Chengalpattu

News January 25, 2026

வேளச்சேரி – பரங்கிமலை ரயில் சேவை அடுத்த மாதம் துவக்கம்

image

பல ஆண்டுகளாகக் கிடப்பில் இருந்த வேளச்சேரி – பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் சேவை திட்டம், தற்போது நிறைவுப் பகுதியை எட்டியுள்ளது. இந்த நிலையில், இந்த ரயில் சேவை அடுத்த மாதம் முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொங்கலுக்கு பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில், சில நிர்வாகக் காரணங்களால் இவ்வழி தடத்தில் ரயில் சேவை தாமதமானது.

News January 24, 2026

செங்கல்பட்டு: மாட்டுப் பண்ணை அமைக்க ரூ.50 லட்சம் மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <>இங்கு கிளிக் <<>>செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News January 24, 2026

செங்கை: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

சென்னை மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது <>pmjay.gov.in <<>>இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 3) விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 24, 2026

செங்கல்பட்டு: உங்கள் வீட்டில் சிலிண்டர் உள்ளதா?

image

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்

News January 24, 2026

செங்கல்பட்டு பைக் வாங்க ரூ.50,000 மானியம்! DONT MISS

image

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் இந்த <>லிங்கில் <<>>சென்று விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

News January 24, 2026

செங்கல்பட்டு: உங்கள் Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

image

செங்கல்பட்டு மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <>கிளிக் <<>>செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

News January 24, 2026

செங்கல்பட்டு: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

image

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News January 24, 2026

செங்கல்பட்டிற்கு வந்தது அலெர்ட்!

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (ஜன.24) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், செங்கல்பட்டிற்கு மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அண்டை மாவட்டங்களுக்கான சென்னை, திருவள்ளூர், காஞ்சி ஆகிய மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே வெளியே செல்லும் மக்கள் முன்னெச்சரிக்கையாக குடை, ரெயின் கோர்ட் ஆகியவற்றை எடுத்து செல்லுங்கள். ஷேர் பண்ணுங்க.

News January 24, 2026

செங்கல்பட்டில் மழை

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் இன்று அதிகாலை முதல் செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு மறைமலைநகர், மகேந்திரா வேல்டு சிட்டி, சிங்கப்பெருமாள் கோவில் ஆகிய இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுறது. உங்க ஏரியால மழையா? கமெண்ட்ல சொல்லுங்க.

News January 24, 2026

செங்கல்பட்டில் தலையில் கல்லைப்போட்டு கொலை

image

பெரும்பாக்கம், எழில்நகர் எஸ்.பிளாக்கை சேர்ந்த கார்த்திக் (25) பூங்காவில் பிணமாக கிடந்துள்ளார். போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்ததில், குமார்(27), விஜயகுமார்(28), சரத் என்ற சரத்குமார்(35), சரண்ராஜ்(29), மற்றொரு கார்த்திக்(26) ஆகியோர் பார்க்கில் குடிபோதையில் சண்டையிட்டு தலையில் கல்லைத்தூக்கி போட்டு கொலை செய்தது கொலை செய்தது தெரியவந்தது. மது அருந்த பணம் கொடுக்காததால் இந்த கொடூரம் அரங்கேற்றியுள்ளது.

error: Content is protected !!