Chennai

News January 31, 2025

நேரில் ஆஜரான தமிழக உள்துறை செயலாளர்

image

சென்னை உயர்நீதிமன்ற எச்சரிக்கையை அடுத்து தமிழக உள்துறை செயலாளர் தீரஜ்குமார் நேரில் ஆஜரானார். குற்றப்பத்திரிகைகள் தாமதம் தொடர்பாக உள்துறை செயலாளர் இன்று நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும், மீறினால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என நீதிபதி எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

News January 31, 2025

நித்தியானந்தா வழக்கை தள்ளுபடி செய்த ஐகோர்ட்

image

மடங்களை நிர்வகிக்க, தக்காரை நியமித்து அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி இந்தியாவிலேயே இல்லாத நித்தியானந்தா வழக்கு தாக்கல் செய்துள்ளதாக கூறி, மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணையில், அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அருண் நடராஜன், நித்தியானந்தா தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வடாரில் இருக்கிறார் எனத் தெரிவித்தார். 

News January 31, 2025

அண்ணாவின் 56ஆவது நினைவுநாள் பேரணி

image

அண்ணாவின் 56ஆவது நினைவுநாளினையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு நிர்வாகிகள் உள்ளிட்டோர் வரும் பிப்.3ஆம் தேதி காலை 7 மணிக்கு அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளனர். இதையடுத்து, வாலாஜா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகிலிருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கம் வரை அமைதிப் பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

News January 31, 2025

குத்துச்சண்டை வீரர் கொலை வழக்கில் 9 பேர் கைது

image

சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரரான தனுஷ் (24) என்பவருக்கு அவரது ஏரியாவை சேர்ந்த இளைஞர்களுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று (ஜன.30) அந்த கும்பல் தனுஷை ஓடஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்துள்ளது. முன்பகை காரணமாக தனுஷ் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்தது. இந்த வழக்கில் 9 பேர் கைதாகினர்.

News January 31, 2025

ஏசி வெடித்ததில் பெண் உயிரிழப்பு

image

சென்னையை அடுத்த ஜமீன் பல்லாவரம் பகுதியில் உள்ள வீட்டில், நள்ளிரவில் ஏசி வெடித்ததில் பேராசியர் தனலஷ்மி (44) என்பவர் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திடீரென சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று கதவை உடைத்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

News January 31, 2025

துணை ராணுவத்தில் டிரைவர் வேலை

image

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. டிரைவர், ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். ரூ.21,700 – ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். உடற்தகுதி தேர்வு, திறன் தேர்வு, எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, பரிசோதனை அடிப்படையில் தேர்வு செய்யப்படும். பிப்.3ஆம் தேதிக்கு மேல் <>விண்ணப்பிக்கலாம்<<>>. ஷேர்

News January 31, 2025

சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்

image

துணை ஜனாதிபதி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் வருகையை முன்னிட்டு, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நாளை (ஜன.31) ம‌திய‌ம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் அனைத்து வணிக வளாகங்களும் விமான நிலையம் முதல் ஈ.சி.ஆர்., வரை உள்ள சாலையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாற்று பாதை வகுக்கப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் வருந்த வேண்டாம்.

News January 31, 2025

காரில் கொடி பொருத்திய நபர் திமுக பிரமுகர் இல்லை

image

முட்டுக்காட்டில் பெண்கள் துரத்தப்பட்ட சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே 2 பேர் கைதான நிலையில், மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், காரில் கொடி பொருத்திய நபர் திமுக பிரமுகர் இல்லை எனவும், மோசடி வழக்குகளில் தொடர்புடைய சந்துரு காரில் திமுக கொடியுடன் வலம் வந்துள்ளார் எனவும் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

News January 31, 2025

CRIME STORY: தந்தை – மகள் சடலமாக மீட்பு 3/3

image

தந்தை, மகள் இருவரும் இறந்த அதிர்ச்சியில் செய்வதறியாமல் எபினேசர் திகைத்துபோய், வீட்டில் ஏ.சி.யை ஆன் செய்துவிட்டு கதவை பூட்டிவிட்டு எபினேசர் தனது சொந்த ஊரான காஞ்சிபுரத்திற்கு தப்பிச் சென்றுள்ளார். பிறகு தனது மீது சந்தேகம் வராமல் இருப்பதற்காக கடந்த 4 மாதங்களாக வீட்டு வாடகை செலுத்தி வந்துள்ளார். ஏ.சி. ஆன் பண்ணியே இருந்ததால், இறந்த இருவரது உடல்களும் அழுகுவதற்கு கால தாமதம் ஏற்பட்டுள்ளது.

News January 31, 2025

CRIME STORY: தந்தை – மகள் சடலமாக மீட்பு 2/3

image

சம்பவத்தன்று, சிந்தியாவின் தந்தை சாமுவேல் உடல்நலம் பாதிக்கப்பட்டு திடீரென உயிரிழந்தார். அந்த நேரத்தில் வெளிநாடு செல்வது பற்றி பேசியதால் எபினேசர் – சிந்தியா இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சாமுவேல் சடலத்தை வைத்துக்கொண்டு இருவரும் சண்டை போட்டுள்ளனர். அப்போது ஆத்திரம் அடைந்த எபினேசர், சிந்தியாவை தாக்கி வேகமாக கீழே தள்ளிவிட்டுள்ளார். இதில், சிந்தியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

error: Content is protected !!