India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வார இறுதிநாள் மற்றும் பள்ளி காலாண்டு விடுமுறையை முன்னிட்டு, கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், குமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ஊர்களுக்கு தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை திட்டமிடப்பட்டுள்ளது. நாளை 395 பேருந்துகளும், 28ஆம் தேதி 345 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன
தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தில், புதிய மக்கள் தொடர்பு அலுவலராக உதவி ஆணையர் எஸ்.ஜான் விக்டர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு உயர் அதிகாரிகள், அரசு அலுவலர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் காவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதற்கு முன், இவர் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை காவல் சரக துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு வாழ்த்துக்கள்.
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் மாடம்பாக்கம் பகுதி கழகம் சார்பில் இன்று மாலை 4:00 மணியளவில், மாடம்பாக்கம் பிரதான சாலை அண்ணா நகரில் தாம்பரம் மாநகராட்சியை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் அனைவரும், பெருந்திரளாக கலந்துக்கொண்டு சிறப்பிக்குமாறு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
செங்கல்பட்டு அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் முன்பு நேற்று தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சான்றிதழ் தாரர்களுக்கு எம்.எஸ்.டி.இ. பரிந்துரைப்படி முதல்வர் பதவி உயர்வு வழங்க வேண்டும். பயிற்சியாளர்களுக்கு சி.பி.டி.தேர்வு ரத்து செய்ய வேண்டும். தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பயிற்றுனர்கள் மற்றும் உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் விதமாக துலாபாரத்தில் தங்களின் எடைக்கு எடையாக தாங்கள் விரும்பியதை வழங்குகின்றனர். இவ்வாறு வழங்கப்படும் காணிக்கை துலாபாரம் உண்டியலில் போடப்படும். இந்நிலையில் நேற்று துலாபார உண்டியல் எண்ணப்பட்டது. இதில் காணிக்கை தொகையாக ரூ.5,63,240 வருவாய் கிடைத்தது. இதில், ரூபாய் நோட்டுகள் 1,31,357 : நாணயம் – 4,31,865 இருந்தது.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ரூ.1,27,39,545 மதிப்பீட்டில் 33 பயனாளிகளுக்கு, ஆட்சியர் அருண்ராஜ், இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். இந்நிகழ்வில், சார் ஆட்சியர் நாராயண சர்மா, திருப்போரூர் வட்டாட்சியர் வெங்கட்ராமன் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
பல்லாவரம் மற்றும் சோழிங்கநல்லூர் கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை (வியாழக்கிழமை) காலை 11.00 மணியளவில், பல்லாவரம் ஆபிசர்ஸ் லேனில் உள்ள செயற் பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கரணை, நாராயணபுரம் ஏரியில் 40 வயது ஆண் சடலம் மிதப்பதாக போலீஸாருக்கு இன்று தகவல் வந்தது. இதையடுத்து பள்ளிக்கரணை போலீசார் சம்பவ இடம் சென்று, தீயணைப்பு துறை உதவியுடன் உடலை மீட்டனர். இறந்த நபரின் சட்டை பையில், தி.நகரிலிருந்து பேருந்து வாயிலாக பள்ளிக்கரணை வந்ததற்கான பயணச் சீட்டு இருந்தது. இதைத்தவிர, அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜூக்கு இன்று பிறந்தநாளையொட்டி முன்னிட்டு செங்கல்பட்டு சார் ஆட்சியர் வெ.நாராயண சர்மா நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார். இதேபோல் அமைச்சர் அன்பரசன், எம்.பி. எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள், ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
சூணாம்பேடு, மாமண்டூர், ஊரப்பாக்கம், பாலூர், புதுப்பாக்கம், நென்மேலி உள்ளிட்ட பெரும்பாலான ஊராட்சி நிர்வாகத்தினர், சுத்தம் செய்யாமல் குடிநீர் வினியோகம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், பொதுமக்களுக்கு குளோரினேட் செய்யப்பட்ட பாதுகாப்பான மற்றும் சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என அனைத்து ஊராட்சி நிர்வாகத்திற்கும் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.