India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்போரூர் தாலுகா அலுவலகத்தில், ஆதார் ஈ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆதார் மையத்திற்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் தங்களது ஆதாரை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க ஆதார் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் 100க்கும் மேற்பட்டோர் ஒரே சமயத்தில் வருவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே, கூடுதல் கவுன்டர்களை திறக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
வார விடுமுறை நாட்களை முன்னிட்டு, சென்னையிலிருந்து இதர இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து (வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில்) தலா 260 பேருந்துகளும், கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி ஆகிய இடங்களுக்கு தலா 65 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து தலா 20 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க.
முடிச்சூரைச் சேர்ந்த அரிகிருஷ்ணன்(49), வேளச்சேரி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். நேற்றிரவு பணிக்கு செல்வதற்கு முன் வீட்டில் போதையில் இருந்ததால், மனைவி திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த அவர், படுக்கையறைக்கு சென்று கதவை பூட்டியுள்ளார். இன்று காலை வெகு நேரம் ஆகியும் வெளியே வராததால், கதவை உடைத்தபோது அரிகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.
செங்கல்பட்டு உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு அடுத்த 2 மணி நேரத்திற்கு (இரவு 10 மணி வரை) லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக மாவட்டத்தின் ஒருசில இடங்களில் மழை பெய்யும், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வெளியில் செல்வோர் குடை எடுத்துக் கொண்டு செல்லுங்கள். மழை பெய்யுமா?
வார விடுமுறை நாட்களை முன்னிட்டு, சென்னையிலிருந்து இதர இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து (வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில்) தலா 260 பேருந்துகளும், கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி ஆகிய இடங்களுக்கு தலா 65 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து தலா 20 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க.
செங்கல்பட்டு புறவழிச்சாலை பழவேலி திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், மதுரையில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பேருந்து சாலையை கடக்க முயன்ற லாரி மீது இன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், காயமடைந்த நடத்துநர், பயணிகள் என மொத்தம் 11 பேர் படுகாயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்து, படுகாயமடைந்தவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தமிழ்நாடு முழுவதும் நேற்று தந்தை பெரியார் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில், நேற்று சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, விசிக தலைவர் திருமாவளவனுடன் சென்று மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில், செய்யூர் எம்எல்ஏ, பனையூர் பாபு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
செங்கல்பட்டு உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு (இரவு 7 மணி வரை) லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் 24ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. சாலைகள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கும் என்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழை பெய்யுமா?
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தா.மோ.அன்பரசன் (அமைச்சர்), “வருகிற 28ஆம் தேதி காஞ்சிபுரத்தில் திமுக பவளவிழா பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. இதற்கான மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் வருகிற 20ஆம் தேதி பரங்கிமலை ஜோதி தியேட்டர் அருகில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் அனைத்து மாநகர, பகுதி, வட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டுமென அறிக்கை வெளியிட்டுள்ளார்.
செங்கல்பட்டு பகுதியில் உள்ள வீட்டு வசதி சங்கங்களுக்கு சொந்தமான இடத்தில் வணிக வளாகம் கட்ட, அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முதற்கட்டமாக, இதற்கான திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பெரிய அளவில் உள்ள காலி நிலங்களை மனைகளாக பிரித்து விற்பது, சிறிய அளவிலான நிலங்களை வணிக ரீதியாக மேம்படுத்த, சங்கங்கள் முடிவு செய்தன.
Sorry, no posts matched your criteria.