Chengalpattu

News January 19, 2026

செங்கல்பட்டு:குறைகளை ‘TN SMART’ தளத்தில் புகாராக அளிக்கலாம்

image

செங்கல்பட்டு மாவட்ட பொதுமக்கள், தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை ‘TN SMART’ இணையதளத்தில் புகாராக பதிவு செய்யலாம். இதற்கு, ‘புகார் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்கள் பெயர், முகவரி, மொபைல் எண், புகார் விவரம் மற்றும் அதன் புகைப்படத்தை சமர்ப்பிக்கவும். அவசர நிலைகளுக்கு 1070 அல்லது 1077-ஐ அழைக்கவும். உங்கள் புகாரின் நிலை மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News January 19, 2026

செங்கல்பட்டு:செவிலியர் பணிக்கு 999 பணியிடங்கள் அறிவிப்பு!

image

தமிழ்நாடு சுகாதார துறையில், செவிலியர் உதவியாளர் (தரம்-2) 999 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th & Nursing Assistants Course முடித்திருந்தால் போதும். மாத சம்பளம் ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் பிப்.08-க்குள் இங்கு <>க்ளிக் செய்து <<>>விண்ணப்பிக்கலாம். சூப்பர் வாய்ப்பு! உங்கள் நண்பருக்கு ஷேர் பண்ணுங்க.

News January 19, 2026

செங்கல்பட்டில் இனி தண்ணீர் பிரச்சினை இருக்காது!

image

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, நெமிலி பகுதியில், கிழக்கு கடற்கரை சாலை பகுதியில், 342.6 கோடி ரூபாய் செலவில், 5,161 ஏக்கர் பரப்பளவில், அமைய உள்ள மாமல்லன் நீர்த்தேக்கம் எனும் மாபெரும் திட்டப் பணிக்கு, தமிழக முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், அமைச்சர் அன்பரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

News January 19, 2026

செங்கல்பட்டு: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

image

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்

News January 19, 2026

செங்கல்பட்டு: மின் தடை புகாரா? மின்னல் வேகத்தில் தீர்வு!

image

செங்கல்பட்டு மக்களே உங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 19, 2026

செங்கல்பட்டில் FREEஆ காய்கறி வாங்கலாம் ! வாங்க..

image

நகர்ப்புற மக்கள் தங்கள் வீட்டு மாடியில் காய்கறிகளை பயிரிட மாடித் தோட்ட திட்டம் செயல்படுகிறது. இதன் மூலம் செடி வளர்ப்பு பை, தென்னை நார் கட்டி, 6 வகை காய்கறி விதை, உரங்கள் கொண்ட கிட்டை 50% மானியத்தில் பெறலாம். <>இங்கு <<>>கிளிக் செய்து விண்ணப்பிச்சு, உங்கள் மாடியில் விவசாயம் பண்ணுங்க. மேலும், தகவலுக்கு சென்னை தோட்டக்கலைத் துறை அதிகாரியை (9095970451) அழைக்கலாம். மாடி வைத்திருக்கும் நண்பருக்கு பகிருங்கள்

News January 19, 2026

செங்கல்பட்டு பெண்களுக்கு ரூ.5000 + ரூ.6000!

image

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் மூலம் கர்ப்பிணிகளுக்கு (5000+6000) வழங்கப்படுகிறது. இதன்படி கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு 3 தவணைகளில் ரூ.5,000 வழங்கப்பட்டு வருகிறது. பின்னர் இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக இருந்தால், அதற்கு ரூ.6000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகே உள்ள சுகாதார மையத்திலோ (அ) இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணபிக்கலாம். இதை உடனே ஷேர் பண்ணுங்க.

News January 19, 2026

செங்கல்பட்டு: தோழி கண் எதிரேயே ஆண் நண்பர் பலி

image

சென்னை மேற்கு மாம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார் (21). இவர், தனது தோழியான படூரைச் சேர்ந்த திவ்யா (25) என்பவருடன் போரூரில் உள்ள நண்பர் வீட்டுக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் குன்றத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம் அருகே சென்றபோது நிலை தடுமாறி விபத்து ஏற்பட்டது. இதில் தலையில் படுகாயம் அடைந்த பிரவீன்குமார், தனது தோழி கண் எதிரேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

News January 19, 2026

அறிவித்தார் செங்கல்பட்டு கலெக்டர்

image

முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் குறள் வார விழாவின் ஒரு நிகழ்வாக நாளை(செவ்வாய்க்கிழமை) செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மதியம் 2 மணி முதல் 3 மணிவரை திருக்குறள் ஒப்புவித்தல், ஓவியப்போட்டி போட்டி நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. முதல் பரிசாக ரூ.5,000 வீதம் முதல் 5 பேருக்கும், 2-வது பரிசாக ரூ.3000 வீதம் 5 பேருக்கும், 3-ம் பரிசாக ரூ.2000 வீதம் 5 பேருக்கும் பரிசு வழங்கப்படுகிறது. ஷேர்

News January 19, 2026

செங்கல்பட்டு இன்று இரவு பணி செய்யும் காவலர் விவரம்

image

செங்கல்பட்டு இன்று (ஜனவரி-18) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!