Chengalpattu

News September 10, 2024

செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம்

image

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜாக்) செங்கல்பட்டு மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (செப்டம்பர் 10) நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

News September 10, 2024

சடலத்தை இறக்கி விட்ட ஓட்டுநர், நடத்துநர் மீது நடவடிக்கை

image

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பீமாமண்டாவி 60 கடந்த 6ஆம் தேதி தனது இரு பேரன்களுடன் விக்கிரவாண்டிக்கு அரசு பேருந்தில் சென்றார். அப்போது பீமாமண்டாவிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து பேருந்து ஓட்டுநர் (ம) நடத்துநர் செங்கல்பட்டு அருகே பீமாமண்டாவி மற்றும் அவரது பேரன்களை நடுவழியில் இறக்கி விட்டு சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

News September 10, 2024

தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து அறிவிப்பு

image

சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடற்கரை – தாம்பரம் இரவு 8.25, 8.55, 10.20 மணி ரயில்கள் இன்றும் (10.9.24) நாளையும் ரத்து செய்யப்படுகிறது. கடற்கரை – தாம்பரம் இரவு 11.05, 11.30, 11.59 மணி ரயில்கள் இன்றும் நாளையும் எழும்பூரில் இருந்து இயக்கப்படும். கடற்கரை – கூடுவாஞ்சேரி இரவு 10.10, 10.40, 11.15 மணி ரயில்கள் இன்றும் நாளையும் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படவுள்ளது.

News September 10, 2024

முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டி தொடக்கம்

image

முதலமைச்சர் கோப்பைக்கான செங்கல்பட்டு மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாடு உடற்கல்வியியல் பல்கலைக்கழகம் மேலக்கோட்டையூரில் இன்று தொடங்கின. முதல் நாளான இன்று பள்ளி மாணவர்ளுக்கு தடகளம், கைப்பந்து மற்றும் இறகுப்பந்து போட்டிகளை மாவட்ட ஆட்சியர் சற்று முன் தொடங்கி வைத்தார். 11.9.24 கால்பந்து, ஹாக்கி, கேரம், 12.9.24 சிலம்பம், வாலிபால். 13.9.24 கபடி, கிரிக்கெட், செஸ், போன்ற போட்டிகள் நடைபெறும்.

News September 10, 2024

10 ஏக்கர் அரசு நிலத்தை மீட்கக்கோரி குறைதீர் கூட்டத்தில் மனு

image

திருக்கழுக்குன்றம் அடுத்த கருமாரப்பாக்கத்தில் அரசுக்கு சொந்தமான நிலம் கால்நடைகள் மேய்ச்சலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த நிலத்தை தனிநபர் ஒருவருக்கு அப்பகுதியை சேர்ந்த சிலர் ரூ.20 லட்சம் பெற்றுக் கொண்டு அரசு நிலத்தில் 10 ஏக்கரை விற்றுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க தாசில்தாருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

News September 10, 2024

பழங்குடியினர் மக்களுக்கு ரேஷன் கார்டு வழங்கிய மாவட்ட ஆட்சியர்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மாலை பழங்குடியினர் இன மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின்னணு குடும்ப அட்டைகள், மருத்துவ காப்பீடு அட்டைகள் மற்றும் புதியதாக வங்கி கணக்கு துவங்கிய புத்தகம் ஆகியவைகள் 52 நபர்களுக்கு மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்டது. இதனால் பழங்குடியினர் மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்திற்கு தேவையான பொருட்கள் கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

News September 10, 2024

செங்கல்பட்டு மாவட்டத்தில் மூன்று தொழில் குழுமங்கள்

image

தமிழகத்தில் ரூ.603.95 கோடி மதிப்பில் 43 தொழிற் குழுமங்கள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பல்லாவரத்தில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் தோல் பொருட்களுக்கான குழுமம் அமைக்கப்பட்டு வருகிறது. திருக்கழுக்குன்றம் முள்ளிகுளத்தூரில் புதிய தொழிற்பேட்டை அமைக்கும் பணி மற்றும் அச்சிறுப்பாக்கம் சித்த மருத்துவ மூலிகை பொருட்காட்சி, தயாரிப்பு குழுமம் அமைக்க பணிகள் நடைபெறுவதாக அமைச்சர் அன்பரசன் தெரிவித்தார்.

News September 9, 2024

கிணற்றில் மூழ்கி சாப்ட்வேர் இன்ஜினியர் பலி

image

சேலையூரை அடுத்த சந்தோஷபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மேத்யூ பால் (22). பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினராக பணியாற்றி வந்த இவர், வீட்டின் அருகே நண்பர்களுடன் இன்று மதியம் விவசாயக் கிணற்றில் குளித்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக சேலையூர் போலீசார் வழக்குபே பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 9, 2024

சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்

image

செங்கல்பட்டு தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் வார இறுதி விடுமுறை மற்றும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கடந்த 6ஆம் தேதி மாலை சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். நேற்று விடுமுறை முடிந்ததையடுத்து, கார், பைக் மற்றும் பேருந்துகளில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு திரும்பினர். பரனுார் சுங்கச்சாவடி அருகில் பழைய சாலை பெயர்த்து எடுக்கப்பட்டிருப்பதால், வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்து சென்றன.

News September 9, 2024

நாளை மக்கள் குறைதீர் முகாம்: அமைச்சர் அன்பரசன்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை மாலை 3 மணியளவில், மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம். மனுக்கள் மீது கள விசாரணை மேற்கொள்ளப்பட்டு, தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!