Chengalpattu

News January 11, 2025

வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை பெற அழைப்பு

image

செங்கல்பட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில், 10ம் வகுப்பு தோல்வி, தேர்ச்சி மற்றும் அதற்கும் மேலான கல்வித் தகுதிகளை பெற்று, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்குகிறது. இதில், விண்ணப்பிக்க மார்ச் மாதம் 10ம் தேதிக்குள், வங்கிக் கணக்கு புத்தகத்துடன் நேரில் ஆஜராகி சமர்ப்பிக்கலாம் என ஆட்சியர் அருண் ராஜ் தெரிவித்துள்ளார்.

News January 11, 2025

மனு வழங்கியவுடன் வீடு ஒதுக்கீடு செய்த ஆட்சியர்

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், செங்கல்பட்டு மாவட்டம், மாமண்டூரை சேர்ந்த இரண்டு கால்களும் செயலிழந்த சோபனா என்ற மாற்றுத்திறனாளி மாவட்ட ஆட்சியர் அருண் ராஜ் அவர்களிடம் வீடு வழங்க வேண்டி மனு அளித்திருந்தார். அவருக்கு கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்து ஆணை வழங்கப்பட்டது. இதற்காக மாவட்ட ஆட்சியார் ச.அருண்ராஜ், அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

News January 10, 2025

செய்கையால் சாதனை செய்த சிறுமியை பாராட்டிய ஆட்சியர்

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மதுராந்தகம் வட்டம் சிறுகளத்தூர் கிராமத்தை சேர்ந்த கவியாழினி என்ற ஒரு வயது 3 மாத குழந்தை 1 நிமிடம் 30 வினாடியில் 20 செய்கைகளை செய்து பன்னாட்டு உலக சாதனை நிகழ்த்தியதை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அருண் ராஜ் அவர்களிடம் வாழ்த்துபெற்று சான்றிதழ் மற்றும் பதக்கங்களை பெற்றுக்கொண்டார்.

News January 10, 2025

இன்று முதல் கூடுதல் பேருந்துகள் இயக்கம்

image

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் இன்று முதல் ஜன 13 வரை சென்னையிலிருந்து தினமும் இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 5,736 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 21,904 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. கிளாம்பாக்கம் மஃப்சல் புறநகா் பேருந்து முனையத்திலிருந்து, புதுச்சேரி, கடலூா், சிதம்பரம், திருச்சி, செங்கோட்டை, கோவை, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

News January 10, 2025

செங்கல்பட்டு மக்களுக்கு நற்செய்தி!

image

சட்டப்பேரவையில் நேற்று (ஜன.9) கேள்வி நேரத்தின் போது தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா பேசுகையில், “வண்டலூர் – கேளம்பாக்கம் இணைப்பு சாலையை ஒட்டிய பகுதிகள் வேகமாக வளர்ந்து வருகிறது. எனவே இதை இருவழி பாதையாக மாற்றிக் கொடுத்தால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுக்கு உதவியதாக இருக்கும்” என்றார். இதற்கு அமைச்சர் எ.வ.வேலு, ”இந்த ஆண்டிலேயே திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்படும்” என பதிலளித்தார்.

News January 10, 2025

பெண்ணை எரித்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

image

புதுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன்கள் (44) – சுகன்யா (38) தம்பதி. வெங்கடேசன் வெளிநாட்டில் வேலை செய்த நிலையில், சுகன்யா புதுப்பாக்கத்தில் ஜெராக்ஸ் கடை நடத்தியபோது குமார் (56) என்பவரிடம் பேசி வந்தார். திடீரென பேசுவதை நிறுத்திய சுகன்யாவை, 2022ஆம் ஆண்டு குமார் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தார். இந்நிலையில், செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் நேற்று (ஜன.9) குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

News January 10, 2025

பலூன் திருவிழா தொடங்கியது

image

சென்னை கிழக்கு கடற்கரை சாலை கோவளம் அருகே உள்ள திருவிடந்தையில் சர்வதேச பலூன் திருவிழா இன்று (ஜன.10) தொடங்கியது. 12ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் திருவிழாவில், பிரான்ஸ், பிரேசில், பெல்ஜியம், இங்கிலாந்து, ஜப்பான், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து குழந்தைகளை கவரும் வகையில் சிறுத்தை, ஓநாய், யானைகள், உருவம் கொண்ட பலூன்களும் வெப்ப காற்று பலூன்களும் பறக்க விடப்படுகின்றன.

News January 9, 2025

பொங்கல் தொகுப்பு வழங்குவதை துவக்கி வைத்த ஆட்சியர்

image

காட்டாங்கொளத்தூர் வட்டம் வல்லம் ஊராட்சியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ், வழங்கினார். இதில் செங்கல்பட்டு சார் ஆட்சியர் வெ.நாராயணசர்மா, ஆட்சியர் (பயிற்சி) மாலதி ஹெலன், மாவட்ட வழங்கல் அலுவலர் சாகிதா பர்வீன், முதுநிலை மண்டல மேலாளர் ரேணுகாம்பாள், மண்டல இணைப்பதிவாளர் நந்தகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News January 9, 2025

திருவிடந்தையில் 20 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச பலூன் திருவிழா

image

கிழக்கு கடற்கரை சாலை கோவளம் அடுத்த திருவிடந்தை பகுதியில் 20க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் சர்வதேச பலூன் திருவிழா நாளை (ஜன.10) கோலாகலமாக தொடங்க உள்ளது. தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் குளோபல் மீடியா பாக்ஸ் சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தொடர்ந்து 10வது ஆண்டாக நடைபெறும் இவ்விழா ஜன.10 – 12 ஆகிய 3 நாட்கள் நடைபெறும். இதை சிறப்பாக நடத்த அமைச்சர் ராஜேந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.

News January 9, 2025

தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் பணியிடை மாற்றம்

image

தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலராக சோழிங்கநல்லூர் வட்டார போக்குவரத்து அலுவலர் யுவராஜ் என்பவர் கூடுதலாக கவனித்து வந்தார். இந்நிலையில் ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையராக உதவி செயலராக பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆர்டிஓ உதவியாளராக இருந்த குமரகுரு கூடுதல் பொறுப்பாக ஆர்டிஓ பணிகளை கவனிப்பார் என உத்தரவிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!