Chengalpattu

News January 10, 2026

செங்கை: அடுத்தடுத்து அரங்கேறிய சம்பவங்கள்!

image

திருப்போரூர் அடுத்த வெங்கூர் கிராமத்தில் நேற்று அதிகாலை 9 கடைகளில் அடுத்தடுத்து பூட்டை உடைத்து பணம் கொள்ளை போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வியாபாரிகள் காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மேலையூர் பகுதியைச் சேர்ந்த விஷால் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 10, 2026

செங்கை: அனைத்து CERTIFICATES-ம் இனி Whatsapp-ல்!

image

செங்கல்பட்டு மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News January 10, 2026

செங்கை: மழையால் மின்தடையா? உடனே CALL!

image

செங்கல்பட்டு மக்களே.. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நேரத்தில் மின்தடை தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டால் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், லைன்மேன் வந்து சரிசெய்யவர். (அ) 9445850811 இந்த வாட்ஸ் ஆப் எண்ணிலும் புகார் செய்யலாம். SHARE IT!

News January 10, 2026

தாம்பரம்: 3 பேர் அதிரடி கைது!

image

வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் தாம்பரம் மதுவிலக்கு போலீசார் நடத்திய சோதனையில், கஞ்சா மற்றும் ஹெராயின் கடத்திய மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சரோஜ் குமார் (51), சகஜான் (31), ரகுமான் (38) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 25 கிலோ கஞ்சா மற்றும் 5 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. வெளிமாநிலங்களில் இருந்து போதைப்பொருட்களைக் கொண்டு வந்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

News January 10, 2026

கிளம்பாக்கத்தில் பரபரப்பு!

image

கிளம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே ஊரப்பாக்கம் சிக்னலில் இன்று அதிகாலை 2 மணியளவில் பெரும் விபத்து நிகழ்ந்தது. முன்னால் சென்ற வாகனம் திடீரென நின்றதால், பின்னால் வந்த பாரம் ஏற்றிய லாரி பிரேக் பிடித்தது. அப்போது லாரியிலிருந்த இரும்பு கம்பிகள் சரிந்து, அருகில் வந்த கார் மீது விழுந்தன. உயிர் சேதம் ஏற்படவில்லை இருந்த போதும் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

News January 10, 2026

செங்கல்பட்டில் துடிதுடித்து பலி!

image

சிங்கபெருமாள் கோவில் அடுத்த திருத்தேரி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால் அவரது மனைவி உண்ணாமலை (55) மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை விரக்தியில் உண்ணாமலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிங்கபெருமாள் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 10, 2026

செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

செங்கல்பட்டு இன்று (ஜனவரி-09) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 9, 2026

செங்கல்பட்டில் பிறந்த பிரபலங்களாக இவர்கள்…

image

✅ வஹீதா ரஹ்மான் – இந்தியாவின் புகழ் பெற்ற நடிகை
✅ நாசர் – புகழ் பெற்ற தமிழ் நடிகர்
✅ C.V ஸ்ரீதர் – புகழ்பெற்ற இயக்குனர்
✅ சுல்தான் பக்ஷ் – முதல் சுதந்திரப் போரின் போது ஆங்கிலேயர்களை கடுமையாக எதிர்த்த புரட்சியாளர்
✅ ஜெனரல் கிருஷ்ணசுவாமி சுந்தர்ஜி – ராணுவத் தளபதி (1986 – 1988)
✅ ஒவி அழககேசன் – செங்கல்பட்டின் முதல் நாடாளுமன்ற உறுப்பினர்

உங்களுக்கு தெரிந்த பிரபலங்களை ஷேர் பண்ணுங்க!

News January 9, 2026

இ.சி.ஆர்., சாலையில் போக்குவரத்து தடை

image

சென்னை – பாண்டிச்சேரி ஈ.சி.ஆர்., சாலையில் வரும் 11-ந்தேதி “அயர்ன் மேன் 5150 டிரையத்லான் – சென்னை இம்பேக்ட்” எனும் விளையாட்டு போட்டி நடைபெற உள்ளது. இதனால் வரும் ஜன.10-ந்தேதி இரவு முதல் மறுநாள் மதியம் வரை போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவளம் முதல் சூளேரிக்காடு வரை போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் பயன திட்டத்தை மாற்றியமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News January 9, 2026

செங்கல்பட்டு வாக்காளர்கள் கவனத்திற்கு…

image

செங்கல்பட்டு மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!