India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிழக்கு தாம்பரம் ஆனந்தபுரம் அண்ணா தெரு மற்றும் ஆறுமுகம் தெரு அருகே இன்று அதிகாலை சுமார் 1:30 மணியளவில், பயங்கர சத்தத்துடன் வெடிச்சத்தம் கேட்டது. புகை வருவதை கண்ட அக்கம் பக்கத்தினர் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்து. சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் ஆய்வு செய்தபோது பனியன் துணிகளால் சுற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டு வெடித்தது தெரிந்தது.
வண்டலூர், மணிமங்கலம், ஒட்டேரி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர், பிரபல ரவுடி சிலம்பு என்கிற சிலம்பரசன்(30). தலைமறைவாக இருந்த அவரை, நேற்றிரவு போலீசார் மணிமங்கலத்தில் கைது செய்தனர். அப்போது, சிலம்பரசன் தப்பிக்க முயன்று கீழே விழுந்து கை, காலில் முறிவு ஏற்பட்டது. சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது 10 காவல் நிலையங்களில் 22 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமநாதபுரம் மற்றும் நாகை மாவட்டங்களைச் சேர்ந்த 19 மீனவர்கள், நேற்றிரவு இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர். நாகை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த 19 மீனவர்கள், கடந்த ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி விசைப்படகுகளில், கடலில் மீன் பிடித்த போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் ஆணையின்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் நடைபெற்று வரும் வழக்குகளையும் சமரசம் செய்து முடித்துக்கொள்வதற்கான தேசிய மக்கள் நீதிமன்றம் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த மக்கள் நீதிமன்றத்தில் பொதுமக்கள் மற்றும் வழக்காடிகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள தங்களது சொத்து வழக்குகள், வங்கி கடன், தனிநபர் கடன் சம்பந்தப்பட்ட வழக்குகள் தீர்வு காணலாம்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி), மூலம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 2 ஆயிரத்து 763 தேர்வு மையங்களில் குரூப்-2, 2ஏ முதல்நிலைத் தேர்வு இன்று நடைபெறவுள்ளது. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 42 மையங்களில் 21,640 பேர் தேர்வெழுதுகின்றனர். தேர்வின் அனைத்து நடவடிக்கைகளும் வீடியோ பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. என்றும் டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.
தாம்பரம் அடுத்த திருநீர்மலை, குரோம்பேட்டை, மெப்ஸ், தாம்பரம் இந்துமிஷன் சந்திப்பு, பல்லாவரம், கூடுவாஞ்சேரி, மறைமலை நகர் ஆகிய இடங்களில் எதிர் திசையில் வரும் வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த மூன்று நாட்களில் 1,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவ்வாகன உரிமையாளர்களிடமிருந்து ரூ.1.50 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை தொடரும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
சேலையூர் பகுதியைச் சேர்ந்த அசோக்குமார்(42) என்பவர், கடந்த 2017ஆம் ஆண்டு தனது மாமியார் கௌசல்யா என்பவரை கொலை முயற்சி செய்ததாக, சேலையூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு, செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்த நிலையில், இன்று வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளி அசோக்குமாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.3,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
வார விடுமுறை, முகூர்த்த தினம் மற்றும் மிலாடி நபி ஆகிய தொடர் விடுமுறைகள் வர உள்ளதால், சென்னையில் இருந்து லட்சக் கணக்கான மக்கள் தென் மாவட்டங்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர். இதனால், செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் ஒரு கிலோ மீட்டர் வரை வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நிற்கின்றன. இதனால், வாகனங்கள் ஊர்ந்துகொண்டே சென்றன.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில், மணல் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. அதில், மணல் குவாரியை திறக்க வலியுறுத்தி வரும் 20ஆம் தேதி கோட்டையை நோக்கி 5,000 லாரிகளுடன் பேரணி மற்றும் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஒருங்கிணைந்த மணல் மற்றும் சவுடு லாரி உரிமையாளர் சங்கங்கள் தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் பகுதியில், இன்று திமுக பொது உறுப்பினர்கள் சேர்க்கை கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில, ஆத்தூர் ஊராட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அதிமுகவில் இருந்து விலகி தங்களை திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து, உறுப்பினர் அடையாள அட்டைகள் வழங்கி வரவேற்கப்பட்டனர்.
Sorry, no posts matched your criteria.