Chengalpattu

News September 18, 2024

காஞ்சி கோயிலில் சுற்றிய சிறுவன் பத்திரமாக மீட்பு

image

செங்கல்பட்டு மாவட்டம் ஒரத்தியைச் சேர்ந்த 5ஆம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுவன், வீட்டில் கோபித்துக் கொண்டு காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் சுற்றித் திரிந்துள்ளான். சிறுவன் தனியாக இருப்பதை கண்ட பக்தர்கள், அவனிடம் விசாரித்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காஞ்சிபுரம் போலீசார், ஒரத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்து, சிறுவனை அவனது தாயை வரவழைத்து நேற்று ஒப்படைத்தனர்.

News September 18, 2024

செங்கல்பட்டு மாவட்டத்தில் அரிய வகை பறவை

image

பெரும்பாக்கம் முதல் வேளச்சேரி வரை உள்ள சதுப்பு நிலத்தில் ‘தி நேச்சர் டிரஸ்ட்’ எடுத்த பறவைகள் கணக்கெடுப்பின்படி இதுவரை 199 வகை வெளிநாட்டு பறவைகளின் வருகை ஆவணப்படுத்தப்பட்டு உள்ளன. இதில், 200வது பறவையாக கல்திருப்பி உள்ளான் பறவை பதிவாகியுள்ளது. வட அலாஸ்காவில் இருந்து வரும் இந்த அரிய வகை பறவை, முட்டுக்காடு, பழவேற்காடு பகுதியை அடுத்து தற்போது பெரும்பாக்கம் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் காணப்படுகிறது.

News September 18, 2024

பணி செய்ய விடாமல் தடுத்த பெண் மீது வழக்கு

image

செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், செய்தி மக்கள் தொடர்பு பிரிவில் பணிபுரிந்து வருபவர் சரஸ்வதி (37). கடந்த 10ஆம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறை தீர்க்கும் முகாமில் பங்கேற்றபோது, கூட்டத்தில் பங்கேற்ற அலமேலு என்ற பெண் சரஸ்வதியை பணி செய்யவிடாமல் தடுத்து, பிரச்னை செய்துள்ளார். இதுகுறித்து சரஸ்வதி அளித்த புகாரின்பேரில் போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 18, 2024

செங்கல்பட்டில் அக்.2ஆம் தேதி தசரா பண்டிகை தொடக்கம்

image

செங்கல்பட்டு நகரில் 135 ஆண்டுகளுக்கு மேலாக தசரா பண்டிகை நடைபெற்று வருகிறது. இந்தப் பண்டிகையானது, செங்கல்பட்டு பகுதி மக்களின் அடையாளமாக உள்ளது. இந்தாண்டுக்கான தசரா பண்டிகை வரும் அக்டோபர் 2ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் வரை நடைபெற உள்ளது. இந்த தசரா பண்டிகையை முன்னிட்டு, ராட்டினங்கள் பொழுதுபோக்கு உபகரணங்கள் செங்கல்பட்டு நகருக்கு லாரிகள் மூலம் நேற்று கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News September 18, 2024

சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 13 பேர் வீடுகளில் சோதனை

image

பெரும்பாக்கம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வசிக்கும் சரித்திர குற்றப்பதிவேடு குற்றவாளிகள் 13 பேர் வீடுகளில், சுமார் 300க்கும் மேற்பட்ட போலீசார் இன்று சோதனை செய்தனர். இதில், சுந்தர் என்ற சுந்தர்ராஜ் மற்றும் திலீப் குமார் ஆகியோர் வீட்டில் இருந்து 2 அடி நீளமுள்ள கத்தியும், சல்மான் ஷேக் என்பவர் வீட்டில் இருந்து 100 கிராம் கஞ்சா பொட்டலங்களும் கைப்பற்றப்பட்டன.

News September 18, 2024

10ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை

image

சோழிங்கநல்லுார் குமரன் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்ததவர் ராஜேஷ்(36). இவருக்கு தாய் தந்தை இல்லாததால், நண்பர்கள் குமரன் நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பணிக்கு சேர்த்தனர். இன்று மதியம் நண்பர் ஒருவருக்கு போனில் தொடர்பு கொண்டு தற்கொலை செய்யபோவதாகக் கூறி, பின் 10ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து செம்மஞ்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.

News September 17, 2024

பெரும்பாக்கம் பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை

image

பெரும்பாக்கம் அடுத்த தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதிகளில், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. அதன் பேரில், இன்று அதிகாலை சுமார் 300க்கும் மேற்பட்ட போலீசார் 1,500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, 10க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்து கஞ்சா, குட்கா மற்றும் கத்தி போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

News September 17, 2024

வருவாய் கோட்டாட்சியர் அளவில் விவசாயிகள் கூட்டம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல்முறையாக வருவாய் கோட்டா அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெற உள்ளது. செங்கல்பட்டில் சார் ஆட்சியர் தலைமையிலும், மதுராந்தகத்தில் கோட்டாட்சியர் தலைமையிலும் வரும் 19ஆம் தேதி காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில், பங்கேற்று தங்கள் விவசாயம் சார்ந்த பிரச்னைகளை மனுவாக அளிக்கலாம். விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க.

News September 17, 2024

வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தறுத்து கொலை

image

கல்பாக்கம் அடுத்த பொம்மராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கன்னியம்மாள்(70). தனது வீட்டில் இட்லி கடை நடத்தி வரும் இவரை, நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து கழுத்து அறுத்து கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக சதுரங்கப்பட்டினம் போலீசார் 3 தனிப்படைகளை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

News September 17, 2024

செங்கல்பட்டில் 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்

image

தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக இன்று (செப்டம்பர் 17) செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், 100க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு, ராகுல்காந்தி அமெரிக்கா பயணம் குறித்து இழிவாக பேசிய பாஜக எச்.ராஜாவை கண்டித்து முழக்கமிட்டனர்.

error: Content is protected !!