Chengalpattu

News January 23, 2026

பிரதமருடன் ஒரே மேடையில் பேச ஏற்பாடு

image

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று மாலை 3 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். மேலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளான அதிமுக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பிரதமருடன் ஒரே மேடையில் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் 5 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 23, 2026

செங்கை: கல்யாண சான்றிதழ் வேண்டுமா..? CLICK NOW

image

செங்கல்பட்டு மக்களே..,, ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். இங்கு <>க்ளிக் <<>>செய்து ஆதார் கார்டு, VOTER ID,பத்தாம் வகுப்பு சான்றிதழ், திருமண அழைப்பிதழ் மற்றும் போட்டோவுடன் உங்க Phone-யிலேயெ விண்ணப்பிக்கலாம்.. (பழைய திருமணங்களும் இங்கு பதிவு செய்யலாம்) 7 நாட்களுக்குள் சான்றிதழ் கிடைத்து விடும்..(SHARE IT)

News January 23, 2026

செங்கை: சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

image

தாம்பரம் சேலையூரில் பரோட்டா கடை நடத்தி வந்த நிவேந்திரன் (28), கடந்த 2020-ம் ஆண்டு 13 வயது சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கினார். இதுகுறித்த புகாரில் செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி எழிலரசி உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தற்போது 6 வயதில் ஒரு மகன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

News January 23, 2026

தாம்பரத்தில் பரபரப்பு!

image

தாம்பரம் அற்புதம் நகரில் சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி மணிகண்டன் வீட்டின் மீது 3 பேர் கொண்ட கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனர். இதில் ஒரு குண்டு வெடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக சச்சின், வினோத் மற்றும் ஒரு சிறுவனை போலீசார் கைது செய்தனர். தன்னை கிண்டல் செய்த மணிகண்டனை பயமுறுத்தவே வெடிகுண்டு வீசியதாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

News January 23, 2026

மதுராந்தகம்: ஆட்சியர் புதிய அறிவிப்பு!

image

மதுராந்தகம் தனியார் ஓட்டல் எதிரே பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் கலந்து கொள்ள உள்ளதால் இன்று 23.1.26 காலை 7:00 மணி முதல் மாலை 7 மணி வரை GST சாலை வழியாக செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் போக்குவரத்து வாகனங்கள் மாற்று பாதையில் செல்ல அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மற்றும் அவசரக்கால ஊர்திகள் வழக்கம்போல் அதே பாதையில் செல்லலாம் என மாவட்ட ஆட்சியர் சினேகா தெரிவித்துள்ளார்.

News January 23, 2026

மதுராந்தகம் வரும் பிரதமர்

image

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) பிரசாரத்தைத் தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று மதுராந்தகத்திற்கு வர உள்ளார். இந்த நிகழ்வில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், அன்புமணி உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர். சுமார் 5 லட்சம் பேர் வரை பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

News January 23, 2026

செங்கல்பட்டில் இன்று இரவு ரோந்து செல்லும் காவலர் விவரம்

image

செங்கல்பட்டில் இன்று ஜன (22 ) இரவு 10 மணி முதல் காலை 6 வரை ரோந்து பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் பொதுமக்கள் அவசர காரணத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசியின் வாயிலாக அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் இதில் வழங்கப்பட்டுள்ளது

News January 22, 2026

பிரதமரின் பயண திட்ட விவரங்கள்

image

பிற்பகல் 2:15 திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து விமானப்படை விமானத்தில் புறப்பட்டு சென்னை விமான நிலையம் வருகிறார். பிற்பகல் 2:50 ஹெலிகாப்டரில் புறப்பட்டு மதுராந்தகம் எலி பேடில் தரையிறங்க உள்ளார். பிற்பகல் 3 மதுராந்தகம் கூட்டத்தில் பங்கேற்கிறார் 4:15 வரை கூட்டம் நடைபெறும். பிற்பகல் 4:20 புதுக்கோட்டை இடத்திலிருந்து சாலை வழியாக எலி பேட் இடத்திற்குச் சென்று சென்னை புறப்படுகிறார்.

News January 22, 2026

தாம்பரம்: பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை…

image

தாம்பரம் அருகே அரசு பேருந்தில் பயணித்த 17 வயது கல்லூரி மாணவிக்கு பாலியல் கொடுத்த சென்னை ஜாஃபர்கான் பேட்டையை சேர்ந்த கீர்த்திவாசன் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்லூரி மாணவி கத்தி கூச்சலிட்டதால் சக பயணிகள் இளைஞரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து கீர்த்திவாசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி செய்தனர்.

News January 22, 2026

செங்கல்பட்டில் வேலைவாய்ப்பு முகாம்.. மிஸ் பண்ணிடாதீங்க

image

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு/தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை ஜன. 23 காலை 9.00 முதல் மதியம் 3.00 மணி வரை நடைபெற உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் 8th முதல் பட்டப்படிப்பு மற்றும் பி.இ / ஐடிஐ / டிப்ளமோ / பாராமெடிக்கல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு இந்த 9499055895 எண்ணில் அழைக்கலாம்

error: Content is protected !!