India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நன்மங்கலம் பாண்டியன் நகரில் வசித்து வரும் ரமேஷ் அகமது (28) என்பவரது வீட்டில், என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல், சித்தாலப்பாக்கம் வள்ளுவர் நகரில் வசிக்கும் முகமது யாசின் என்பவர் உலக நாடுகளில் தடை செய்யப்பட்ட HIZB UT – TAHIR என்ற அமைப்புக்கு ஆட்கள் சேர்ப்பு மற்றும் அந்த அமைப்புக்கு உறுதுணையாக இயங்குவதாக யாசின் என்பவர் வீட்டில் அதிரடி சோதனை செய்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை, செங்கல்பட்டு – காஞ்சிபுரம் சாலை உள்ளிட்ட முக்கிய நெடுஞ்சாலைகள் உள்ளன. நெடுஞ்சாலைகளின் பல்வேறு இடங்களில் விளக்குகள் இல்லாமலும், அமைக்கப்பட்ட விளக்குகள் போதிய பராமரிப்பு இன்றி பழுதடைந்தும் உள்ளன. இதன் காரணமாக, இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் சுயசேவை இயந்திரம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று தொடங்கி வைத்தார். இதன் மூலம் பயணிகள் எந்த நேரத்திலும் தாங்கள் செல்ல விரும்பும் இடங்களுக்கு 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து கொள்ளலாம். மின்னணு முறையில் கியூ.ஆர் குறியீட்டை பயன்படுத்தி டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
மறைமலைநகரில் இயங்கி வந்த ஃபோர்டு கார் கம்பெனி, தனது உற்பத்தியை நிறுத்தியது. மீண்டும் கார் உற்பத்தியை தொடங்க தமிழ்நாடு அரசிடம் அனுமதி கோரி இருந்தது. இந்த நிலையில், விண்ணப்பத்தை பரிசீலனை செய்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், நிறுவனம் செயல்பட இசைவாணை வழங்கி 2028ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை உரிமத்தை புதுப்பித்து உத்தரவு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?
செங்கல்பட்டு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், இலவச சட்ட உதவி வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட உள்ளனர். காலியாக உள்ள 10 பணியிடங்கள் குறித்த அனைத்து விரிவான விபரங்கள், விண்ணப்பம் மற்றும் இதர தகவல்களை chengalpattu.dcourts.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 30ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க.
சிறப்பு திட்ட அமலாக்கத்துறை அறிவிக்கும் திட்டங்களை செயல்படுத்தவும், கண்காணிக்கவும் மாவட்ட வாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத் துறை இயக்குநர் ஏ.ஆர். ராகுல் நாத் ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஏற்கனவே மாவட்ட ஆட்சியராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு வாழ்த்துக்கள்.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணு மின் நிலையத்தில், 198 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதில், எலக்ட்ரீசியன், டெக்னீசியன், மெஷினிஸ்ட், கார்பெண்டர், பிளம்பர், பிட்டர், டர்னர், வெல்டர் உள்ளிட்ட பல பணியிடங்களுக்கு ஐடிஐ படித்த 18 – 24 வயது உடைய இளைஞர்கள் வரும் அக்.13ஆம் தேதிக்குள் <
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்து, தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பரசன் தலைமையில் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த ஆலோசனையில், உயர் அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர். இதில், குடிநீர் பிரச்னைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
ரூ.10,000 பணத்திற்காக நண்பனை அடித்து கொலை செய்து காட்டுக்குள் புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தையூர் கோமா நகர் பகுதியைச் சேர்ந்த அப்துல் மசித் என்பவரை காணவில்லை என போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், குற்றப்பின்னணி கொண்ட நபர்களை விசாரிக்கும்போது, அவர்கள் அப்துல் மஸீதை கொன்று புதைத்தாக வாக்குமூலம் அளித்தனர். கொலையில் தொடர்புடைய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக செய்தி வெளியாகி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை கண்டித்து, செங்கல்பட்டு மாவட்ட இந்து முன்னணி செயலாளர் ஏழுமலை, வருகிற 28ஆம் தேதி புரட்டாசி 2வது சனிக்கிழமை மாவட்டம் முழுவதும் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் சூரைத்தேங்காய் உடைத்து போராட்டம் நடத்த பக்தர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.