Chengalpattu

News April 7, 2024

உங்கள் தொகுதி வேட்பாளர் பற்றி தெரிந்து கொண்டு வாக்களிக்கவும்

image

உங்கள் தொகுதியில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர் முதல் சுயேட்சை வேட்பாளர்கள் வரை அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள், குற்றவழக்குகள், சொத்துமதிப்பு, கல்வித்தகுதி,வழங்கப்பட்ட குற்றத்தண்டனை போன்ற முழுதகவல்களையும் தெரிந்து கொள்ள <>https://affidavit.eci.gov.in/ <<>>என்ற தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து தெரிந்துகொள்ளலாம். அல்லது ப்ளே ஸ்டோரில் KYC என்ற செயலி மூலமும் தெரிந்து கொள்ளலாம்.

News April 7, 2024

பாஜக ஸ்தாபக தினம் கொண்டாட்டம்

image

பாரதிய ஜனதா கட்சியின் 44 ஆவது ஸ்தாபக தினம் நந்திவரம் கூடுவாஞ்சேரி பகுதியில் செங்கல்பட்டு மாவட்ட பாஜக மகளிர் அணி சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் அலங்கரிக்கப்பட்ட பாரதமாதா படத்திற்கு புஷ்பாஞ்சலி செய்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கப்பட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் கட்சி கொடி ஏற்றப்படவில்லை. இதில் மகளிர் அணியினர் பலர் கலந்து கொண்டனர்.

News April 6, 2024

பதற்றமான சாவடி எண்ணிக்கை வெளியீடு

image

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 371 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், 0 வாக்குச்சாவடி மிகவும் பதற்றமானது என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

News April 6, 2024

இன்று முதல் கோடை விடுமுறை

image

செங்கல்பட்டில் 1 முதல் 3 ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு இன்று முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.4 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் ஏப்.8,10,12 இல் பள்ளிக்கு வந்து தேர்வுக்கு தயாராக வேண்டும். தேர்தல் பணி காரணமாக ஏப்.15 முதல் ஏப்.21 வரை விடுமுறையும் அதன் பின் ஏப்.22,23 இல் அறிவியல், சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெறும். அதன் பின் ஏப்.24 முதல் கோடை விடுமுறை விடப்படும் என பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.

News April 6, 2024

மாமல்லையில் புதிதாக அலங்கரிக்கும் சுதை சிற்பங்கள்

image

தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் பூம்புகார் நிறுவன கைவினைப் பொருட்கள் விற்பனையகம் மற்றும் ‘அர்பன் ஹட்’ எனப்படும் நகர்ப்புற சந்தைத்திடல் வளாகம் மாமல்லபுரத்தில் உள்ளது.வாயிலில் பயணியரை வரவேற்கும் கரக நாட்டியக் கலைஞர்கள், வளாகத்தில் இளைஞர்கள் காளையை அடக்கும் ஜல்லிக்கட்டு, ஏரில் பூட்டப்பட்ட மாடுகள், மாட்டு வண்டி, மான்கள், கொக்குகள் ஆகிய சுதை சிற்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

News April 5, 2024

செங்கல்பட்டு அருகே 4 பேர் கைது

image

மாமல்லபுரம் அடுத்த வடநெம்மேலி பகுதி தனியார் விடுதியில் வேலை செய்து வரும் கமல் குமார், நவ்நீத் மற்றும் சிலர் கடந்த மார்ச் 31ஆம் தேதி பணி முடிந்து அப்பகுதி சாலையில் நடந்து சென்றுள்ளனர். அப்போது 2 டூவீலர்களில் வந்த 4 பேர், நவ்நீத்தின் செல்போனை பறித்து சென்றனர். இதையடுத்து புகாரின் பேரில் மாமல்லபுரம் போலீசார் ஏற்கனவே கேளம்பாக்கம் மணிகண்டனை (27) கைது செய்த நிலையில், நேற்று 3 சிறுவர்களை கைது செய்தனர்.

News April 5, 2024

ஏப்.15 முதல் மீன்பிடி தடை காலம்

image

கடலில் மீன்வளத்தை பெருக்க ஆண்டுதோறும் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. மீன்களின் இனப்பெருக்க காலத்தை ஒட்டி ஏப்.15 நள்ளிரவு முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை என 61 நாட்களுக்கு மீன் பிடிக்க மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கால கட்டத்தில் மீன்களின் இனப்பெருக்கத்திற்கு உதவுவதாக  புதுப்பட்டினம், வாயலுார், உய்யாலிகுப்பம், கடலுார் உள்ளிட்ட அப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.

News April 5, 2024

டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை

image

தமிழகத்தில் நாடளுமன்ற தேர்தல் ஏப்.19 இல் நடைபெற உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் வாக்குபதிவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் ஏப்.17 முதல் ஏப்.19 ஆம் தேதி வரை மூடப்படுகிறது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜீன்.4 ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News April 4, 2024

பள்ளி பேருந்தில் பாலியல் தொல்லை: வழிகாட்டு நெறிமுறை

image

தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில், பள்ளியில் ‘மாணவர் மனசு’ பெட்டி வைக்கப்பட்டு அதில் பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு போக்சோ சட்டம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portalஇல் பதிவேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

News April 4, 2024

செங்கல்பட்டு: தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் கலெக்டர் ஆய்வு

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட லோக்சபா மற்றும் ஸ்ரீபெரும்புதூர் லோக்சபா தொகுதி தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஊடக கண்காணிப்பு மையம் உள்ளது. இங்கு 24 மணிநேரமும் தேர்தல் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு நேற்று கலெக்டர் அருண்ராஜ், தேர்தல் பொது பார்வையாளர் அபிஷேக் சந்திரா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.