India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் இருந்து வட மற்றும் தென் மாவட்டங்களுக்கு வரும் 14-ஆம் தேதி 470 சிறப்பு பேருந்துகளும், 16, 17-ஆம் தேதிகளில் 365 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. மாதாவரத்தில் இருந்து 14,16,17-ஆம் தேதிகளில் 20 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதுமட்டுமல்லாமல், சென்னையில் இருந்து பெங்களூர், ஓசூர், நாகை, வேளாங்கண்ணி பகுதிகளுக்கு 135 பேருந்துகள் இயங்க உள்ளன.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 16.08.24 அன்று சுமார் 5000 பணிக்காலியிடங்களுக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்திலும், 044-27426020; 6383460933; 9486870577 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை பராமரிப்பு காரணமாக ஆக.14-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டிருந்தது. இதனை மேலும் 4 நாட்களுக்கு நீட்டித்து ஆக்.18-ஆம் தேதி வரை 55 மின்சார ரயில்களை ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. புதுச்சேரி – சென்னை, எழும்பூர் – சென்னை, எழும்பூர் – புதுச்சேரி, சென்னை கடற்கரை – மேல்மருவத்தூர், விழுப்புரம் – தாம்பரம் உள்ளிட்ட ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இதில், சாலை வசதி, குடிநீர், பட்டா, ஓய்வூதியம், உதவித்தொகை உள்ளிட்டவைகள் தொடர்பாக 393 மனுக்களை பெற்றார். மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே அடகு கடையை துளையிட்டு 60 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். கூடுவாஞ்சேரி அருகே பாண்டூரில் ஆறுமுகம் என்பவர் அடகு கடை நடத்தி வந்தநிலையில், நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு சென்றார். இன்று காலை அவர் கடையை திறந்து பார்த்தபோது கடையை துளையிட்டு கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பல்லாவரம் அருகே அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இதில், பல்லாவரம் சுற்றியுள்ள இடங்களில் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளன. இதற்கு காரணமான மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மக்கள் நலப்பணிகளை நிறைவேற்றாமல் இருக்கும் திமுக அரசை கண்டித்தும், மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வலியுறுத்தியும் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேல்மருவத்தூர் அருகே உள்ள சிறுநாகலூர் பகுதியில் ஏரி நிரம்பியதால், சாலையில் தண்ணீர் வெளியேறியது. நேற்று பெய்த கனமழை காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து இன்று அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் புகுந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், இன்று செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 109 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக, இன்று முதல் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. அதன்படி இந்த தடை உத்தரவானது, இன்று முதல் அமலுக்கு வர இருக்கிறது. இன்று காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 முதல் இரவு 10 மணி வரையும் வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஷேர் பண்ணுங்க.
செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு முதல் மழை பெய்து வருகிறது. தாம்பரம், சோழிங்கநல்லூர், பள்ளிக்கரணை, மீனம்பாக்கம், குரோம்பேட்டை, பல்லாவரம், பம்மல் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. உங்க ஏரியாவில் மழை பெய்கிறதா? என கமெண்டில் சொல்லுங்க.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பல்வேறு பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சித்தாலப்பாக்கம், வேங்கைவாசல், தாம்பரம், மேடவாக்கம், நூக்கம்பாளையம், ஒட்டியம்பாக்கம், அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம், சௌமியா நகர், முடிச்சூர் – மதனாபுரம், குறிஞ்சி நகர், சடகோபன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும். 2 மணிக்கு மேல் மின் விநியோகம் வழங்கப்படும்.
Sorry, no posts matched your criteria.