக்கவில்லை” என பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!