Chengalpattu

News January 9, 2026

செங்கல்பட்டு பெண் குழந்தைக்கு ரூ.50,000-/

image

பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <>கிளிக் <<>>(அ) செங்கை மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE NOW!

News January 9, 2026

செங்கை: மருத்துவ அவசரமா? Whats app-ல் தீர்வு!

image

செங்கல்பட்டு மக்களே.. தலைவலி, காய்ச்சல், தீக்காயம், உடல்நல அறிகுறிகள் உட்பட அனைத்து கேள்விகளுக்கும் உங்க WhatsApp-லேயே தீர்வு காண முடியும். <>ஆகஸ்ட்<<>> AI-யை பயன்படுத்தி புகைப்படமாகவோ, கேள்வியாகவோ பதிவிட்டு முதலுதவி பெறலாம். இந்த AI மூலம், உட்கொள்ள வேண்டிய மருந்துகள், அணுக வேண்டிய மருத்துவர்கள் மற்றும் பல விவரங்களை தமிழிலேயே தெரிந்துள்ளளலாம். 24×7 இயங்கும் இந்த AI-யை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News January 9, 2026

செங்கை: 250 கோழிகள் இலவசம்!

image

செங்கல்பட்டு மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News January 9, 2026

செங்கை: ஒரே இரவில் 20 வாகனங்கள் சூறை

image

சிங்கப்பெருமாள் கோவில் – ஸ்ரீபெரும்புதூர் சாலையில் தெள்ளிமேடு, ஆப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட வாகனங்களின் கண்ணாடிகளை மர்ம நபர்கள் நேற்றிரவு உடைத்து சேதப்படுத்தினர். மேலும், சில வாகனங்களின் பேட்டரிகளும் திருடப்பட்டுள்ளன. இந்தத் துணிகரச் சம்பவம் வாகன உரிமையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News January 9, 2026

செங்கை: சிலிண்டர் மானியம் – ஒரே ஒரு SMS போதும்!

image

உங்களுக்கு கேஸ் சிலிண்டர் மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.

News January 9, 2026

செங்கை: பொங்கல் பரிசில் பிரச்னையா? உடனே Call!

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (ஜன-8) முதல் அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.3000 பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. இதில் ஏதேனும் பிரச்சனை என்றால் புகார் அளிக்க மாவட்டம் சார்பில் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கை 94983 41045, 94450 00172, மதுராந்தகம் – 94450 00174, திருக்கழுகுன்றம் 94450 00173, திருப்போரூா் – 94457 96413, வண்டலூா் -94983 41047, 7. வட்ட வழங்கல் அலுவலா் செய்யூா் – 94450 00175.

News January 9, 2026

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மஞ்சள் அலெர்ட்!

image

தெற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளில் நாளை ஜன.10 அன்று மிக கன மழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஜன-11 அன்றும் மழை இருக்குமென்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே நாளை முதல் செங்கல்பட்டு மாவட்டத்தில் பரவலான மழையை எதிர்பார்க்கலாம். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

News January 9, 2026

செங்கல்பட்டில் பரபரப்பு!

image

செங்கல்பட்டு அருகே அடுக்குமாடி குடியிருப்பின் 8-வது தளத்திலிருந்து விழுந்து சிறுவன் நவீன் பலியானார். படுக்கையறை ஜன்னலில் பாதுகாப்பு கம்பிகள் இல்லாததால், சோபாவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் தவறி விழுந்தது விசாரணையில் தெரியவந்தது. கட்டுமான நிறுவனத்தின் அஜாக்கிரதையே உயிரிழப்புக்கு காரணம் எனக்கூறி குடியிருப்புவாசிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

News January 9, 2026

செங்கல்பட்டு ‌: ரு3000 பொங்கல் பரிசு… புகார் எண் அறிவிப்பு

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (ஜன. 8) முதல் அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.3000 பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. டோக்கன் விநியோகம் முடிந்த நிலையில், ரேஷன் கார்டில் உள்ள யார் வேண்டுமானாலும் கடைக்குச் சென்று பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம். ஏதேனும் புகார்கள் இருப்பின் 044-27426872 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

News January 9, 2026

செங்கல்பட்டு இன்று இரவு பணி காவலர் விவரம்

image

செங்கல்பட்டு நேற்று ( ஜனவரி-08) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!