Chengalpattu

News January 18, 2026

இரவு காவல் பணி ரோந்து காவலர்கள் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு நகராட்சி மற்றும் மதுராந்தகம் நகராட்சி, மற்றும் மாமல்லபுரம், ஆகிய பகுதிகளில் தனித்தனி இரவு நேர ரோந்து பணிகள் செய்யும் அதிகாரிகளின் விவரங்கள் மற்றும் கைபேசி நம்பர், ஆகியவை அடங்கிய பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் இன்றுஇன்று 18.01.2026 இரவு நேர காவல் பணியாளர்களின் விவரங்கள் அடங்கிய பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது.

News January 18, 2026

செங்கல்பட்டு: கடன் தொல்லை நீக்கும் மகா பைரவர்

image

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரை அடுத்துள்ள மகேந்திரா சிட்டிக்கு மிக அருகில் மகா பைரவ ருத்ர ஆலயம் உள்ளது. இங்கு அஷ்டமி நாளில் 11 தீபங்கள் ஏற்றி, கால பைரவரை வணங்கினால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும் என்பது ஐதீகம். மேலும், வருடத்திற்கு ஒருமுறை இங்கு வந்தாலே ஆத்மா சுத்தமாகுமாம். கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News January 18, 2026

செங்கல்பட்டு: 12th, diploma, ITI முடித்தவரா நீங்கள்?

image

மத்திய அரசின் இந்திய அணுசக்தி நிறுவனத்தில் டெக்னீஷியன், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 114 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12th, டிப்ளமோ, ஐடிஐ படித்த 18-28 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.34,286-ரூ.55,932 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த <<>>லிங்கில் வரும் பிப்.04க்குள் விண்ணப்பிக்கலாம். 12th முடித்த அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News January 18, 2026

செங்கல்பட்டு: சொந்த தொழில் தொடங்க ஆசையா?

image

செங்கல்பட்டு மக்களே, வேலை தேடும் இளைஞர்களுக்கு தமிழக அரசின் UYEGP திட்டத்தின் கீழ் புதிதாக தொழில் துவக்க ரூ.15 லட்சம் கடனும் 25% மானியமும் வழங்குகிறது. இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க 45 வயதுக்கு உள் இருந்து 8-ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். குடும்ப வருமானம் வருடத்திற்கு ரூ.8 லட்சத்திற்கு கீழ் இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கில்<<>> சென்று விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை ஷேர்.

News January 18, 2026

செங்கையில் இனி வீட்டு வரி செலுத்துவது ஈஸி!

image

செங்கல்பட்டு மக்களே! வீட்டு வரி செலுத்தவோ (அ) ரசீது பெறவோ அரசு அலுவலகம் சென்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக தமிழக அரசு புதிய இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. <>இந்த இணையதளம் <<>>மூலம் நீங்கள் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி ஆகியவற்றை செலுத்தலாம். மேலும், ரசீதையும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் செய்யவும்.

News January 18, 2026

செங்கல்பட்டு: பிடித்த வேலை கிடைக்க இங்கு போங்க!

image

படித்து முடித்த உடனே வேலை கிடைக்க வேண்டும், அதிலும் பிடித்த வேலை கிடைக்க வேண்டும் என்பது பலரது ஆசையாக உள்ளது. தன் திறமை மீது பலருக்கு நம்பிக்கை இருந்தாலும், இறை வழிபாடு மூலமும் நமக்கு நல்லது நடக்கும் என்பது பலரது நம்பிக்கை. அந்த வகையில் நல்ல வேலை கிடைக்க செங்கல்பட்டில் வழி படவேண்டிய கோயில்கள் ✅ அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் சுவாமி கோயில் ✅ திருப்போரூர் கந்தசாமி கோயில். ஷேர் பண்ணிருங்க மக்களே!

News January 18, 2026

செங்கை: தமிழ் தெரிந்தால் போதும், அரசு வேலை!

image

ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 572 அலுவலக உதவியாளர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இந்த பணிக்கு சம்பளமாக ரூ.24,250 முதல் ரூ.53,330 வரை வழங்கப்படும். இந்த பணிக்கு தமிழ் தெரிந்திருப்பது கட்டாயம். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கின்<<>> மூலம் பிப்ரவரி 4ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்பண்ணுங்க. வேலை தேடும் ஒருவருக்காவது யூஸ் ஆகும்!

News January 18, 2026

செங்கை: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

செங்கல்பட்டு மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது <>pmjay.gov.in<<>> இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 3) விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 18, 2026

தாம்பரம் காவல் ஆணையர் அதிரடி உத்தரவு!

image

தாம்பரம் காவல் ஆணையரகத்துக்குள்பட்ட காவல் நிலையங்களில் பணியாற்றிய 4 காவல் ஆய்வாளா்கள் இடமாற்றம் செய்து, தாம்பரம் மாநகர காவல் ஆணையா் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். மேலும், 2 ஆய்வாளா்கள், 5 உதவி ஆய்வாளா்கள் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனா். மாநகர சைபா் குற்றப்பிரிவில் பணியாற்றி வந்த காவல் ஆய்வாளா் கே.சசிகுமாா், பல்லாவரம் டி3 காவல் நிலைய சட்டம்-ஒழுங்கு ஆய்வாளராக மாற்றப்பட்டுள்ளார்.

News January 18, 2026

மாமல்லபுரம்: பொங்கல் நாளில் பெரும் சோகம்!

image

மாமல்லபுரத்தில், நேற்று முன்தினம் (ஜன.16), கல்லூரி மாணவர்கள் இருவர் சுற்றுலா வந்த நிலையில் மாலை, கடற்கரையில் குளிக்க சென்றனர். அப்போது மாணவர்கள் இருவரும் எதிர்பாரத விதமாக ராட்சத அலையில் சிக்கி மாயமாகினர். இதனையடுத்து ஒருவரின் உடல் கரை ஒதுங்கிய நிலையில், மற்றொரு மாணவரை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். இது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!