India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

செங்கல்பட்டு நேற்று (ஜனவரி-23) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு நேற்று (ஜனவரி-23) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

பெரும்பாக்கம் அருகேயுள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய பகுதியில் உள்ள பூங்காவில் நேற்று இரவு தலை நசுங்கிய நிலையில் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலையான நபர் எழில் நகரைச் சேர்ந்த பிரபல ரவுடி கார்த்திகேயன் என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

செங்கல்பட்டு மக்களே, பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம். 1) ஆதார் : https://uidai.gov.in, 2) வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in. 3) தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in 4) செங்கல்பட்டு மாவட்ட அறிவிப்புகளை அறிய: https://chengalpattu.nic.in/ta/ இந்த தகவல்களை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

மதுராந்தகத்தில் நடைபெறும் NDA பொதுக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தற்போது பேசி வருகிறார். அதில் பேசிய அவர், “தமிழகத்தில் 6 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாகவும், 2021 தேர்தல் வாக்குறுதிகளில் 505-இல் வெறும் 66 வாக்குறுதிகளைதான் நிறைவேற்றியுள்ளனர்” எனவும் தெரிவித்தார். மேலும், திமுக ஆட்சியின் முடிவுக்கு இது ஒரு தொடக்கம் எனவும், இது ஒரு பூஜ்ஜிய ஆட்சி எனவும் தெரிவித்தார்.

மதுராந்தகத்தில் நடைபெறும் NDA பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள பிரதமர் மோடி வருகை புரிந்துள்ளார். இதில் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “ஆட்சி மாற்றம் நடப்பது உறுதி எனவும், இதற்காக வேலைகளை பிரதமர் மோடியும், இபிஎஸ்-ஸும் பார்த்து கொண்டிருக்கிறார்கள்” என தெரிவித்தார். மோடி ஆட்சியில் 11 மருத்துவ கல்லூரிகள் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இன்று (ஜன.23) தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேச உள்ளார். இதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த மோடி, ஹெலிகாப்டர் மூலம் தற்போது மதுராந்தகம் வந்தடைந்தார். இதில் 5 லட்சம் தொண்டர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (ஜன.23) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், அண்டை மாவட்டங்களுக்கான சென்னை , காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே வெளியே செல்லும் மக்கள் முன்னெச்சரிக்கையாக குடை, ரெயின் கோர்ட் ஆகியவற்றை எடுத்து செல்லவும். ஷேர் பண்ணுங்க.

செங்கல்பட்டு மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? இங்கு <

சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் www.msmeonline.tn.gov<
Sorry, no posts matched your criteria.