Chengalpattu

News January 30, 2025

தீவிரவாத அமைப்பின் தலைவர் கைது

image

சென்னை விமான நிலையத்தில் தீவிரவாத அமைப்பின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய தெலுங்கானாவைச் சேர்ந்தவர் ஜக்ரியா. கலீஃபா என்ற தீவிரவாத அமைப்பின் இந்திய நாட்டு தலைவராக செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், விமானம் மூலம் இலங்கைக்கு செல்ல முயன்ற அவரை என்.ஐ.ஏ அதிகாரிகள் போலீசார் பாதுகாப்புடன் கைது செய்தனர். தொடர்ந்து, அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

News January 30, 2025

நாங்கள் காரை இடிக்க வில்லை

image

ECR சாலையில் பெண்களின் காரை துரத்தி சென்ற புகாரில், “2 கார்களில் வந்த நபர்கள் எங்களை துரத்தி வந்து வழிமறித்து, எங்கள் காரை ஏன் இடித்து விட்டு சென்றீர்கள்? எங்கள் காரை நீங்கள் இடித்து விட்டு காரை நிறுத்தாமல் சென்றதால் உங்களை துரத்தி வந்து பிரச்னையை தீர்த்துக் கொள்ளலாம் என வந்ததாக அந்த மர்ம கும்பல் தெரிவித்தனர். ஆனால் நாங்கள் அதுபோன்று காரை இடிக்கவில்லை” என பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

News January 30, 2025

ECR சம்பவம்: 2 தனிப்படைகள் அமைப்பு

image

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பெண்களை துரத்தி சென்று தாக்க முற்பட்டதாக எழுந்த புகாரில் 4 பிரிவுகளின் கீழ் கானத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வீடியோ அடிப்படையில் கார் எண்கள் கண்டறியப்பட்டு இளைஞர்களை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைப்புக்கப்பட்டுள்ளது. பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து இளைஞர்களை தேடி வருகிறது.

News January 29, 2025

ரூ.23.5 கோடி மதிப்புள்ள 23.48 கிலோ கஞ்சா பறிமுதல்

image

தாய்லாந்து நாட்டிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.23.5 கோடி மதிப்புடைய 23.48 கிலோ உயர் ரக பதப்படுத்தப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. விமான சுங்க அதிகாரிகள், ஒரு பெண் உள்பட கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்து விசாரித்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

News January 29, 2025

மதுராந்தகம் ரயில்வே மேம்பாலத்தில் விபத்து

image

மதுராந்தகம் ரயில்வே மேம்பாலத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஜமீன் எண்டத்தூர் பகுதியைச் சேர்ந்த வசந்த் என்பவர் பணியை முடித்துவிட்டு தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது மாம்பாக்கம் பகுதியில் இருந்து மதுராந்தகம் நோக்கி ஜீவகுமார் என்பவர் சென்று கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக 2 பைக்குகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

News January 29, 2025

டிப்பர் லாரி மோதி இருவர் உயிரிழப்பு

image

கூவத்தூர் அடுத்த மலையூர் கிராமத்தைச் சேர்ந்த சேகர், நேற்று முன்தினம் (ஜன.27) சொந்த பணி நிமித்தமாக தனது டூவீலரில் பரமேஸ்வரமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவருடன் கல்பாக்கம் நோக்கி சென்றார். அப்போது எதிரே வந்த டிப்பர் லாரி ஒன்று இவர்கள் மீது மோதியது. இதில் சேகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வந்த ராமசந்திரன் நேற்று (ஜன.28) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News January 28, 2025

ஜன.31ல் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைதீர் முகாம்

image

செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் அறிக்கையில்,  மாற்றுத்திறனாளிகளுக்கான மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் தலைமையில் ஜன.31ஆம் தேதி அன்று காலை 10 மணி முதல் மக்கள் குறை தீர்க்கும் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. மாற்றுத்திறனாளிகள் இதில், கலந்துகொண்டு அடையாள அட்டை, மருத்துவ சான்றிதழ், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் நகல், குடும்ப அட்டை நகலுடன் தங்கள் மனுக்களை அளித்து பயன்பெறலம்.

News January 28, 2025

முதல்வர் மருந்தகம் அமைக்க அழைப்பு

image

செங்கல்பட்டில், முதல்வர் மருந்தகம் அமைக்க, விருப்பமுள்ள தொழில் முனைவோர் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் முதல்வர் மருந்தகம் அமைக்க, பி.பார்ம், டி.பார்ம் சான்று பெற்றவர்கள், முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ள தொழில்முனைவோர், இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.

News January 28, 2025

ஆன்லைன் மோசடிகளை சைபர் கிரைம் போலீசில் தெரிவியுங்கள்

image

கடந்த 4 ஆண்டுகளில், ரூ.1.21 கோடி மீட்கப்பட்டு பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள சைபர் கிரைம் குற்றவாளிகளை பிடிக்கும் பணியில், தனிப்படை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சைபர் குற்றங்கள் நடக்காமல் இருக்க விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை, சைபர் கிரைம் போலீசார் நடத்தி வருகின்றனர். cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம்.

News January 28, 2025

தனியார் ஊழியர்களை குறிவைக்கும் ஆன்லைன் மோசடி

image

தனியார் நிறுவன ஊழியர்கள், விடுமுறை நாட்களில் வீடுகளில் இருக்கும்போது, மொபைல்போனில் அழைக்கும் சைபர் குற்றவாளிகள், ஷேர் மார்க்கெட்டில் அதிக பணம் கிடைப்பதாக கூறி மோசடி செய்கின்றனர். அதன்பின், அவர்களின் மொபைல் எண் சுவிட்ச் ஆப் செய்யப்படுகிறது. இதேபோல், போலியான இணையதளங்களை துவக்கி, அவற்றின் வாயிலாகவும் பல லட்சம் ரூபாய் பெற்ற மோசடிகளில் திடீரென இணையதளத்தை முடக்கிவிட்டு வெளியேறிகின்றனர்.

error: Content is protected !!